For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஷ்யா மட்டும்தான் மிச்சம்.. பிடனுக்கு வாழ்த்து தெரிவித்த சீனா.. சர்வதேச அரசியலில் செம திருப்பம்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சர்வதேச அரசியல் புதிய திருப்பமாக அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கும் ஜனநாயக கட்சியின் ஜோ பிடனுக்கு சீனா வாழ்த்து தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் படுதோல்வி அடைந்துள்ளார். 214 எலக்ட்ரல் வாக்குகளை மட்டுமே வென்று தோல்வி அடைந்துள்ள டிரம்ப் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார்.

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். 290 எலக்ட்ரல் வாக்குகளை பெற்றுள்ள பிடன்.. அடுத்த அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

தனித்து விடப்படுவோம்.. வாய்ஸ் இல்லாத நிதிஷுக்கு முதல்வர் பதவியை தருவது ஏன்? அமித் ஷாவின் ராஜதந்திரம்தனித்து விடப்படுவோம்.. வாய்ஸ் இல்லாத நிதிஷுக்கு முதல்வர் பதவியை தருவது ஏன்? அமித் ஷாவின் ராஜதந்திரம்

வெற்றி

வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தலில் பிடன் வென்று இருந்தாலும், அவருக்கு சீனா வாழ்த்து தெரிவிக்கவில்லை. சீனாவின் அரசியல் தலைவர்களோ, வெளியுறவுத்துறையோ அல்லது ஊடகங்களோ பிடனுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஒரு சில கட்டுரைகள் மட்டுமே பிடனுக்கு ஆதரவாக வந்த நிலையில் நேரடியாக அவருக்கு சீனா வாழ்த்து தெரிவிக்கவில்லை.

இன்று

இன்று

இந்த நிலையில் இன்று பிடனுக்கு சீனாவின் வெளியுறவுத்துறை வாழ்த்து தெரிவித்துள்ளது. அமெரிக்க மக்களின் தேர்வை நாங்கள் மதிக்கிறோம். அதிபராக தேர்வாகி இருக்கும் பிடன் மற்றும் துணை அதிபராக தேர்வாகி இருக்கும் ஹாரிஸுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம், என்று சீனாவின் வெளியுறவுத்துறை வாழ்த்து குறிப்பு வெளியிட்டுள்ளது.

மீதம் உள்ள வாக்குகள்

மீதம் உள்ள வாக்குகள்

அரிசோனா, பென்சில்வேனியா மாகாணங்களில் பிடன் வெற்றி இன்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிபர் தேர்தலில் பிடனின் வெற்றி உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக தற்போது சீனாவும் பிடனை வாழ்த்தி உள்ளது. அமெரிக்கா - சீனா இடையே கடந்த இரண்டு வருடமாக கசப்பான உறவு உள்ளது. டிரம்ப்- சீனா இடையே உறவு அவ்வளவு நன்றாக இல்லை.

கொரோனா

கொரோனா

அதிலும் கொரோனா வைரஸை டிரம்ப் சீன வைரஸ் என்று குறிப்பிட்டார், தென் சீன கடல் பகுதியில் சீனாவிற்கு எதிராக டிரம்ப் அணு ஆயுத கப்பலை கூட அனுப்பினார். இரண்டு நாடுகளும் டிரம்ப் காரணமாக கடுமையான மோதலில் ஈடுபட்டது. இந்த நிலையில்தான் சர்வதேச அரசியலில் வரவேற்க கூடிய திருப்பமாக பிடனுக்கு சீனா வாழ்த்து தெரிவித்துள்ளது.

திரும்பும்

திரும்பும்

இதனால் அமெரிக்கா சீனா உறவில் ஏற்பட்டுள்ள ஓட்டைகள் ஒட்டப்படுவதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது. இரண்டு நாடுகளும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட சூழ்நிலை உருவாகி உள்ளது. இன்னும் பிடனின் வெற்றிக்கு ரஷ்யா மட்டுமே வாழ்த்து தெரிவிக்கவில்லை. டிரம்பின் சட்ட போராட்டங்கள் முடிந்த பின்பே.. ரஷ்யா வாழ்த்து தெரிவிக்கும் என்று கருதப்படுகிறது.

English summary
China finally wishes Joe Biden and Kamala for winning US President election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X