For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விசாரணை குழுவை அனுப்புவோம்.. கோபத்தில் சீனா.. நடுங்கும் பாகிஸ்தான்.. சிபிஇசி கூட்டமும் ஒத்திவைப்பு

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் சீனர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சீனா கடும் கோபமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு குழுவை அனுப்ப உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது பாகிஸ்தானியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

60 இந்துக்கள்.. இஸ்லாத்துக்கு கட்டாய மதமாற்றம்.. அதிர்ச்சி வீடியோ வெளியீடு.. பாகிஸ்தானில்..!60 இந்துக்கள்.. இஸ்லாத்துக்கு கட்டாய மதமாற்றம்.. அதிர்ச்சி வீடியோ வெளியீடு.. பாகிஸ்தானில்..!

சீன பாகிஸ்தான் பொருளாதாரத்தால் வாரத்திட்டத்தின் ஒருபகுதியாக பேசு என்ற இடத்தில் மின்சார உற்பத்தி நிலையம் அமைத்து வரப்படுகிறது.

மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கும் பணியில் சீன இன்ஜினியர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சீன பொறியாளர்கள்

சீன பொறியாளர்கள்

பாசிரின் என்ற இடத்தில் இவர்கள் தங்குவதற்கு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து சீன தொழிலாளர்கள் நீர்மின் திட்ட பகுதிக்கு செல்வதற்கு பஸ் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையிலதான், சில தினங்கள் முன்பு மலைப்பாதையில் இருந்து பஸ் சரிந்து கீழே விழுந்து நொறுங்கியது. பஸ்சில் பயணித்த 20 சீன பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

மாற்றி பேசிய பாகிஸ்தான்

மாற்றி பேசிய பாகிஸ்தான்

இந்தச் சம்பவம் குறித்து ஆரம்பத்தில், பாகிஸ்தான் அரசு பஸ்சில் எரிபொருள் நிரம்பிய சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக வெடிப்பு ஏற்பட்டு மலையிலிருந்து உருண்டதாக தெரிவித்தது. ஆனால் பிறகு, பாகிஸ்தான் செய்தித்துறை அமைச்சர் பவாத் ஹுசைன் அளித்த பேட்டியில் உடைந்து நொறுங்கிய பஸ்சில் வெடி பொருள்களின் அடையாளம் காணப்பட்டதாக கூறியுள்ளார்.

விசாரணை குழுவை அனுப்புவதாக எச்சரிக்கை

விசாரணை குழுவை அனுப்புவதாக எச்சரிக்கை

பாகிஸ்தானில் நடந்தது குண்டு வெடிப்பு என சீனா உறுதியாக நம்புகிறது. எனவே, பாகிஸ்தானில் நடக்கும் விசாரணைக்கு உதவியாக சீனாவிலிருந்து நிபுணர்கள் குழு ஒன்று அனுப்புவோம் என்று சீன வெளியுறவுத்துறை பேச்சாளர் லிஜியான் தெரிவித்தார். இந்த நிலையில்தான், பாகிஸ்தான் நைசாக தனது தனது கருத்தை மாற்றி கூறியது.

பாகிஸ்தானியர்களுக்கு அதிர்ச்சி

பாகிஸ்தானியர்களுக்கு அதிர்ச்சி

சீன அரசும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த விஷயத்தில் முழுமையான விசாரணை நடைபெறவேண்டும் என்றும், குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்த விசாரணையை முன்னின்று கவனித்து வருகிறார். அப்படி இருந்தாலும், விசாரணைக்கு உதவ நிபுணர்கள் குழுவொன்றை அனுப்புவதாக சீனா குறிப்பிட்டுள்ளது பாகிஸ்தானியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிபிஇசி கூட்டம் ஒத்தி வைப்பு

சிபிஇசி கூட்டம் ஒத்தி வைப்பு

சீனாவின் கோபத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பாகிஸ்தான் அரசுக்கு புரியவில்லை. பொறியாளர்களின் மரணத்திற்குப் பிறகு கோபமடைந்த சீனா, Pakistan Economic Corridor (CPEC) (சிபிஇசி) கூட்டத்தையும் ஒத்தி வைத்துள்ளது. பாகிஸ்தான் செய்தித்தாள் "டான்" இதை உறுதி செய்துள்ளது. சீனா தனது விசாரணைக் குழுவை பாகிஸ்தானுக்கு அனுப்புவதாக கூறியுள்ளதை வைத்து பார்த்தால், பாகிஸ்தான் விசாரணையில் சீனாவுக்கு முற்றிலும் நம்பிக்கை இல்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

சீனாவிடம் ஒப்படைக்க உத்தரவு

சீனாவிடம் ஒப்படைக்க உத்தரவு

"இந்த சம்பவத்தின் விசாரணையை ஒரு நொடி கூட தாமதிக்காமல் தொடங்குமாறு நாங்கள் பாகிஸ்தான் அரசிடம் கேட்டுள்ளோம், எந்த ஆதாரம் அந்த இடத்தில் கிடைத்தாலும், அவை உடனடியாக சீனாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். சீன குடிமக்களின் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்." என்று, சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனா கோபம்

சீனா கோபம்

இந்த நிலையில்தான் சிபிஇசி ஆணையத்தின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் அசீம் பஜ்வா வெளியிட்ட ட்வீட் பதிவில், "சிபிஇசி தொடர்பான கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது, இது ஜூலை 16 ஆம் தேதி நடைபெறவிருந்தது, இப்போது பக்ரீத் பண்டிகைக்கு பிறகு ஒத்திவைக்கப்பட்டுள்ளது." புதிய தேதி என்ன என்பது பற்றி பின்னர் கூறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
China is reportedly angry over a bomb blast in Pakistan that killed Chinese. China's announcement that it is sending a team to investigate has come as a shock to Pakistanis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X