For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆஸ்திரேலியாவில் ராணுவத்தில் இளவரசர் ஹாரி… உற்சாக வரவேற்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சிட்னி: ராணுவத்தில் இருந்து விரைவில் ஓய்வு பெறப்போகும் பிரிட்டன் இளவரசர் ஹாரி ஆஸ்திரேலியா ராணுவத்தில் இணைந்துள்ளார். அவருக்கு ஆஸ்திரேலியாவாசிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

தனக்கு கொடுக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி பொதுமக்களுடன் கைகுலுக்கியும், புகைப்படம் எடுத்தும் உற்சாகமாக உரையாடினார் ஹாரி.

இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகனான இளவரசர் ஹாரி (30), முடி சூட்டும் பட்டத்து இளவரசர் பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு மே மாதம் ராணுவத்தில் பயிற்சி பெறுபவராக சேர்ந்த இவர் கடந்த ஆண்டு அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.

Britain's Prince Harry in Australia for army stint

அப்பாச்சே ரக போர் ஹெலி காப்டர் விமானியான இவர், அல்-காய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் முகாமிட் டிருந்த அமெரிக்கா தலைமை யிலான நேட்டோ படையில் 2 முறை பங்கேற்றிருக்கிறார்.

இதனிடையே பிரிட்டன் ராணுவத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அந்நாட்டு இளவரசர் ஹாரி, வரும் ஜூன் மாதம் ராணுவத்திலிருந்து விலகி புதிய வாழ்க்கையை தொடங்கப் போவதாக சமீபத்தில் அறிவித்தார்.

ராணுவத்திலிருந்து விலகுவதற்கு முன்னதாக, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ராணுவத் துடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் கூறினார்.

இளவரசர் ஹாரி சொன்னதுபடியே, ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் திங்கட்கிழமையன்று ராணுவத்தில் பணியாற்ற இணைந்தார் ஹாலி. அவருக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வரவேற்பு கொடுத்து தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

இதனை ஆஸ்திரேலியா வானொலியில் பேசிய ஆஸ்திரேலியாவின் ஏர் சீப் மார்சல் மார்க் பின்ஸ்கின் உறுதி செய்தார். இளவரசர் ஹாரி 4 வாரங்கள் இங்கு பணியாற்ற உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் போர் நினைவுச்சின்னத்திற்கும் சென்று ஹாரி அஞ்சலி செலுத்தினார். ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திய அவர், முதலாம் உலகப்போரில் உயிர்நீத்த வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்தார்.

இளவரசர் ஹாரியைக் கண்ட ஆஸ்திரேலியா மக்கள் ஹாரி... ஹாரி என்று உற்சாகக் குரல் எழுப்பினர். அவர்களின் வரவேற்பினை ஹாரி மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி அவர்களுடன் கைகுலுக்கிய ஹாரி, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

இளவரசி டயனாவின் மகன் என்பதை செல்லும் இடங்களில் எல்லாம் நிரூபித்து வருகிறார் ஹாரி என்பதை இந்த சம்பவமே உணர்த்துவதாக இருந்தது.

English summary
Prince Harry reported for duty in Canberra on Monday for a month with the Australian Army during which he will take part in bush patrols and possibly fly helicopters, as he prepares to retire from the British military.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X