யாருன்னு தெரியுதா?.. அதே "கள்ளக்காதல்" பிரபலம்தான்.. பாகிஸ்தானை தெறிக்க விடும் அமைச்சர் ஹீனா ரப்பானி
ஹீனா ரப்பானி வெளியுறவு துணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ஹீனா ரப்பானியை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துவிட முடியாது.. மீண்டும் லைம்லைட்டில் வந்துள்ளார் ஹீனா..!
பாகிஸ்தானில் அரசியல் குழப்பம் ஒரு முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய அமைச்சரவை உருவாகி உள்ளது.. பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசில் 31 கேபினட் அமைச்சர்கள் 3 இணை அமைச்சர்கள் உள்பட 34 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த அமைச்சரவையில், புதிய சுகாதார அமைச்சராக பாகிஸ்தான் மக்கள் கட்சி அப்துல் காதர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்..

அப்துல் காதர்
ஆனால், அவரது நியமனம் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது... அப்துல் காதர் மீது நில பேரம், மின்சார திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதாக இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.. அதேபோல, வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி காலியாக உள்ள நிலையில், வெளியுறவுத்துறை இணை அமைச்சராக ஹினா ரப்பானி கர் நியமிக்கப்பட்டுள்ளார்.. இந்த நியமனம்தான் பலரையும் வியப்புக்குள்ளாக்கி வருகிறது.

யார் இந்த ஹீனா ரப்பானி?
ஹீனா ரப்பானி அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்தை சேர்ந்தவர். இவரது அப்பா மாலிக் குலாம் நூர் ரப்பானி கர், அந்நாட்டின் மூத்த அரசியல்வாதியாவார்.. முன்னாள் அதிபர் முஷ்ரப் ஆட்சி காலத்தில் ஹீனா ரப்பானி பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-கியூ கட்சியின் உறுப்பினராக இருந்தவர்.. 2008-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

கமெண்ட்கள்
கடந்த 2011ம் ஆண்டில் பாகிஸ்தானை மட்டுமல்லாமல், உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்த பெண்தான் இவர்.. அப்போதே இவர் அமைச்சர்தான்.. அந்த நேரம் இவருக்கு வெறும் 33 வயதுதான்.. அப்போதும் வெளியுறவுத்துறை அமைச்சராகத்தான் பணியாற்றினார்.. சில சமயம், இவரது தோற்றத்தை வைத்து கமெண்ட்கள், விமர்சனங்கள் எழுந்தாலும், அத்தனையும் தன்னுடைய அதிரடி அரசியலால் நொறுக்கி காட்டியதுடன், மிக சிறந்த அறிவாளி என்ற பெயரை அதே மக்களிடம் பெற்றார்.. அந்த அவ்வளவுக்கு புகழ்மிக்க ஹீனா, இப்போது மீண்டும் அமைச்சராகி உள்ளார்.

ஹீனா ரப்பானி
பொதுவாக பாகிஸ்தான் பெண் அரசியல்வாதிகள் என்றாலே, படுசுறுசுறுப்பானவர்கள்.. துணிச்சலுடன் எதையும் எதிர்கொள்பவர்கள்.. பாகிஸ்தான் மண்ணில் இப்படியெல்லாம் தைரியமாக பெண்கள் பேசுவார்களா? என்ற வியப்பை தன்னுடைய செயல்பாடுகளால் ஏற்படுத்தியவர்தான் ஹீனா ரப்பானி... இவரை கிட்டத்தட்ட பெனாசிட் பூட்டோவுடன் ஒப்பிடலாம்.. காரணம், அவரது அபிமானிதான் இந்த ஹீனா.. அவரை போலவே திறமையாக பேசக்கூடியவர்.. மிகச்சிறந்த சிந்தனையாளர்..

பிலாவல்
ஆனால், வதந்திகளிலும் சிக்கி கொண்டவர். இவருக்கு கல்யாணம் ஆகியிருந்தபோதிலும், பெனாசிர் மகன் பிலாவலுடன் நெருங்கி பழகுவதாகவும், கணவரை விவாகரத்து செய்துவிட்டு, பிலாவலை மறுமணம் செய்ய போவதாகவும் வதந்திகள் தீயாய் பரவின.. இவர்கள் கள்ளக்காதல் குறித்து செய்தி வெளியிடாத நாளிதழ்களே அன்றைய தினம் இல்லை.. ஆனால், ஹீனா எதையும் கண்டுகொள்ளாமல் வழக்கம்போல தன்னுடைய வேலையைப் பார்த்து கொண்டுதான் இருந்தார்.

மீண்டும் பதவி
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக உள்ளவர்தான் இந்த பிலாவல். அநேகமாக வெளியுறவுத்துறை அமைச்சராக பிலாவல் நியமிக்க வாய்ப்புள்ளது.. ஏற்கனவே வெளியுறவு துறை இணை அமைச்சராக ஹீனா உள்ள நிலையில், பிலாவலும் வெளியுறவு துறை அமைச்சரானால், ஒன்றாக இணைந்து பணியாற்றும் சூழல் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications