தடதடத்த தைவான்.. சுற்றி விழுந்த 11 ஏவுகணைகள்! சோதனையால் பயமுறுத்தும் சீனா - அமெரிக்காவால் வந்த வினை
பெய்ஜிங்: அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் வருகை தந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, தைவானை சுற்றில் 11 ஏவுகணை ஏவி சோதனை நடத்தி இருக்கிறது.
கடந்த 1949 ஆம் ஆண்டு வெடித்த உள்நோட்டு போரை தொடர்ந்து சீனாவில் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது. தைவான் சுயாதீனமாக செயல்பட்டு வந்தாலும் சீனா அதற்கு உரிமைகோரி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.
முதல்கட்டமாக சிங்கப்பூருக்கு சென்ற அவர் அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசினார். அமெரிக்க சபாநாயகரின் இந்த ஆசிய பயணத்தில் தைவானும் இடம்பெற்று இருந்தது சீனாவுக்கு கொதிப்பை ஏற்படுத்தியது. நான்சி பெலோசி தைவான் வருவதாக வெளியான தகவலை தொடர்ந்து சீன அதிபர் ஜீ ஜின்பிங் கண்டனம் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
"நான்சி பொலோசி தைவான் வருவதை எங்களால் அனுமதிக்க முடியாது. நெருப்புடன் விளையாடுபவர்கள் சாம்பலாகி போவது உறுதி." என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் அவர் எச்சரிக்கை விடுத்தார். ஜீ ஜின்பிங்கின் எதிர்ப்பை தொடர்ந்து நான்சி பெலோசி தைவான் செல்வாரா? அல்லது பின்வாங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் நிலவியது.

தைவானில் பெலோசி
இந்த நிலையில் தனது பயணத்திலும் பின்வாங்காமல் அவர் தைவானுக்கு கடந்த செவ்வாய் இரவு 8:15 மணியளவில் சென்றடைந்தார். தைவான் சென்ற அவரை அந்நாட்டு அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். தைவான் தலைநகர் தைபே சென்றடைந்த அவருக்கு அந்நாடு ராணுவ பாதுகாப்பை அளித்து வருகிறது.

அதிபருடன் சந்திப்பு
இந்த நிலையில் தைவானின் வான் எல்லையில் 21 சீன போர் விமானங்கள் புகுந்துள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று தைவானை சுற்றிலும் உள்ள கடற்பகுதிகளில் சக்திவாய்ந்த 11 ஏவுகணைகளை ஏவி சீன ராணுவம் சோதனை நடத்தி இருக்கிறது. பகல் 1:56 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்பட்ட இந்த சோதனையே கடந்த 10 ஆண்டுகளில் சீனா நடத்திய பெரிய ஏவுகணை சோதனையாகும்.

போர் விமானங்கள்
இதுகுறித்து செவ்வாய் கிழமை சீன பாதுகாப்புத்துறை தெரிவிக்கையில், "சீன ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. திட்டமிட்ட ராணுவ நடவடிக்கைகளை எடுப்போம். சீனாவின் பாதுகாப்பு படை கூட்டு ராணுவ பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கிறோம். தைவானின் கிழக்கு கடல் பகுதியில் ஏவுகணை சோதனை நடத்த உள்ளோம்." என்று அறிவித்தது.
Recommended Video

ஏவுகணை சோதனை
இந்த நிலையில் தைவானின் வான் எல்லையில் 21 சீன போர் விமானங்கள் புகுந்துள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று தைவானை சுற்றிலும் உள்ள கடற்பகுதிகளில் சக்திவாய்ந்த 11 ஏவுகணைகளை ஏவி சீன ராணுவம் சோதனை நடத்தி இருக்கிறது. பகல் 1:56 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்பட்ட இந்த சோதனையே கடந்த 10 ஆண்டுகளில் சீனா நடத்திய பெரிய ஏவுகணை சோதனையாகும்.












Click it and Unblock the Notifications