For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓங்கி உயர்ந்த ஒட்டகங்கள்.. ஆடு மாடுகள்.. இயேசு பிறந்தார்... வீடியோ

Google Oneindia Tamil News

சிகாகோ: உலக மேய்ப்பர் இயேசு நாதரின் திரு அவதராதத் திருநாள் இன்று. உலகெங்கும் இயேசுவின் பிறப்பை மக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

உலகம் முழுவதும் டிசம்பர் மாதம் பிறந்த உடனேயே கிறிஸ்துமஸ் உற்சாகமும், புத்தாண்டை வரவேற்கும் உல்லாசமும் மனசை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விடும்.

நம்ம ஊரிலே இப்படி என்றால் அமெரிக்கா போன்ற நாடுகளில் சொல்லவும் வேண்டுமா. டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் கிறிஸ்துமஸை உற்சாகமாக கொண்டாட ஆரம்பித்து விடுகிறார்கள்.

வித்தியாசமான கொண்டாட்டம்

வித்தியாசமான கொண்டாட்டம்

எல்லாப் பக்கமும் ஒரே விளக்கு அலங்காரங்கள் களைகட்ட அங்கங்கே கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அரங்கேற தொடங்குகின்றன. அதில் கொஞ்சம் வித்தியாசமான ஒரு நிகழ்ச்சி தான் இது.

இயேசு பிறப்பு

இயேசு பிறப்பு

நம்ம ஊரில் கிறிஸ்துமஸையொட்டி இயேசு பிறப்பை செட் போட்டு வீடுகளில் வைப்பார்கள். அதில் இயேசு நாதர் பிறந்த போது இருந்த சூழலை, குடிலை, மாட்டுத் தொழுவத்தை காட்சிப்படுத்துவார்கள். அதை நாம் கண்டுள்ளோம். அமெரிக்காவிலும் அப்படித்தான்.

பெத்லகேம் செட்

பெத்லகேம் செட்

அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஒரு ஆலயத்தில் வழக்கம் போல கிறிஸ்துமஸ் என்றால் மேரி, ஜோசப், குழந்தை இயேசு, வைக்கோல் போர் என்று அசத்தியிருந்தனர். ஆனால் அதை அத்தோடு விடாமல், அப்படியே நம்மை அந்த கால பெத்லகேமுக்கு கொண்டு போகும் முயற்சியில் இறங்கி விட்டனர்.

ஒட்டகங்கள், ஆடு, மாடுகள்

நிஜமான ஒட்டகங்கள், கழுதை, ஆட்டு குட்டி என்று ஒரு விலங்கு பட்டாளத்தோடு நிஜமான பெத்லகேம் காட்சிகளை நம் கண் முன் கொண்டு வந்து கலக்கி விட்டார்கள். ஒட்டகத்தோடு கழுதையோடு அந்தக் கால உணவுகளோடு அந்த கால நாணயங்களோடு, இயேசு பிறந்தபோது இருந்த சூழலை நமக்குள் கொண்டு வருகிறது அந்த காட்சி.

கிறிஸ்துமஸ் தினமான இன்று அந்த வித்தியாசமான அனுபவத்தைப் பெற இந்த வீடியோவை கட்டாயம் பாருங்க. வாங்க பெத்லகேம் போகலாம்.

- Inkpena சஹாயா

English summary
Christmas is celebrated with Camels in Chicago and people enjoyed the real birth of Jesus the Christ.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X