Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புடினை எதிர்த்தால் குலநாசம்! பிளான் போட்டு கொன்றுவிட்டார்? வாக்னர் தலைவர் மரணம்.. அமெரிக்கா வார்னிங்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: வாக்னர் பிரிவின் தலைவர் பிரிகோஜின் விமான விபத்தில் பலியான சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் முக்கியமான புகார்களை வைத்து வருகின்றனர்.

ரஷ்யாவின் பிரைவேட் ஆர்மிதான் Wagner Group. 2014ல் உருவாக்கப்பட்ட இந்த கும்பல் ரஷ்ய அரசுக்கு மிகவும் நெருக்கமாக பார்க்கப்படும் பிரைவேட் ஆர்மி. ரஷ்யா அரசால் நேரடியாக செய்ய முடியாததை இந்த குழு மறைமுகமாக செய்யும்.

Did Russia Putin order to kill the Wagner groups chief and top leaders in place crash?

வெளிநாட்டு, உள்நாட்டு தலைவர்களை கொலை செய்வது, வெளிநாட்டு போர்களில் ரஷ்ய ராணுவத்திற்கு உதவி செய்வது போன்ற பணிகளை இவர்கள் செய்து வந்தனர். இந்த அமைப்பை உருவாக்கிய உட்கின் 1999 -2009 வரை ரஷ்யாவின் பல்வேறு ராணுவ பிரிவுகளில், உளவு பிரிவுகளில் வேலை பார்த்து இருக்கிறார்.

இதன் தற்போதைய தலைவராக பிரிகோஜின் இருக்கிறார். இவர் புடினுக்கு ஒரு காலத்தில் மிக நெருக்கமாக இருந்தார். புடினின் பர்சனல் உணவு தயாரிப்பாளராகவும் இவர் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் மாதம் திடீரென வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் தலைமை உக்ரைனில் இருந்த வாக்னர் படையினர் மாஸ்கோவை நோக்கி வந்தனர். ரஷ்ய ராணுவத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, வாக்னர் குழுவை ராணுவத்துடன் இணைக்க வேண்டும் என்று ரஷ்யா பாதுகாப்புத்துறை முயற்சி செய்தது போன்ற காரணங்களாலும், வாக்னர் குழுவினர் சிலரை ரஷ்ய ராணுவம் தாக்கியதால் இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் தலைமை உக்ரைனில் இருந்த வாக்னர் படையினர் மாஸ்கோவை நோக்கி வந்தனர். இதனால் உள்நாட்டு போர் ஏற்படும், புடின் ஆட்சி கவிழ்க்கப்படும், பெரிய மோதல் உண்டாகும் என்றெல்லாம் கருதப்பட்டது. ஆனால் கடைசியில் பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ நடத்திய பேசசுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படவே வாக்னர் குழு வந்த வழியே திரும்பி சென்றது.

அதோடு வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் பெலாரசுக்கு செல்வதாக முடிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் சிஐஏ தலையீடு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்படி சிஐஏதான் வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜிக்கு பல பில்லியன் டாலர்களை கொடுத்து புடின் அரசை கவிழ்க்க சதி செய்ததாக கூறப்படுகிறது. புடின் ஆட்சியை முடிக்க வேண்டும், ரஷ்யாவில் பொம்மை ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று சிஐஏ முயன்றதாக கூறப்படுகிறது.

மரணம்: இந்த நிலையில்தான் நேற்று ரஷ்யாவில் நடந்த விமான விபத்தில் வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் பலியானார். அவரின் மரணத்திற்கு பின் ரஷ்ய அரசின் சூழ்ச்சி இருக்கலாம் என்று வாக்னர் குழு குற்றச்சாட்டு வைக்கிறது. இந்த அமைப்பை உருவாக்கிய உட்கின் என்பவரும் இந்த சம்பவத்தில் பலியாகிவிட்டார். இந்த மரணம் வாக்னர் குழுவின் முடிவுரையாக பார்க்கப்படுகிறது.

புடின் கொலை: இந்த மரணம் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. பிரிகோஜின் விமான விபத்தில் பலியான சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் முக்கியமான புகார்களை வைத்து வருகின்றனர். இதை புடின்தான் செய்திருப்பார். வாக்னர் மேற்கொண்ட புரட்சியை புடின் விரும்பவில்லை. தன்னை வாக்னர் எதிர்த்ததாக அவர் நினைத்துவிட்டார்.. புடினை எதிர்த்தால் குலநாசம்தான். அதனால்தான் புடின் கொன்றுவிட்டார் என்று அமெரிக்க ராணுவ, பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பலர் சர்வதேச ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர்.

ராணுவம் போட்ட திட்டம்: நீக்கப்பட்ட விமானப்படை அதிகாரி: இன்னொரு பக்கம் பிரிகோஜின் மீது ரஷ்ய ராணுவம் கோபத்தில் இருந்தது. புடின் அனுமதியோடு ரஷ்ய ராணுவம்தான் பிரிகோஜினை தீர்த்து கட்டி உள்ளது. ரஷ்ய ராணுவம் பிரிகோஜின் உயிரோடு இருப்பதை விரும்பவில்லை. ரஷ்யாவின் விமானப்படை தளபதி செர்கோய் நேற்று காலைதான் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

Did Russia Putin order to kill the Wagner groups chief and top leaders in place crash?

இவர் பிரிகோஜின் உடன் நெருக்கமாக இருந்தார். அவர் நீக்கப்பட்ட இரவே பிரிகோஜின் மரணம் அடைந்தது சந்தேகத்தை தருகிறது. ரஷ்யாவின் ராணுவம் மூலம் மிஸைல் ஏவி பிரிகோஜின் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் அமெரிக்கா சந்தேகிக்கிறது.

விபத்து: இன்னொரு பக்கம் இது சாதாரண விபத்தாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் இவரின் உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. புடின் இதில் அதிகாரப்பூர்வமாக பேசவில்லை. எனவே பிரிகோஜின் சாகவில்லை. வேறு எதோ செய்வதற்காக சதித்திட்டம் தீட்டுகிறார்கள். பிரிகோஜின் செத்து இருக்க வாய்ப்பே இல்லை என்றும் ஒரு வாதம் வைக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+