For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இது துபாயா, மையிலாபூரா என யோசிக்க வைத்த நடோபாஷணா- 2 கர்நாடக சங்கீத சிறப்பு நிகழ்ச்சி

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் டிடிஎஸ் இவெண்ட்ஸ் சார்பில் நடோபாஷணா - 2 எனும் கர்நாடக சங்கீத சிறப்பு நிகழ்ச்சி 23.05.2014 அன்று மாலை 5 மணிக்கு துபாய் இந்திய துணைத் தூதரகத்தின் கூட்ட அரங்கில் வெகு சிறப்புற நடைபெற்றது.

டிடிஎஸ் இவெண்ட்ஸ் நிர்வாக இயக்குநரும், சமூக சேவகருமான ஜெயந்தி மாலா சுரேஷ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக துணை கன்சல் ஜெனரல் அசோக் பாபு பங்கேற்றார். அவர் தனது உரையில், பள்ளிச் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று சிறப்புற நடைபெற்று வரும் கர்நாடக சங்கீத நிகழ்ச்சிக்கு இந்திய கன்சுலேட்டின் பங்கு இருப்பது குறித்து மகிழ்வடைவதாகக் குறிப்பிட்டார்.

சாரங்கா - இளம் சாதனையாளர்கள் எனும் தலைப்பில் நடைபெற்ற கர்நாடக சங்கீத நிகழ்ச்சியில் பள்ளிச் சிறுவர், சிறுமியர் தங்களது திறனை சிறப்புற வெளிப்படுத்துவதற்கு டிடிஎஸ் இவெண்ட்ஸ் ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தியிருப்பதற்கு பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஏ. முஹம்மது தாஹா, பாலா, சுந்தர், பிரசன்னா, கீதா கிருஷ்ணன், கோகுல் உள்ளிட்ட குழுவினர் சிறப்புற செய்திருந்தனர்.

Carnatic music programme held in Dubai

மீரா கிரிவாசன் நிகழ்வினை தொகுத்து வழங்கினார். சந்திரா கீதாகிருஷ்ணன் மாணாக்கர்களுக்கு சிறப்புற பயிற்சியளித்து அவர்களது திறனை வெளிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

தங்களது திறனை வெளிப்படுத்திய அனைவரும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பிளாக் துளிப் பிளவர், அல் ரியாமி பிரிண்டிங் பிரஸ், முதுகுளத்தூர்.காம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தங்களது அணுசரனையினை வழங்கியிருந்தன.

English summary
Carnatic music programme titled Natopashana- 2 was held in Dubai on may 23rd.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X