தந்தை வழியில் ஜஸ்டின் ட்ரூடோ...கனடாவை ஸ்தம்பிக்க வைத்த போராட்டம் - அவசர நிலை பிரகடனம்

கனடா நாட்டில் நடைபெற்று வரும் எல்லைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ஒட்டாவா: கனடா நாட்டில் நடைபெற்று வரும் எல்லைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளார். போராட்டங்களுக்காக கனடாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது.

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லாரி டிரைவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் மற்றும் அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் லாரி டிரைவர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என கனடா அரசு அறிவித்தது.

அதேபோல், அமெரிக்கா சென்று விட்டு திரும்பி வரும் லாரி டிரைவர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவர் என்று கனடா அரசு தெரிவித்தது. மேலும், கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளையும் அதிகரித்தது. இதனிடையே, தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவில் லாரி டிரைவர்கள் கடந்த சில நாட்களா

க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது.

கனடாவை ஸ்தம்பிக்க வைத்த போராட்டம்

கனடாவை ஸ்தம்பிக்க வைத்த போராட்டம்

போராட்டத்தின் ஒரு பகுதியாக கனடா - அமெரிக்காவை இணைக்கும் முக்கிய பாலமான தி அம்பாசிடர் பாலத்தை போராட்டக்காரர்கள் முடக்கினர். லாரிகள் பாலத்தில் நிறுத்தப்பட்டதால் கனடா - அமெரிக்கா இடையேயான போக்குவரத்து தடைப்பட்டது. அதன்பின்னர், காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தி அம்பாசிடர் பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளை அப்புறப்படுத்தனர். இதனால், கனடா - அமெரிக்கா இடையேயான போக்குவரத்து சீரானது.

ஜஸ்டின் ட்ரூடோ

ஜஸ்டின் ட்ரூடோ

இந்நிலையில், லாரி டிரைவர்களின் போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால் கனடாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ நாட்டில் அவசர நிலையை பிறப்பித்தார். 50 ஆண்டுகளுக்கு பின்னர் கனடாவில் பிறப்பிக்கப்படும் அவசர நிலை இதுவாகும். இதற்கு முன்னதாக 1980ஆம் ஆண்டுவாக்கில் கனடாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.

 கட்டாயம் தடுப்பூசி

கட்டாயம் தடுப்பூசி

கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, கனடாவில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒட்டவா பாலத்தை போராட்டக்காரர்கள் முடக்கியதால் அமெரிக்கா - கனடா இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஸ்தம்பிக்கச் செய்த போராட்டம்

ஸ்தம்பிக்கச் செய்த போராட்டம்

கடந்த சில நாட்களுக்கு முன் கனடாவின் ஒட்டவா நகரை ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் பிரம்மாண்ட அளவில் ட்ரக்குகளை கொண்டு அந்த நகர் முற்றுகையிடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான ட்ரக்குகளுடன் ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர். சுமார் ஒரு லட்சம் எண்ணிக்கையிலான டிரக்குகள் இந்த முற்றுகையில் கலந்து கொண்டிருக்கலாம் என கூறப்பட்டது. ஆயிரக்கணக்கான டிரக்குகள் மைல் கணக்கில் நெடுஞ்சாலைகளில் வரிசைகட்டி நின்றது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக அமைந்தது. இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களுக்கு நிதி ஆதாரம் எப்படி கிடைத்தது என விசாரிக்க தற்போது கனடா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த போராட்ட ஒருங்கிணைப்புக்காக மில்லியன் கணக்கிலான டாலர்கள் நிதி திரட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

அவசர நிலை பிரகடனம்

அவசர நிலை பிரகடனம்

இந்தநிலையில் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக நாடு முழுவதும் அவசர நிலை சட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அதன்படி போராட்டக்காரர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு அவர்களது லாரிகள் பறிமுதல் செய்யப்படும். ட்ரக்குகள் சார்ந்த கார்ப்பரேட் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். வாகனங்களின் இன்சூரன்ஸ் நிறுத்தி வைக்கப்படும். மேலும் போராட்டக்காரர்களால் போக்குவரத்து முடக்கிவைக்கப்பட்டுள்ள பாலங்களை உடனடியாக திறக்கவும் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார்.

50 ஆண்டுகளுக்குப் பின் அவசரநிலை

50 ஆண்டுகளுக்குப் பின் அவசரநிலை

1970ம் ஆண்டுக்கு பிறகு கனடாவில் அவசர நிலை சட்டம் அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக கனடாவில் உள்நாட்டு கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகள் காரணமாக அப்போதைய கனடா பிரதமர் பியரே ட்ரூடோ அவசரநிலையை பிரகடனம் செய்தார். இவர் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போராட்டம் ஒன்றுக்காக கனடாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Recommended Video

    Canada-வில் தீவிரமடையும் போராட்டம்.. குறிவைக்கப்பட்ட Justin Trudeau
     போலீசாருக்கு கூடுதல் அதிகாரம்

    போலீசாருக்கு கூடுதல் அதிகாரம்

    தற்போது, அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், போராட்டங்களில் ஈடுபடுவர்களின் வங்கி கணக்குகளை முடக்கவும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட போலீசாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோதும் நிலைமையை கட்டுப்படுத்த இதுவரை ராணுவம் களமிறக்கபடவில்லை. அவசர நிலை பிரகடனத்தால் கனடாவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+