For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ப்பா.. பதப்படுத்தப்பட்ட டைனோசர் கரு.. வளர்ந்த நிலையில் வெளியே வந்த எலும்பு.. சீனாவில் என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் கான்ஸு பகுதியில் படிமமாக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட டைனேசர் முட்டை ஒன்றில் முறையாக பதப்படுத்தப்பட்ட நிலையில் கரு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க பல நாடுகளில் இதுவரை டைனேசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. டைநேசர்கள் இருந்ததற்கான ஒரே ஆதாரமாக இந்த முட்டைகளும், அதன் எலும்புகளும் உள்ளன. ஆனால் இந்த முட்டைகள் எதுவும் குஞ்சு பொறிக்கும் திறன் கொண்டது கிடையாது.

ஏனென்றால் இதன் உள்ளே இருக்கும் கரு ஏற்கனவே ஒன்று அழிந்து போய் இருக்கும். அல்லது மொத்தமாக உறைந்து இருக்கும். வரலாற்று அடையாளமாக இந்த முட்டைகளை வேண்டுமானால் பாதுகாக்க முடியும்.

ராமர் பாலம், பருத்தித்துறையில் சீனா தூதர் ஆய்வு இந்தியாவுக்கு அச்சுறுத்தல்-தமிழ் அரசியல் கட்சி பகீர்ராமர் பாலம், பருத்தித்துறையில் சீனா தூதர் ஆய்வு இந்தியாவுக்கு அச்சுறுத்தல்-தமிழ் அரசியல் கட்சி பகீர்

டைனேசர் முட்டை

டைனேசர் முட்டை

ஆனால் தற்போது சீனாவில் கான்ஸு பகுதியில் படிமமாக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட டைனேசர் முட்டை ஒன்றில் முறையாக பதப்படுத்தப்பட்ட கரு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோழி முட்டையில் எப்படி குஞ்சு வெளியே வருவதற்கு முன் எம்ப்ரியோ இருக்குமோ அப்படி இரு நிலையில் இந்த கரு பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்துள்ளது. முறையாக வளர்ந்த நிலையில் இது காணப்பட்டுள்ளது.

எலும்புகள்

எலும்புகள்

டைனேசரின் முதுகு எலும்புகள் வளர்ந்து நீளமான தலை, வால், எலும்புகளோடு இந்த குஞ்சு இருந்துள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனேசர் முட்டைகளிலேயே மிகவும் முழுமையான எம்ப்ரியோ கொண்ட முட்டை இதுதான் என்று கூறப்படுகிறது. அதாவது முறையாக வளர்ந்த முட்டை. இது 72 - 66 மில்லியன் பழமை வாய்ந்த முட்டை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தனை வருடமாக இந்த முட்டை பதப்படுத்தப்பட்டுள்ளது.

டைனேசர் சீனா

டைனேசர் சீனா

இந்த முட்டைக்கு பேபி யிங்லியாங். இந்த டைனேசர் பல் இல்லாத தேரோபோட் டைனேசர் அல்லது ஓவிராப்டோரோசார் வகையில் ஏதாவது ஒன்றாக இது இருக்கலாம் என்று சீனா ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளனர். இதில் 7 செமீ நீளம் மற்றும் 8 செமீ அகலம். இதன் உள்ளே இருக்கும் குஞ்சு டைனேசர் 24 செமீ நீளம் கொண்டது. சுருண்ட நிலையில் உள்ளது.

டைனேசர் பேபி யிங்லியாங்

டைனேசர் பேபி யிங்லியாங்

கடந்த 2000ம் ஆண்டு Shahe Industrial Parkகிற்குஇந்த முட்டை Yingliang Stone Natural History Museum மூலம் வழங்கப்பட்டது. அதன்பின் அறைக்கு உள்ளேயே பதப்படுத்தப்பட்ட நிலையில் இந்த முட்டை இருந்தது. இந்த முட்டையில் இருந்து ஒரு சின்ன எலும்பு வெளியே நீட்டிக்கொண்டு இருந்துள்ளது. கரு வளர்ந்து முட்டைக்கு வெளியே எலும்பு வெளியே நீட்டிக்கொண்டு இருந்துள்ளது.

எலும்பு

எலும்பு

இதையடுத்தே இந்த முட்டையை வெளியே ஆராய்ச்சியாளர்கள் சோதனை செய்துள்ளனர்.இது வளைந்த நிலையில் காணப்பட்டு இருக்கிறது. ஆனால் இனி மேலும் வளருமா, அப்படியே இருக்குமா என்பதை பற்றி ஆராய்ச்சியாளர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. இதே எம்ப்ரியோ அளவிலேயே இந்த கரு இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்,

English summary
Dinosaur egg with perfectly grown embryo found in China which is 72 to 66 million-years-old.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X