For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தடுக்க தவறியதால் பெரும் சிக்கலில் சீனா.. ஜன10 -24க்குள் வுகானில் இருந்து வெளியேறிய 50 லட்சம் மக்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Is China hiding the real numbers of the Coronavirus ? | சீனா பலி எண்ணிக்கையை மறைக்கிறதா?

    பெய்ஜிங்: கொரோனா வைரஸ் உருவான வுகான் நகரை விட்டு ஜனவரி 10 -24 ம் தேதி வரை 50 லட்சம் பேர் வெளியேறி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக கொரோனா வைரஸ் உலகில் பரவுவதை தடுக்க சீனா தவறிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.

    சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரானா வைரஸ் தாக்க ஆரம்பித்து. அதன்பிறகு ஜனவரியில் மக்களிடம் வேகமாக பரவ ஆரம்பித்தது. இது வரை கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் அதிகாரப்பூர்வமாக 871 பேர் வரை இறந்திருக்கிறார்கள். 40,710 பேர் இன்று காலை வரை பாதிக்கப்பட்டுள்ளார்கள். நேற்று ஒரே நாளில் 3062 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

    2002 மற்றும் 2003ம் ஆண்டு சீனாவை தாக்கிய சார்ஸ் நோயால் 774 பேர் தான் இறந்தார்கள். 8000 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். ஆனால் இப்போது 40 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சுமார் 1000 பேரை காவு வாங்கிவிட்டது. உண்மையான உயிரிழப்புகள் குறித்து வெளிப்படையாக சீனா அறிவித்தால் அதிர்ச்சிகரமாக இருக்கலாம் என்கிறார்கள்.

    உணவில் பரவும் வைரஸ்.. ஜப்பான் கப்பலில் நடக்கும் கொடூரம்.. கொரோனா பீதியில் தத்தளிக்கும் 3500 பேர்! உணவில் பரவும் வைரஸ்.. ஜப்பான் கப்பலில் நடக்கும் கொடூரம்.. கொரோனா பீதியில் தத்தளிக்கும் 3500 பேர்!

    புரியாத புதிர்

    புரியாத புதிர்

    ஆனால் கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்பது குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் வெளியேறிய 50லட்சம் மக்களை எப்படி அடையாளம் காணப்போகிறது சீனா என்பது பெரும் புரியாத புதிராக உள்ளது.

    எங்கே தாக்கியது

    எங்கே தாக்கியது

    சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான், கொரோனா பாதிப்பு முதல்முதலாக கடந்த ஜனவரி 10-ம் தேதி வெளியே தெரிந்தது.. அங்கிருந்த இறைச்சி மற்றும் கடல் உணவுகள் விற்கும் சந்தையில் இருந்து இந்த நோய் உருவானது தெரியவந்தது. இந்த நோய் மூச்சுக்காற்று மூலம் பரவும் என்ற தகவலும் அதன்பிறகே தெரியவந்தது.

    முக்கியமான 2 வாரம்

    முக்கியமான 2 வாரம்

    ஜனவரி 10ம் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு வெளியே தெரிந்த உடன் சீனா உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அளவுக்கு பரவி இருந்திருக்காது என்கிறார்கள். சீன அரசு அலட்சியமாக இருந்த காரணத்தால் நோய் தீவிரமாக பரவிவிட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. இதன் காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட வுகானில் மக்கள் வெளியேற ஜனவரி 23ம் தேதி தான் சீன அரசு தடைவித்தது. ஆனால் ஜனவரி 10 முதல் ஜனவரி 24 ம் தேதிக்குள் வுகான் நகரை விட்டு 50 லட்சம் பேர் வெளியேறிவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை வெளியிட்டது வேறு யாருமல்ல வுஹான் நகர மேயரே வெளியிட்டுள்ளார். அரசின் இந்த நடவடிக்கை தாமதம் என்றும் விமர்சித்தார்.

    எங்கே போனார்கள்

    எங்கே போனார்கள்

    சீனாவில் சந்திரப் புத்தாண்டு விடுமுறை களைகட்டும். இதையொட்டியே, விமானங்கள், ரயில்கள் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி பல லட்சம் பேர் நகரை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். அசோசியேட் பிரஸ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. பைடு (Baidu) நிறுவனத் தரவுகளைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பயணத் தடை விதிக்கப்பட்ட ஜனவரி 23-ம் தேதியை அடிப்படையாக வைத்து, அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை பயணம் குறித்த ஆய்வு செய்யப்பட்டது.

    எங்கே போனார்கள்

    எங்கே போனார்கள்

    இதில், வுஹான் நகரிலிருந்து 70 சதவிகிதம் பேர், ஹூபே மாகாணத்துக்குள்ளேயே பயணித்து உள்ளர்கள். . மேலும் 14 சதவிகித பயணங்கள், அருகிலிருக்கும் ஹெனான், ஹுனான், அன்ஹூயி மற்றும் ஜியான்க்ஸி (Henan, Hunan, Anhui and Jiangxi) ஆகிய மாகாணங்களுக்கும், 2 சதவிகித பயணங்கள் ஹாங்காங்கை ஒட்டிய கடற்கரையைக் கொண்ட குவாங்டாங் (Guangdong) மாகாணத்துக்கும் நடந்து உள்ளது.

    தடுப்பது மிக கடினம்

    தடுப்பது மிக கடினம்

    கொரோனா வைரஸ் தொடக்கத்தில் பரவியதாகக் கண்டறியப்பட்ட ஹூபே மாகாணம், சீனாவின் மையப் பகுதியாகும். இங்கிருந்து சீனாவின் இரு பகுதியில் உள்ள , பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நோக்கி சென்று உள்ளார்கள். பைடு நிறுவனத் தரவுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் கவலை அளிக்கிறது. ஏனெனில் வுஹான் நகரை விட்டு வெளியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் தொழிலாளர்கள். அவர்களில் அதிகம் பேர் செல்போனே பயன்படுத்தாதவர்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால், வைரஸ் பரவலைத் தடுப்பது சீனாவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்கிறார்கள்.

    English summary
    50 lacks people out from wuhan city between january 10 to 24th 2020 . how coronavirus spread in china
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X