கலிஃபோர்னியா டெக்சாஸ் மோதல்... இது அமெரிக்க தண்ணீர் பிரச்சனை இல்லை.. அதுக்கும் மேலே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆஸ்டின்(யு.எஸ்) : அமெரிக்காவின் இரு பெரும் மாநிலங்களான டெக்சாஸும் கலிஃபோர்னியாவும் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கின்றன. கலிஃபோர்னியாவிலிருந்து அரசு சார்பில் யாரும் டெக்சாஸுக்கு செல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளார்கள்.

டெக்சாஸ் தவிர இன்னும் 7 மாநிலங்களுக்கும் இந்த தடை பொருந்தும். இது குறித்து கலிஃபோர்னியா அட்டர்னி ஜெனரல் விடுத்துள்ள அறிக்கையில், டெக்சாஸ் மாநிலத்தின் மதசார்பான நம்பிக்கை அடிப்படையில்தான் குழந்தைகள் தத்து எடுப்பதற்கு அனுமதி என்ற சட்டம், கலிஃபோர்னியா வின் அனைவருக்கும் சம உரிமை என்ற கொள்கைக்கு புறம்பாக இருக்கிறது.

California and Texas feuds

ஆகவே, இனிமேல் அரசு முறை பயணமாக கலிஃபோர்னியாவிலிருந்து டெக்சாஸ் செல்ல அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அதாவது கலிஃபோர்னியாவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் குழந்தைகள் தத்து எடுக்க அனுமதி உண்டு.

டெக்சாஸில் இந்த அனுமதியை மறைமுகமாக தடை செய்துள்ளார்கள். இதைக் காரணம் காட்டி இனி கலிஃபோர்னியா அரசுப் பணத்தை செலவழித்து டெக்சாஸ் செல்ல மாட்டோம் என்று அட்டர்னி ஜெனரல் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே கான்சஸ், மிசிசிப்பி, வட கரோலைனா, டென்னசி ஆகிய மாநிலங்களுக்கு இந்த தடை அமலில் இருந்தது. தற்போது டெக்சாஸ், கெண்டகி, தெற்கு டகோடா, அலபாமா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெக்சாஸில் குழந்தைகள் தத்து எடுத்தல் தொடர்பான சட்டதிருத்த மசோதாவை தாக்கல் செய்த அவை உறுப்பினர் டஸ்டின் பரோஸ், கலிஃபோர்னியாவின் இந்த நடவடிக்கையை சாடியுள்ளார். அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பு கொண்டவர்கள் டெக்சன்ஸ். ஆனால் எங்கள் நம்பிக்கையில் யாரையும் ஆதிக்கம் செலுத்தவோ, மறைமுகமாக திணிக்கவோ அனுமதிக்க மாட்டோம். மதரீதியான எங்கள் நம்பிக்கையை நாங்கள் இழக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.

மேலும் கலிஃபோர்னியாவின் இத்தகைய நடவடிக்கையை முறியடிக்கும் வகையில் ஏற்கனவே நான் மசோதா தாக்கல் செய்து இருந்தேன். அது நிறைவேறியிருந்தால். டெக்சாஸ் அரசுப் பணத்தில் கலிஃபோர்னியாவுக்கு செல்வதை தடுத்திருக்கலாம். அதை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

இடது சாரி லிபரல் கொள்கை கொண்ட கலிஃபோர்னியா, தீவிர வலது சாரி கொள்கை கொண்ட குடியரசுக் கட்சி கோட்டையான மாநிலங்களை குறிவைத்து தாக்குகிறது என்பது தான் உண்மை.

இந்த பயணத் தடை மூலம் பாதிப்படையப்போவது விளையாட்டுத் துறை தான். அரசுப் பணத்தில் வீரர்களும், பயிற்சியாளர்களும் செல்ல முடியாது என்பதால் குறிப்பிட்ட எட்டு மாநிலங்களுக்கு கலிஃபோர்னியா விளையாட்டு வீரர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதே கலிஃபோர்னியாவிலிருந்து டெக்சாஸுக்கு நாள் தோறும் மக்கள் வேலை மாற்றலாகி குடியேறி வருகிறார்கள். நிறுவனங்கள் இடம் பெயர்ந்து வருகின்றன என்பதுவும் குறிப்பிடத் தக்கது

மத நம்பிக்கை தொடர்பான உள்ளூர் சட்டங்கள் அமெரிக்க மாநிலங்களின் உறவுக்கு இடையூறாக இருக்கிறது என்பது ஆச்சரியமான உண்மை..

- இர தினகர்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
California has issued travel ban on Texas and three other states . The total number of states banned by California leading to eight. California state funds will bot be allowed for any travel of employees or nominated persons to Texas. Texas passed a bill on foster care centers and adoption, allowing religious based beliefs in admitting the foster care or adoption. This restricts LGBT people from availing the services.
Please Wait while comments are loading...