For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவிலிருந்து இந்தியா வந்த 324 பேர்.. திபெத் அருகே முகாமில் தங்க வாய்ப்பு.. என்னாச்சு? - பின்னணி!

சீனாவில் இருந்து இந்தியா வரவழைக்கப்பட்ட 324 பேரும் திபெத் எல்லையில் இருக்கும் மத்திய அரசு முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட உள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சீனாவில் இருந்து தமிழகம் திரும்பிய இளைஞருக்கு கொரோனா அறிகுறிகள் ?

    பெய்ஜிங்: சீனாவில் இருந்து இந்தியா வரவழைக்கப்பட்ட 324 பேரும் திபெத் எல்லையில் இருக்கும் மத்திய அரசு முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட உள்ளனர்.

    சீனாவின் வுஹன் நகரத்தில் இருந்து 324 இந்தியர்கள் இன்று நாடு திரும்பி உள்ளனர். இவர்கள் சிறப்பு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர்.

    இந்தியா கொண்டு வரப்பட்ட பின் இவர்கள் எல்லோரும் 14 நாட்கள் தனியாக வைக்கப்படுவார்கள். முதலில் மருத்துவ பரிசோதனை இவர்களுக்கு செய்யப்படும். அதன்பின் 14 நாட்கள் இவர்கள் தினமும் கண்காணிக்கப்படுவார்கள். தனி அறையில் இது செய்யப்படும்.

    ஒரே நாளில் 45 பேர் மரணம்.. 11,000 பேருக்கு பாதிப்பு.. சீனாவில் தீவிரம் அடைந்த கொரோனா.. அதிர்ச்சி!ஒரே நாளில் 45 பேர் மரணம்.. 11,000 பேருக்கு பாதிப்பு.. சீனாவில் தீவிரம் அடைந்த கொரோனா.. அதிர்ச்சி!

    எப்படி

    எப்படி

    இந்த நிலையில் இந்த 324 பேரையும் இந்தியா - திபெத் எல்லைக்கு கொண்டு செல்ல இருக்கிறார்கள். இந்தியா திபெத் எல்லையில் இதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. அங்கு ஒரு அறைக்கு 3 பெட்கள் கொண்ட முகாம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோல் மொத்தம் 120 அறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. இங்குதான் அனைவரும் சிகிச்சை பெறுவார்கள். 20 மருத்துவர்கள் இங்கு மக்களை தீவிரமாக கண்காணிப்பார்கள்.

    எல்லை

    எல்லை

    இந்த பகுதிக்கு இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளது. இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ்தான் இந்த முகாமை உருவாக்கியது. இந்த முகாமிற்கு பெயர் ச்சாவ்லா கேம்ப் என்பதாகும். டெல்லியில் இருந்து இன்னொரு விமானம் மூலம் இவர்கள் திபெத் கொண்டு செல்லப்படுகிறார்கள். அதற்கு முன் இவர்கள், உறவினர்கள் யாரையும் பார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் திபெத் எல்லையை இந்தியா இந்த முகாமிற்காக தேர்வு செய்தது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது. திபெத்தில் ஏற்கனவே ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. அதிலும் இந்த பகுதி சீனாவிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. திபெத் எல்லையில் பெரிய அளவில் மருத்துவ வசதிகள் இல்லை. இப்படி இருக்கும் போது ஏன் இந்த பகுதியை தேர்வு செய்தார்கள். இதற்கு பின் என்ன காரணம் இருக்க முடியும் என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    என்ன மாதிரியான விளக்கம்

    என்ன மாதிரியான விளக்கம்

    இதற்கு மத்திய அரசு அதிகாரிகள் சிலர் விளக்கமும் அளித்துள்ளனர். அதன்படி, சீனாவில் இருந்து வந்தவர்களை இப்படி தூரமாக வைப்பதே நல்லது. இதனால் மக்கள் யாரும் பாதிக்க கூடாது. அதை திட்டமிட்டே, திபெத் அருகே இந்த முகாமை அமைத்தோம். அங்கு மக்கள் தொகை குறைவு. ஏதாவது பிரச்சனை நேர்ந்தால் கூட, நோய் அதிக அளவில் பரவாது. அதனால்தான் மிகவும் தூரத்தில், உட்பகத்தில் திபெத் அருகே முகாமை அமைத்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Coronavirus: 324 people who rescued from China will be treated in the Tibet border for next 14 days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X