
அலறும் ஜெர்மனி.. உருமாறிய டெல்டா வைரஸ்.. 50 லட்சத்தை தாண்டியது தொற்று பாதிப்பு..!
பெர்லின்: ஜெர்மனியில் மீண்டும் கொரோனாவைரஸ் தலைதூக்கி உள்ள நிலையில், அந்நாட்டு அரசை இது பெரிதும் கவலை கொள்ள செய்து வருகிறது.
உலகம் முழுவதும் தொற்று பரவல் அதிகரித்து கொண்டே போகிறது.. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51.14 லட்சத்தை தாண்டி வருகிறது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,114,940 பேர் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 254,008,051 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 229,659,821 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்..
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,271 பேருக்கு கொரோனா பாதிப்பு- 285 பேர் மரணம்

இந்தியா
மேலும் 77,470 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்... அந்தந்த நாடுகள் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த மும்முரம் காட்டி வருகின்றன.. இந்தியாவை பொறுத்தவரை 110 கோடி தடுப்பூசிகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது.. குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த ஒப்புதலை சில நாடுகள் வழங்கி வருகின்றன.. அந்த வகையில், அமெரிக்கா அனுமதி தந்தது.. இப்போது இஸ்ரேல் நாடும் அனுமதி அளித்துள்ளது.

தடுப்பூசி
நாட்டில் 5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம்,12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள முடியும்.. தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா அடுத்த இடத்திலும் தொடர்ந்து இடம்பிடித்து வருகின்றன.. இதைதவிர, சில நாடுகளில் கொரோனாவைரஸ் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தலைதூக்கி வருகிறது..

டெல்டா வைரஸ்
அந்த வகையில் சீனாவும், ஜெர்மனி, ரஷ்யா, இங்கிலாந்து போன்ற நாடுகளும் நிறைய பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. இதில், கடந்த சில வாரங்களாகவே, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உருமாறிய டெல்டா வைரஸ்தான் இதற்கு காரணம் என்கிறார்கள்.. ஜெர்மனியில் நேற்று ஒரே நாளில் 28, 934 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது... அந்த வகையில் இப்போதைக்கு அந்த நாட்டில் கொரோனா தொற்றுக்கு பாதிப்புக்கு 50,38,322 பேர் ஆளாகி உள்ளனர்.

உயிரிழப்பு
ஒரே நாளில் 35 பேர் பலியாகி இருக்கிறார்கள்... இதுவரை ஜெர்மனியில் 98,194 பேர் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.. 44.77 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சையில் இருந்த நிலையில், அவர்களும் டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டனர்.. தற்போது 4.62 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.. இந்த தொற்று பாதிப்பை குறைக்கும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக இறங்கியிருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.