Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இஸ்ரேல் பிரதமர் மகனுக்கு கொரோனா தடுப்பூசி.. 3வது அலையில் இருந்து தப்பிக்குமா?

Subscribe to Oneindia Tamil

இஸ்ரேல் : கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்தும் விதமாக இஸ்ரேல் நாட்டிலும் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுக்காக இஸ்ரேல் பிரதமர் தனது இளைய மகனுக்கு தடுப்பூசி செலுத்தினார்.

கொரோனா 3வது அலை குழந்தைகளை குறிவைத்து தாக்கும் என்பதால் உலக நாடுகள் பல குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட்டு வருகின்றன.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கோவிட் 19 பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51.73 லட்சத்தைத் தாண்டி விட்டது. சீனாவின் வூகான் நகரில் உருவாகிய வைரஸ் உலகையே உலுக்கிக் கொண்டு வருகிறது. ஒரு ஆண்டுகளை கடந்தும், கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 25.83 கோடியை தாண்டிவிட்டது. அதே சமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23.37 கோடியை எட்டியுள்ளது.

ஏராளமானோர் பலி

ஏராளமானோர் பலி

வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 51.73 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது 1.94 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடம் பெற்றுள்ளன.

கோவிஷீல்டு, கோவாக்ஸின்

கோவிஷீல்டு, கோவாக்ஸின்

கொரோனவை கட்டுப்படுத்தும் விதமாக கோவாக்ஸின் மற்றும் கோவிஷில்டு தடுப்பூசிகள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் போடப்பட்டு வருகின்றன. கொரானா தடுப்பூசி போடாதவர்களுக்கு விமானங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு அனுமதி இல்லை என அந்தந்த நாடுகள் கட்டுப்பாடு விதித்துள்ளன.

குழந்தைகளுக்கு தடுப்பூசி

குழந்தைகளுக்கு தடுப்பூசி

இதேபோன்று அமெரிக்காவில் 5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க பைசர் தடுப்பூசி போடுவதற்கு உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் அங்கீகாரம் அளித்துள்ளது. இதன் காரணமாக 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட அந்நாடு ஆயத்தம் ஆகி வருகிறது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 2.80 கோடி குழந்தைகள் தடுப்பூசியை போட்டுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பூசி போட இஸ்ரேல் ஆயத்தம்

தடுப்பூசி போட இஸ்ரேல் ஆயத்தம்

இந்நிலையில் இஸ்ரேல் நாட்டில் திங்கட்கிழமை முதல் 5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் நாடுகள் பட்டியலில் இஸ்ரேலும் இடம்பெற்றுள்ளது. 2021 தொடக்கத்தில் இஸ்ரேல் நாடு இளைஞர்கள் முதியவர்கள் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போட்டது. பள்ளிக்கூடங்களில் தொற்று நிகழ்வுகள் ஏற்பட்டபிறகு ஜூன் மாதத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு தடுப்பூசி போட பரிந்துரைக்கப்பட்டது.

பிரதமர் பேஸ்புக் பதிவு

பிரதமர் பேஸ்புக் பதிவு

இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் தனது பேஸ்புக் பக்கத்தில் நாட்டில் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெரும்பாலானோருக்கு கெரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் 3வது அலையை நாடு எதிர்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஏற்கனவே 12 முதல் 17 வயதிற்குட்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசி மருந்துகளை வழங்கப்பட்டு வந்த நிலையில், ஃபைசர் மற்றும் இஸ்ரேலிய விஞ்ஞானிகளின் குழுவின் பரிந்துரைகளின்படி 12 வயதுக்கு உட்பட்டோருக்கும் தடுப்பூசி போட பரிந்துரை செய்யப்பட்டது.

மகனுக்கும் தடுப்பூசி போட்ட பிரதமர்

மகனுக்கும் தடுப்பூசி போட்ட பிரதமர்

இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் 11 வயது ஆன தனது இளையமகனுக்கு கோவிட் 19 தடுப்பூசி செலுத்தி உள்ளார். பிரதம மந்திரி தனது சொந்த இளைய மகனுக்கு செவ்வாய்க்கிழமை காலை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் அறிவித்துள்ளது. நாட்டின் ஒன்பது மில்லியன் மக்களில் 5.7 மில்லியனுக்கும் அதிகமானோர் இப்போது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசிகளை அறிமுகப்படுத்திய முதல் நாடுகளில் இஸ்ரேலும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+