எங்கும் கேட்ட ‛மோடி.. மோடி..’ கோஷம்! துபாயில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு! சிலிர்த்துப்போன மோடி
துபாய்: இன்று நடக்கும் உலக காலநிலை மாற்ற உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி துபாய் சென்றுள்ளார். துபாய் சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ‛‛மோடி.. மோடி.. பாரத் மாதா கீ ஜே..'' உள்ளிட்ட கோஷங்களை அவர்கள் எழுப்பி அரங்கத்தை அதிர வைத்தனர்.
இந்தியா உள்பட உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் என்பது பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. உலகம் முழுவதும் பருவம் தவறிய மழை, மழை வெள்ளம் உள்ளிட்டவற்றால் பல நாடுகள் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இவை அனைத்துக்கும் முக்கிய காரணம் என்பது பூமி வெப்பமடைவது தான் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் பூமி வெப்பமடைவதை தடுக்க அனைத்து நாடுகள் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நடந்து வருகின்றன.
மேலும் பூமி வெப்பமயமாதல், காலநிலை மாற்ற பிரச்சனைகளை சரிசெய்ய பல உலக நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து திட்டங்களை வகுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் உலக காலநிலை மாற்ற நடவடிக்கை என்ற பெயரில் துபாயில் உச்சிமாநாடு இன்று நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்,அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்,உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கும் அழைப்பு வந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்புரையாற்ற உள்ளார். இதையடுத்து பிரதமர் மோடி நேற்று டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் துபாய் புறப்பட்டு சென்றார். துபாய் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியை அந்நாட்டு துணை பிரதமர் ஷேக் சயிப் பின் சயீத் அல் நயான் விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார். மேலும் பிரதமர் மோடி அங்கு தான் தங்கும் ஓட்டலுக்கு சென்றார். அப்போது துபாயில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடியை ஆடிப்பாடி உற்சாகமாக வரவேற்றனர்.
‛‛மோடி.. மோடி.., பாரத் மாதா கி ஜே.. '' உள்ளிட்ட கோஷங்களை அவர்கள் எழுப்பினர். அதோடு பாடல்கள் பாடி பிரமதர் மோடியை வரவேற்றனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின்போது அங்குள்ள இந்திய வம்சாவளியினர் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் துபாய் வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடியை வரவேற்றுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications