இங்கிலாந்து பெண்ணுக்கு அடித்தது யோகம்.. அவித்த கோழி முட்டைக்குள் வைரக்கல்!
லண்டன்: இங்கிலாந்தில் முட்டை சாப்பிட்ட பெண் ஒருவருக்கு முட்டையிலிருந்து வைரக்கல் கிடைத்துள்ளது சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சேலி தாம்சன்(39). காலை உணவாக அவித்த முட்டை சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது நறுக்கென்று ஒன்று அவர் பல்லில் சிக்கியது. அது என்னவென்று பார்த்தபோது குபிக் சிர்கோனியா( Cubic Zirconia) என்ற ஒரு வகை வைரக்கல் இருந்தது. இதை பார்த்ததும் ஆச்சர்யமடைந்தார்.

தனக்கு கிடைத்த வைரம் குறித்து அவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ள பலதரப்பிலிருந்தும் முட்டைக்குள் வைரக்கல் எப்படி சிக்கியிருக்கலாம் என்பதற்கான விளக்கங்கள் அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அடுத்த மாதம் எனக்குத் திருமணம் நடக்கவிருக்கிறது. இதற்காக நான் உடல் எடையைக் குறைக்க தினமும் அவித்த முட்டை சாப்பிடுகிறேன். அதேபோல் சாப்பிட்டுகொண்டிருக்கும்போது ஏதோ ஒன்று கடினமான பொருள் என் வாயில் பட்டதை உணர்ந்தேன். அதை வெளியில் துப்பிவிட்டேன். அதில் பளபளவென்று ஒரு சிறிய கல் மின்னியது. சுத்தம் செய்து பார்த்தால் அது ஒரு வைரக்கல். எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது என்று கூறினார்.
கீழே விழுந்து கிடந்த வைரத்தை பண்ணையில் இருந்த கோழி விழுங்கியிருக்க கூடும். பின்னர் அந்தக் கல், செரிமாணம் ஆகாமல் முட்டைக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். எது எப்படியோ வைரம் கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளார் சேலி தாம்சன்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications