அதிரும் பிரேசில்.. 2 கோடியை நெருங்கும் பாதிப்பு.. கதிகலங்கும் மக்கள்.. துரத்தும் கொரோனா வைரஸ்..!
பிரேசிலில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது
பிரஸ்ஸிலியா: பிரேசிலில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கிவிட்டது.. இது அந்நாட்டில் பெரும் கலக்கத்தை தந்துள்ளது.
உலக அளவில் தொற்று பாதிப்பு அதிகரித்தபடியே உள்ளது.. தொற்றுஅதிகமுள்ள நாடுகளின் லிஸ்ட்டில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகள் முதல் 5 இடத்தை பிடித்துள்ளன...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்துள்ளது.. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

வைரஸ்
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 42.58 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1.54 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 92 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்க தொடங்கியுள்ளது. இதனால், உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன.

தடுப்பூசி
இப்போதைக்கு தடுப்பூசியால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவருவதால், தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. டெல்டா வகை கொரோனா பரவலால் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அமெரிக்கா
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,048,572 என அதிகரித்துள்ளது... அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 630,493 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 29,754,706 என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31,767,965 என அதிகரித்துள்ளது. அதேபோல, பலியானோர் எண்ணிக்கை 425,789 ஆகவும், குணமானோர் எண்ணிக்கை 30,925,348 ஆகவும் உள்ளது..

பாதிப்பு
உலக அளவில் கொரோனா பலி எண்ணிக்கையில் பிரேசில் 3வது இடத்தில் உள்ளது.. இதனால் பிரேசிலில் வறுமை அளவுக்கு அதிகமாகவே அதிகரித்து வருகிறது. இது அந்நாட்டின் அதிபருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு நடுவில் அந்நாட்டு அதிபர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.. மாஸ்க் அணியாமல், மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும் என்று சொல்லி உலக சுகாதார அமைப்பினால் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார்..

பெண்கள்
இதற்கு அடுத்தபடியாக தடுப்பூசி போட்டுக்கொண்டால் நீங்கள் முதலையாகவும் மாறலாம், பெண்களுக்கு தாடி வளரலாம் என்ற பொதுவெளியில் பேசி, பலரது கண்டனங்களையும் சம்பாதித்து கொண்டார். இப்படிப்பட்ட சூழலில், புதிய தொற்று அலை அந்த நாட்டில் மேலும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.. இதனால் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் அதிகளவில் அனுமதிக்கப்படுகின்றனர்...

கொரோனா
பிரேசிலில் ஒரே நாளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பை அடையும் அளவுக்கு சென்றுவிட்டது.. உயிரிழப்போ ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு மேல் சென்றுவிட்டது. இப்போது அந்த நாட்டில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.5 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில், பிரேசில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கியுள்ளது..

கலக்கம்
அங்கு கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையோ 5.58 லட்சத்தைக் கடந்துள்ளது... இது அந்நாட்டு மக்களை மேலும் கலக்கத்திலும் பீதியிலும் ஆழ்த்தி வருகிறது.. பிரேசிலில் ஆரம்பத்திலேயே தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அதிபர் ஜெயிர் போல்சனரோ தவறிவிட்டதாக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

சிறுவர்கள்
இளைஞர்கள் உட்பட பச்சிளங்குழந்தைகள், சிறுவர்கள் என அனைத்து தரப்பையுமே இந்த தொற்று தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.... இதுவரை கொரோனா பரவத் தொடங்கிய நாள்முதல் இப்போதுவரை 900-க்கும் அதிகமான குழந்தைகள் தொற்றினால் இறந்துள்ளது.. இவர்கள் எல்லாருமே 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது..!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications