நானே ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் உட்கொள்கிறேன்.. டிரம்ப் ஷாக்கிங் பேட்டி.. எஃப்டிஏ எச்சரித்த அதே மருந்து!
அமெரிக்க அதிபர் டிரம்ப் மலேரியாவை தடுக்க உதவும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை கொரோனா தாக்குதலுக்கு தடுப்பாக உட்கொண்டு வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
Recommended Video
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மலேரியாவை தடுக்க உதவும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை கொரோனா தாக்குதலுக்கு தடுப்பாக உட்கொண்டு வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை கொரோனாவிற்கு எதிராக பயன்படுத்தலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த மாதம் பரிந்துரை செய்தார். இது மலேரியாவிற்கு எதிரான மருந்து ஆகும்.
ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் அதிக பின் விளைவுகளை கொண்ட மருந்து ஆகும். ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் உட்கொண்டால் தலைவலி, உடல் வலி, அதீத மன அழுத்தம், அயர்ச்சி, மூச்சு அடைப்பு, உடல்களில் வீக்கம், தோல் உரிதல், மூக்கில் இருந்து ரத்தம் வருதல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும்.

கொரோனா தடுப்பு எப்படி
இந்த மருந்தை கொரோனாவிற்கு எதிராக அமெரிக்காவில் பயன்படுத்த டிரம்ப் பரிந்துரை செய்தார். உலகில் இந்தியாவில்தான் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் ஏறத்தாழ இந்தியாவுடன் சண்டை போட்டு அவர் மருந்தை வாங்கினார். ஆனால் இந்த மருந்து அமெரிக்காவில் பெரிய பலன் அளிக்கவில்லை. இந்த மருந்தை உட்கொண்ட கொரோனா நோயாளிகள் பலியானதும் குறிப்பிடத்தக்கது.

என்ன சொன்னார் டிரம்ப்
இந்த நிலையில்தான் அதிரடி திருப்பமாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் மலேரியாவை தடுக்க உதவும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை கொரோனா தாக்குதலுக்கு தடுப்பாக உட்கொண்டு வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அவர் தனது பேட்டியில், நான் கொரோனா தடுப்பிற்காக ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை உட்கொள்கிறேன். எனக்கு கொரோனா இல்லை. அறிகுறியும் இல்லை.

நானும் சாப்பிடுகிறேன்
நான் இந்த ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்தை கடந்த ஒன்றரை வாரமாக சாப்பிடுகிறேன். நான் தினமும் இந்த மருந்தை சாப்பிடுகிறேன். இதோடு சின்க் மருந்தை சேர்த்து சாப்பிடுகிறேன். ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்து நன்மை பயக்கும். அது தொடர்பாக நான் நிறைய நல்ல விஷயங்களை கேட்டு இருக்கிறேன். அமெரிக்காவில் பலர் இந்த மருந்தை உட்கொள்கிறார்கள் .

பலர் சாப்பிடுகிறார்கள்
முன்னிலை பணியாளர்கள், மருத்துவர்கள் பலர் இந்த மருந்தை உட்கொள்கிறார்கள். அதனால் நானும் உட்கொள்கிறேன். வெள்ளை மாளிகை மருத்துவ ஆலோசகர் மூலம் இது பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் அவர் மருத்துவர் இல்லை. நான் மருந்தை சாப்பிடலாமா என்று கேட்டேன். அவர் தாராளமாக சாப்பிடுங்கள் என்று கூறினார். அதனால் சாப்பிடுகிறேன்.

இது நல்ல மருந்து
இந்த மருந்து தொடர்பாக என்னிடம் பலர் பேசுகிறார்கள். போன் செய்து இந்த மருந்தின் மகிமையை கூறுகிறார்கள். மருத்துவர்கள் கூட என்னிடம் இது பற்றி பேசுகிறார்கள். எனக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கொரோனா சோதனை செய்கிறார்கள். நான் அதிபர் என்பதால் எனக்கு இப்படி சோதனை செய்கிறார்கள். எனக்கு இதில் விருப்பம் இல்லை. ஆனாலும் சோதனை செய்து கொள்கிறேன் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

உலக நாடுகள் எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்தும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் குறித்து உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை முறையின்றி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து வரும் என்றும் கூறியுள்ளனர். அதேபோல் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஒழுங்காற்று துறையும் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மருந்து கொரோனாவை தடுக்கவில்லை, அதனால் இதை பயன்படுத்த வேண்டாம் என்றுள்ளது.












Click it and Unblock the Notifications