For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கரெக்ட்டா 8.15 மணிக்கு.. சென்னையில் நடந்த அதிசயம்.. டோங்கா எரிமலை ஷாக்.. வானிலை ஆராய்ச்சி மையம்

டோங்கா எரிமலை வெடிப்பு, இந்தியாவிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

டோங்கா: டோங்கா கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பானது, இந்தியாவிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.. அதன்படி, சென்னை, புதுச்சேரி, காரைக்காலிலும் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Recommended Video

    Tonga-வில் கை வைக்கும் China | Debt Trap Policy | Oneindia Tamil

    பசிபிக் ஓசியானா பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடுதான் இந்த டோங்கோ.. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தீவுகள் உள்ளன.. மக்கள் தொகையே வெறும் 1.03 லட்சம் தான் இங்கிருக்கிறார்கள். 2 தினங்களுக்கு முன்பு, டோங்கா நாட்டின் தலைநகர், நுகுஆலோபா என்ற இடத்திற்கு அருகே எரிமலை வெடித்து சிதறியது..

    இதனால், தலைநகரில் இருந்த பெரும்பாலான பகுதிக்குள் கடல் நீர் புகுந்துவிட்டது.. ஏராளமான வீடுகள் மூழ்கிவிட்டன. கடல் ஆக்ரோஷமாகவும் காணப்பட்டது.. இதனால் நிறைய உயிர்பலி ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்பட்டது..

    இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை.. புகை மண்டலமான கிராமங்கள்.. 13 பேர் பலி, பலர் படுகாயம்இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை.. புகை மண்டலமான கிராமங்கள்.. 13 பேர் பலி, பலர் படுகாயம்

    சுனாமி

    சுனாமி

    கடலுக்குள் எரிமலை வெடித்துச் சிதறியவுடனேயே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்குள், எல்லா இடங்களிலும் கரும் புகையும், சாம்பலும் சூழ்ந்து கொண்டது.. கடல் அலைகள் கடற்கரை பகுதிகளை கடந்து குடியிருப்புகளுக்குள் தண்ணீர் செல்வது போன்ற வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வேகமாக பரவின... இதனால், அதிபயங்கரமான புழுதி கிளம்பி சென்று வானம் முழுக்க படர்ந்து கரும்புகையாக காட்சியளித்தது.. எனவே, அந்த பகுதியே இருளில் மூழ்கியது..

    வீடியோ

    வீடியோ

    கடலுக்குள் எரிமலை வெடித்த காட்சிகள் சாட்டிலைட்டில் பதிவாகி, அது வீடியோவாகவும் வெளியாகி இருந்தது... எரிமலை வெடித்ததன் காரணமாக சுமார் ஒரு லட்சம் மக்கள் வாழும் சிபிக் தீவு நாட்டில் கடல் அலைகள் ஊருக்குள் நுழைந்தன.. இந்த எரிமலை வெடிப்பு காரணமாக பசிபிக் தீவுகள் சாம்பலால் மூடப்பட்டுள்ளன... டோங்காவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தகவல் தொடர்பு வசதிகளும் செயல்படவில்லை.

    அதிர்வலைகள்

    அதிர்வலைகள்

    ஹங்கா டோங்கா ஹங்கா ஹாபாய் எரிமலை வெடிப்பின் அழுத்தத்தினால், ஏற்பட்ட அதிர்வலைகள் எதிரொலியாக பல நாடுகளில் நில அதிர்வுகளாக உணரப்பட்டுள்ளது.. குறிப்பாக, டோங்கா தீவில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் அமெரிக்காவில் கூட இதன் அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.. இது தொடர்பாக வானிலை ஆய்வாளர்கள் மேலும் சில விவரங்களை தெரிவித்துள்ளனர்.. அதன்படி, இந்தியாவிலும் பல்வேறு பகுதிகளில் எரிமலை வெடிப்பு அதிர்வு பதிவானதாம்.. குறிப்பாக தமிழகத்திலும் இதன் அதிர்வு பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா

    இந்தியா

    இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தது.. அதில், "அன்றைய தினம் இரவு 8.15 மணிக்கு, சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் உள்ள பாராமனி மீட்டரில் 1.5 ஹெக்டோ பாஸ்கல் என்ற அளவில் பதிவாகியது.. சென்னை மட்டுமல்லாது, புதுச்சேரி, காரைக்காலிலும் அதிர்வு பதிவாகியிருந்தது. தமிழகம் தவிர கேரளாவின் கோழிக்கோடு, திருவனந்தபுரத்திலும் எரிமலை வெடிப்பின் அதிர்வலைகள் பதிவானது. ஆனாலும், இந்த அதிர்வால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை" என்று ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Chennai, Puducherry recorded shock wave due to Tonga volcano eruption
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X