ஆஹா.. சீனா போட்ட பிளான்.. பிரிட்டனில் இருந்து களமிறக்கப்படும் "எக்ஸ்" வீரர்கள்.. என்ன காரணம்?
பெய்ஜிங்: சீனா தனது விமானப்படைக்கு பயிற்சி வழங்க பிரிட்டனின் ஓய்வுபெற்ற விமானப்படை வீரர்களை பணியமர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே தைவான் விஷயத்தில் அமெரிக்கா மூக்கை நுழைத்துள்ள நிலையில், இதற்கு சீனா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரிட்டன் நாட்டின் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது சீனா. இதன் மூலம் சீனா, அமெரிக்காவுடனான மோதலுக்கு தயாராகிறதா? என்கிற கேள்வியை எழுப்புவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். அதேபோல கடந்த 2020ல் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா வீரர்களுக்கிடையே மோதல் வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா
இந்தியாவும், சீனாவும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில்தான் விடுதலையடைந்தது. ஆனால் இன்று சீனா உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக உருவாகி இருக்கிறது. என்னதான் பொருளாதாரத்தில் அதீத வளர்ச்சியை கொண்டிருந்தாலும் சீனாவின் செயல்பாடுகளை சமீப காலமாக சர்வதேச நாடுகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் எப்போதும் பாம்பு-கீரி பகைதான். இப்படி இருக்கையில், சீனா விமானப்படையினருக்கு பயிற்சி வழங்க பிரிட்டனின் ஓய்வுபெற்ற விமானப்படை வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீன விமானப்படை
சில நாட்களுக்கு முன்னர்தான் தைவான் விவகாரத்தில் சீனா தனது விமானப்படைகளை கொண்டு அதிரடியான போர் பயிற்சிகளை மேற்கொண்டது. ஆக இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது சீனா, அமெரிக்காவை எதிர்க்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். 2019 முதல் பிரிட்டனின் முன்னாள் விமானப்படை வீரர்களை சீனா பணியமர்த்தியுள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இவ்வாறு பணியமர்த்தப்பட்டுள்ள வீரர்கள், அதிநவீன போர் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்கள்.

அனுபவம்
அதாவது டைபூன்ஸ், ஜாகுவார்ஸ், ஹாரியர்ஸ் மற்றும் டொர்னாடோஸ் உள்ளிட்ட அதிநவீன போர் விமானங்களை இவர்கள் இயக்கியுள்ளனர். இந்த வகை விமானங்கள் அனைத்துமே ஒலியை விட வேகமாக பறக்கக்கூடியவை. அதேபோல இவர்களை பணியமர்த்துவதன் மூலம் பிரிட்டன் விமானப்படையின் ரகசியங்களை பெறுவதற்கும் சீனா திட்டமிட்டுள்ளதாக இங்கிலாந்து குற்றம்சாட்டியுள்ளது. இவ்வாறு பணியமர்த்தப்படும் வீரர்கள் நேடியாக சீனாவுக்கு சென்று பயிற்சி கொடுக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. மாறாக, தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு பயிற்சி நிலையத்தில் சீன வீரர்களுக்கு பயிற்சி கொடுத்தால் போதுமானது. இவ்வாறு பயிற்சி கொடுக்க ரூ.2.2 கோடி வரை சம்பளம் கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது
இதில் பிரிட்டன் வீரர்கள் மட்டுமல்லாது ஆஸ்திரேலியாவின் வீரர்களும் அடங்குவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து கடந்த அக்டோபரில் இரு நாடுகளும் இது குறித்த ஆய்வில் இறங்கின. யார் யாரெல்லாம் தங்கள் நாட்டிலிருந்து சீன வீரர்களுக்கு பயிற்சி கொடுக்க சென்றிருக்கிறார்கள் என்கிற பட்டியலை தயாரிக்க தொடங்கின. மேலும் இது போன்ற பணிகளில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்று இரு நாடுகளும் தங்கள் வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. இவ்வாறு அறிவுறுத்தல்களை மீறி யாரெல்லாம் சீன வீரர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளார்களோ அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தற்போது வரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா
பயிற்சிக்கு ஆட்களை அனுப்பிய நாடுகள் இவ்வாறு அதிரடியாக களத்தில் இறங்கி இருக்க, மறுபுறம் இந்தியாவை எதிர்கொள்ளதான் சீனா இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் கடந்த 2019ல் சீனா இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அதற்கடுத்த ஆண்டான 2020ல் லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன படைகள் மோதலில் ஈடுபட்டன. ஒருவேளை இந்த பகுதியில் மோதல் தீவிரமடையுமானால் முதலில் விமானப்படைகள்தான் களத்தில் இறங்கும். எனுவே தங்களது விமானப்படையை இந்தியாவுக்கு எதிராக தயார் செய்ய சீனா முயன்று வருகிறதோ என்கிற சந்தேகமும் தற்போது வெளியாகியுள்ள தகவல்களால் மேலெழுந்திருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications