For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வானிலிருந்து வந்து விழுந்த "வெளிச்சப் பந்து".. பாங்காக்கில் பரபரப்பு

Google Oneindia Tamil News

பாங்காக்: தாய்லாந்தில் பகல் நேரத்தில் வானில் இருந்து அதிக வெளிச்சத்துடன் பந்து போன்ற ஒன்று கீழே விழுந்த காட்சி கண்காணிப்புக் கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள கண்காணிப்பு கேமரா ஒன்றில், வானில் இருந்து பந்து போன்ற வடிவில் அதிக சத்தத்துடன் வெளிச்சமாகவும் ஒரு பொருள் கீழே விழுவது பதிவானது. பகல் நேரத்தில் நிகழ்ந்த இந்தக் காட்சியை பலர் சாலையில் நின்றபடி செல்போனிலும், கேமராவிலும் புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்தனர்.

Bright Flash fills Thailand sky in day time

மர்மமான முறையில் தோன்றிய இந்த ஒளியால் அந்நாட்டு மக்களிடையே பீதி ஏற்பட்டது. இது ஏதோ அழிவிற்கான அறிகுறி என மக்கள் மத்தியில் பேச்சு எழுந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மக்களின் இந்த அச்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தாய்லாந்து விண்வெளி சங்கம், வானில் இருந்து விண்கல் எரிந்து விழுந்ததாக' அறிவித்தது. இது இயற்கையாக நடைபெறக் கூடிய நிகழ்வு தான் என்றும், தினமும் பூமி மீது விண்கற்கள் எரிந்து விழுகின்றன என்றும் அது தெரிவித்தது.

விண்வெளி சங்கத்தின் இந்த விளக்கத்தைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் நிலவிய பீதி முடிவுக்கு வந்தது.

2 ஆண்டுகளுக்கு முன்பு ரஷியாவின் செல்யாபின்ஸ் நகரில் ஒரு விண்கல் எரிந்து விழுந்தது. 2013-ம் ஆண்டு ரஷியாவில் 10 ஆயிரம் டன் எடையுள்ள ராட்சத விண்கல் விழுந்ததால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

ஆனால் தற்போது தாய்லாந்தில் விழுந்த விண்கல்லினால் ஏற்பட்ட சேதம் குறித்து விவரம் வெளியாகவில்லை.

English summary
Footage from one Bangkok dashboard car camera captured a fireball followed by a brilliant white flash, that was also seen across the country. In a country imbued with superstition, many took the light as an ill omen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X