விராட் கோலிக்கும், இந்திய கிரிக்கெட் அணிக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சொன்ன நச் வாழ்த்து!
Recommended Video

இஸ்லாமாபாத்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சாதனை வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பாகிஸ்தான் பிரதமரை இம்ரான்கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா அபாரமாக வெற்றி பெற்று கைப்பற்றியது.
ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும். எனவே இந்த வெற்றி உலக கோப்பையை விட மகத்தானது என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார்.

முதல் ஆசிய அணி
அது மட்டுமின்றி ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒரு கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதும், இதுதான் முதல்முறை என்பது அந்த சிறப்புக்கு மேலும் ஒரு மகுடம் வைத்தது போன்றது ஆகும். இந்த நிலையில்தான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ட்விட்டர் பக்கத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
|
இம்ரான் கான்
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆசியாவை சேர்ந்த ஒரு அணி ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியதற்கு, விராட் கோலி மற்றும் இந்திய கிரிக்கெட் அணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்
இம்ரான் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் புகழ்பெற்ற வீரராக இருந்தவர் ஆகும். அவரது தலைமையில் பாகிஸ்தான் அணி, உலக கோப்பையை வென்று அசத்தியது. இந்த நிலையில்தான் இந்திய அணிக்கு மனமுவந்து பாராட்டு தெரிவித்துள்ளார் இம்ரான்கான்.

பாராட்டுகள்
இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பின்னூட்டத்தில், இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களும், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து உள்ளனர். சமாதானத்திற்கான ஒரு தூதர் என்று அவர்கள் இம்ரான் கானுக்கு பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
-
'பிரின்ஸ்'னு சொல்லிக்கிட்டா பத்தாது.. விராட் கோலி மாதிரி விளையாடவும் செய்யணும்.. 25 பந்தில் அரைசதம்! -
சுப்மன் கில் அவுட்.. வெறித்தனமாக கத்தி கொண்டாடியா விராட் கோலி! அனுஷ்கா சர்மா பக்கம் திரும்பிய கேமரா! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications