Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்க போர் கப்பல்கள் கண்ணில் மண்ணை தூவிய சீனா.. அசால்டாக ஹார்முஸை கடந்து பயணம்! அது எப்படி

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: உலகப் பொருளாதாரத்தின் நாடித் துடிப்பாகக் கருதப்படும் இடங்களில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியில், அமெரிக்கா விதித்த கடல்வழித் தடையை ஒரு சீனக் கப்பல் வெற்றிகரமாகத் தகர்த்துள்ளது. அமெரிக்கா போர்க் கப்பல்களைத் தாண்டி இந்த சீன கப்பல் பாதுகாப்பாகச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!

வளைகுடா நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்த போர் இப்போது தான் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. அமெரிக்காவும் ஈரானும் இரு வாரங்களைப் போரை நிறுத்த சம்மதம் தெரிவித்தது. அத்தோடு போர் நிறுத்தம் குறித்தும் பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும், பேச்சுவார்த்தை சுமுகமாக முடியவில்லை. இது வளைகுடாவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

US Blockade in Strait of Hormuz China iran

சீன கப்பல்

ஈரானுக்கு மேலும் பிரஷரை போட அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரான் வர்த்தகப் போக்குவரத்து வழிகளைத் துண்டிக்க வேண்டும் என்பதற்காக ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா கப்பல்களை நிறுத்தி, முடக்கியுள்ளது. ஆனால், இந்தத் தடையை மீறி முதன்முதலாக ஒரு கப்பல் வெற்றிகரமாக அந்தப் பகுதியைக் கடந்து வெளியேறியுள்ளது. அந்தக் கப்பலின் தான் சீனாவின்'ரிச் ஸ்டாரி' (Rich Starry).

ஷாங்காய் சுவான்ரன் ஷிப்பிங் (Shanghai Xuanrun Shipping) நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தக் கப்பல், ஏற்கனவே ஈரானுடன் வர்த்தகம் செய்ததற்காக அமெரிக்காவால் 'பிளாக் லிஸ்ட்' செய்யப்பட்ட ஒன்று. எல்.எஸ்.இ.ஜி (LSEG) மற்றும் மெரைன் டிராஃபிக் டேட்டாவின்படி, இந்தக் கப்பல் அமெரிக்காவின் கண்காணிப்பையும் மீறி ஜலசந்தியைக் கடந்து வளைகுடா பகுதியிலிருந்து வெளியேறியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

என்ன இருந்தது

சுமார் 2.5 லட்சம் பீப்பாய்கள் மெத்தனாலை சுமந்து கொண்டு, சீனக் குழுவினரால் இயக்கப்படும் இந்தக் கப்பல், ஐக்கிய அமீரகத்தின் ஹம்ரியா துறைமுகத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்த கப்பல் முழுக்க சீன குழுவினரே இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த கப்பல் தான் அமெரிக்கா போர்க்கப்பல்களைத் தாண்டி அசால்டாக உள்ளே நுழைந்துள்ளது.

முரளிகிருஷ்ணன்

'ரிச் ஸ்டாரி' மட்டுமில்லை, 'முரளிகிருஷ்ணன்' (Murlikishan) என்கிற மற்றொரு தடை செய்யப்பட்ட கப்பலும் அதே பகுதியைக் கடந்துள்ளது. இந்தக் கப்பல் இதற்கு முன்பு ஈரான் மற்றும் ரஷ்யாவின் பெட்ரோலியப் பொருட்களை ஏற்றிச் சென்றிருக்கிறது. இது தற்போது ஈராக்கில் எரிபொருளை ஏற்றச் சென்று கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த கப்பலும் அமெரிக்காவின் போர் கப்பல்களைத் தாண்டி அசால்டாக ஹார்முஸ் வழியாகப் பயணித்துள்ளது.

சொதப்பிய பிளான்

ஈரானின் பொருளாதாரத்தை முடக்க வேண்டும் என அமெரிக்கா போட்ட 'மாஸ்டர் பிளான்' இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. சீனா போன்ற நாடுகள் பகிரங்கமாகவே அமெரிக்காவின் தடையைப் புறக்கணிப்பது, அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கத்திற்கு விடப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகிறது. அமெரிக்கா கேட் போட்டுத் தடுத்தாலும் கிடைத்த கேப்பில் உள்ளே புகுந்து போய் இருக்கிறது சீனா.. இது சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.

தற்போது கிடைத்துள்ள தகவலின்படி செறிவூட்டப்பட்ட யுரேனியம் விவகாரத்திலேயே இரு தரப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. முதலில் அணு ஆயுதத் தயாரிப்பிற்கான யுரேனியம் செறிவூட்டலைக் குறைந்தது 20 ஆண்டுகள் நிறுத்த வேண்டும் என்பது அமெரிக்காவின் டிமாண்டு. ஆனால், அதிகபட்சம் 5 வருடம் நிறுத்தி வைக்க ஓகே.. ஆனால், அதற்கு மேல் முடியாது என்பதே ஈரானின் நிலைப்பாடாக உள்ளது. இதில் கருத்து வேறுபாடு ஏற்படாததே மோதலுக்குக் காரணமாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+