சீனா கண்டுபிடித்த 1,000 டன் தங்க புதையல்.. மிரளும் உலக நாடுகள்.. ஜி ஜின்பிங் ஹேப்பி.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவின் ஹுனான் மாகாணத்தில் 1,000 டன் தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில் தங்கம் உற்பத்தியில் முன்னணி நாடுகளில் ஒன்றாக சீனா உள்ள நிலையில் இந்த தங்க புதையல் அந்த நாட்டின் பொருளாதாரத்தை கிடுகிடுவென உயர்த்த உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு தற்போது உலக நாடுகளை மிரள வைத்துள்ளது.

தற்போது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. அதேபோல் பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இதுதவிர இன்னும் பல நாடுகள் இடையே மோதல் உருவாகும் சூழல் உள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் தான் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார்.

china gold

இவரும் தன்பங்குக்கு ஒவ்வொரு நாடுகளுக்கும் கூடுதல் வரிகளை விதித்து வருகிறார். இதனால் சர்வதேச அளவில் பதற்றம் அதிகரித்து வருகிறது. வர்த்தக போர் ஏற்படும் சூழலும் உருவாகி உள்ளது.

இதனால் உலக நாடுகள் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. உலகளாவிய பதற்றத்துக்கு நடுவே தங்கத்தின் மீதான முதலீடு தான் பாதுகாப்பு என கருதி பொதுமக்கள் முதல் ஒவ்வொரு நாடுகளின் தலைவர்களும் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். சர்வதேச பொருளாதார மந்த நிலை வரலாம் என்பதால் பலரும் தங்கத்தை தேடி தேடி வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தான் சீனாவின் ஹுனான் மாகாணத்தில் மிகப்பெரிய தங்க சுரங்கம் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக சமீபகாலமாக தகவல்கள் வெளியானது. இப்போது அதனை சீனா உறுதி செய்துள்ளது. அதன்படி சீனாவின் ஹுனான் மாகாணத்தில் 1,000 டன் எடை கொண்ட தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தங்கம் என்பது டிஜிட்டல் மாடலிங் தொழில்நுட்பம் அடிப்படையில் பூமிக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹுனான் ஏற்கனவே இருக்கும் வாங்க் தங்க சுரங்கத்தின் அருகே இது அமைந்துள்ளது.

இந்த தங்க புதையலின் மொத்த மதிப்பு 83 பில்லியன் அமெரிக்க டாலர் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி இது உலகின் மிகப்பெரிய தங்க சுரங்கமாக பார்க்கப்படுகிறது. தென்னாப்பிரிக்காவின் தெற்கு சுரங்கத்தில் 930 டன் தங்கம் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் இது அதனை விட பெரியது என்பதை சீனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனா ஏற்கனவே உலகின் முன்னணி தங்கம் உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. இப்படியான சூழலில் இந்த தங்க சுரங்கம் அந்த நாட்டுக்கு ஜாக் பாட்டாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி சீனாவின் பொருளாதாரத்தை பெருமளவு உயர்த்த இது வழிவகுக்கும். சீனாவை எடுத்து கொண்டால் கனிம வளங்கள் நிறைந்த பகுதியாகும். இந்த தங்கம் சுரங்கம் மீண்டும் அதனை நிரூபித்துள்ளது. முதற்கட்ட ஆய்வின்படி ஒரு டன் தாதுவில் 138 கிராம் வரை தங்கம் கிடைக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் இந்த தங்க புதையல் குறித்து பல நாடுகள் ஆச்சரியாக பார்க்கும் நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் சந்தேக கண்ணோடு பார்க்கின்றன. ஒரே இடத்தில் 1,000 டன் தங்கம் கிடைப்பது சாத்தியமில்லை. சீனா இந்த விஷயத்தில் பொய் சொல்லலாம் என்று அமெரிக்கா தரப்பில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+