ஆப்பு வைத்த அமெரிக்கா.. இக்கட்டான நேரத்தில் தோள் கொடுத்த டிராகன்! இந்தியாவுக்கு சீனா செய்யும் உதவி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி 2 நாள் பயணமாக நேற்று மாலை டெல்லி வந்தார். அவரை மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் விமான நிலையத்தில் நேரில் சென்று வரவேற்றனர். பின்னர் அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது சீனா இந்தியாவுக்கு உரம், அரிய வகை கனிமங்கள், சுரங்கப் பாதை எந்திரங்கள் ஆகியவற்றை வழங்கத் தயாராக இருப்பதாக வாங் யி உறுதியளித்தார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு இரு தரப்பும் கூட்டாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இந்தியா-சீனா இடையிலான கருத்து வேறுபாடுகள் சச்சரவுகளாக மாறக்கூடாது. அனைத்து வடிவங்களிலும் வரும் தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவது இரு நாடுகளின் முக்கிய முன்னுரிமை. தொடர்ந்து நடைபெறும் பேச்சுவார்த்தை மூலம் நிலையான கூட்டுறவும், எதிர்கால நல்லுறவும் உருவாகும் என நம்புகிறோம்" என வலியுறுத்தப்பட்டது.

China India Delhi

இந்த சந்திப்பில் மிக முக்கியமாக, சீனா இந்தியாவுக்கு உரம், அரிய வகை கனிமங்கள், சுரங்கப் பாதை எந்திரங்கள் ஆகியவற்றை வழங்கத் தயாராக இருப்பதாக வாங் யி உறுதியளித்தார். கடந்த மாதம் ஜெய்சங்கர் சீனாவுக்கு சென்ற போது, இந்தியாவுக்கு தேவையான உரம் மற்றும் அரிய கனிமங்களின் விநியோகம் தொடர்பான பிரச்சினையை நேரடியாக வாங் யியிடம் எடுத்துரைத்திருந்தார்.

சீனா இந்தியா

அதற்கு பதிலாக, தற்போது சீனா இந்த விநியோகம் மீண்டும் தொடங்கப்படுவதாக உறுதியளித்துள்ளது. இது இந்தியாவுக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று எனக் கூறப்படுகிறது. ஏனெனில், உரமும் அரிய வகை கனிமங்களும் இந்தியாவின் வேளாண்மை மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு அத்தியாவசியமானவை. குறிப்பாக, "ரேர் எர்த் எலிமென்ட்ஸ்" எனப்படும் இந்த அரிய கனிமங்கள், மின்னணு சாதனங்கள், பாதுகாப்பு உபகரணங்கள், சூரிய சக்தி, காற்றாலை போன்ற புதிய ஆற்றல் தொழில்நுட்பங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

அரிய கனிமங்கள்

சந்திப்பின் போது தைவான் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று ஜெய்சங்கர் தெளிவுபடுத்தினார். இது சீனாவுக்கு மிக முக்கியமான செய்தியாகக் கருதப்படுகிறது. எல்லை பிரச்சினைகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்தியா-சீனா உறவில் பதற்ற நிலை நிலவி வந்தது. அத்தகைய சூழலில், வாங் யியின் டெல்லி பயணமும், சீனா அரிய கனிமங்களும் உரமும் வழங்கும் உறுதியும், இரு நாடுகளின் உறவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கக்கூடிய முன்னேற்றமாக மதிக்கப்படுகிறது.

வாங் யி

அதே நேரத்தில், சீனாவின் இந்த முடிவு, இந்திய வேளாண்மை மற்றும் தொழில்துறை துறைகளுக்கு உடனடி நன்மையை அளிக்கக் கூடியதாக இருப்பதால், இது அரசியல் மட்டுமின்றி, பொருளாதார ரீதியிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மொத்தத்தில், "அரிய கனிமங்களை வழங்கும் சீனா உறுதி" என்ற அறிவிப்பு, இந்த சந்திப்பின் மிக முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.அமெரிக்கா வரி விதிப்பு நடவடிக்கை காரணமாக ரஷ்யா இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், தற்போது அண்டை நாடான சீனாவும், இந்தியாவுக்கு சில விஷயங்களில் உதவ முன் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+