ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது
பெய்ஜிங்: மத்திய கிழக்கில் இஸ்ரேல்- ஈரான் இடையே போர் நடக்கும் சூழலில், இதில் இஸ்ரேலுக்குப் பக்கபலமாக அமெரிக்கா இருக்கிறது. இந்த போரில் அமெரிக்கா பல பில்லியன் டாலர்களை செலவழித்து வரும் சூழலில், மற்றொரு பக்கம் சத்தமே இல்லாமல் சீனா மிக முக்கியமான ஒரு ஆவணத்தை வெளியிட்டுள்ளது. எதிர் வரும் காலத்தில் சீனாவின் உலக அரசியலை இது நிர்ணயம் செய்யும். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சீனாவில் கடந்த வாரம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. அதில் 141 பக்கங்களைக் கொண்ட சீனாவின் 15வது ஐந்தாண்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகமே ஈரான் போரில் கவனம் செலுத்தி வந்தபோது, சத்தமே இல்லாமல் சீனா இந்த மிக முக்கியமான ஆவணத்தை வெளியிட்டது. அதில் சீனாவின் எதிர்கால யுக்தி தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

சீனாவின் டாக்குமெண்ட்
இந்த விரிவான திட்டம் ஒரு வழக்கமான பொருளாதார கொள்கை ஆவணத்தை விட, தேசிய தொழில்நுட்ப டீமிங் போலத் தோன்றுகிறது. சீனாவின் பொருளாதாரத்தில் பெரிய அளவிலான தொழில்நுட்பப் புரட்சிக்கு இது வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டாக்குமெண்ட்டில் செயற்கை நுண்ணறிவு தான் முக்கியமானதாக உள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் பெரும்பகுதி பொருளாதாரத்தில் AIஐ முழுமையாக ஒருங்கிணைக்கச் சீனா ஒரு திட்டமிட்டுள்ளது.
மனித உருவ ரோபோக்களில் அதிக கவனம் செலுத்தப்படும் எனச் சொல்லப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதன் உற்பத்தியை இரு மடங்காக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்வெளி-பூமி குவாண்டம் தொடர்பு நெட்வொர்க், அணுசக்தி இணைவு ஆய்வு, மனித மூளை- கணினி இடையே நேரடி தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சி என சினிமா ஸ்டைல் அறிவிப்புகள் இதில் இடம் பெற்றுள்ளது.
சீனா vs அமெரிக்கா
இந்த ஆவணத்தில் AI தொடர்பான தொழில்கள் மட்டும் சுமார் 10 டிரில்லியன் யுவான் (அதாவது $1.4 டிரில்லியன்) மதிப்பைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நீண்டகால பொருளாதார பலத்தை உருவாக்கும் சீனாவின் திட்டத்தைக் காட்டுகிறது. இது ஒரு பொருளாதார திட்டம் அல்ல. அமெரிக்கா சண்டையிடாத ஒரு போருக்கான போர்த் திட்டம் என்கிறார்கள் வல்லுநர்கள். ஆம், சீனா இந்தளவுக்குத் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும் நிலையில், அமெரிக்கா பெரியளவில் இதில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. தனி நபர்கள் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பாடுபட்டாலும் அரசாக அமெரிக்கா எதுவும் செய்யவில்லை என்பதே உண்மை.
அதிகபட்சமாகக் கடந்த 2022இல் அமெரிக்கா CHIPS மற்றும் சயின்ஸ் சட்டத்தைப் போட்டது.. இந்த சட்டத்தின் கீழ் உள்நாட்டு செமிகண்டக்டர் உற்பத்தியை வலுப்படுத்த $52.7 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும். இதில் $39 பில்லியன் நேரடி மானியங்களும், தாராளமான வரிச் சலுகைகளும் வழங்கப்படும். இந்தச் சட்டம் 140க்கும் மேற்பட்ட திட்டங்களில் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் முதலீடுகளையும், அமெரிக்காவில் உயர் திறன் வேலைகளையும் உருவாக்கியுள்ளது.
விரிவான திட்டம்
ஆனாலும், சீனாவின் திட்டம் வெறுமன சிப்களை வைத்து மட்டும் இல்லை. சிப்கள் ஒரு பகுதி என்றாலும், சீனாவின் திட்டம் ஒட்டுமொத்த தொழில்நுட்ப வளர்ச்சியையும் தனதாக்குவது. அதில் பலவிதமான துறைகள் உள்ளடக்கி இருக்கிறது.. போக்குவரத்து முதல் சர்வீஸ் வரை கிட்டத்தட்ட எல்லா துறைகளிலும் ஏஐ-ஐ கொண்டு வருவதே சீனாவின் திட்டம். இதற்காகவே ரோபோடிக்ஸ் தொழில்துறை உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.
அடுத்து ரேர் எர்த் மெடல். தொழில்நுட்ப வளர்ச்சியில் ரேர் எர்த் மெடல்கள் ரொம்பவே முக்கியமானவை. மின்சார வாகனங்கள் முதல் அதிநவீன ரேடார் வரை ரேர் எர்த் மெடல்கள் அத்தியாவசியமானதாக உள்ளன. F-35 போர் விமானங்கள், ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் துல்லியமான வழிகாட்டு வெடிமருந்துகள் எனப் பல ராணுவ உபகரணங்களுக்கும் இவை தேவைப்படுகின்றன. இந்த ரேர் எர்த் மெடல்களில் இப்போதே சீனா தான் முழு கண்ட்ரோலை வைத்து இருக்கிறது. இதனால் உலக பொருளாதாரத்திலேயே சீனா கேம் ஆடிவருகிறது. இதில் தனது பிடியை மேலும் இறுக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா காலி
ஜி ஜின்பிங் அரசின் இந்த 141 பக்க ரோட் மேப், அடுத்த 15 ஆண்டுகளுக்குத் தேவையான பல முக்கிய பொருட்கள் சீனாவின் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்கிறது. ரேர் எர்த் மெடல், ரோபோடிக்ஸ் மற்றும் ஏஐ துறைளை சீனா தனது வசம் கொண்டு வரத் திட்டமிடுகிறது. இதை வெற்றிகரமாகச் செய்தால் ஒரு குண்டு கூட வீசாமலேயே அமெரிக்காவைத் தான் சொல்வதை எல்லாம் கேட்க வைக்கச் சீனாவால் முடியும்!
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications