18 வயதுக்கு மேலுள்ளோருக்கான வீடியோ பார்க்க பாஸ்போர்ட், அல்லது லைசென்ஸ் தேவை! ஆஸி.யில் யூடியூப் செக்
கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் யூடியூப் மற்றும் கூகுள் பிளேவில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான வசதிகளை சிறுவர்கள் பயன்படுத்தாமல் தடுக்க அந்நாட்டு பயனர்களிடம் ஓட்டுநர் உரிமம் அல்லது பாஸ்போர்ட் ஆவணங்களை கேட்டுப்பெற கூகுள் திட்டமிட்டு உள்ளது.
இணைய உலகின் ஜாம்பவானான கூகுள் தேடுபொறி மட்டுமின்றி யூடியூப், ஜி மெயில், ஆண்டிராய்டு, கூகுள் ப்ளே என பல்வேறு மென்பொருட்களையும், இணைய சேவைகளையும் நடத்தி வருகிறது. இதை நாளொன்றுக்கு உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர்.

வயது கட்டுப்பாடு
இணையத்தில் எந்த தகவலை எந்த வயதினர் பார்க்க வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளை நிறுவனங்கள் விதித்து வருகின்றன. அது ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடும். இருப்பினும் இணையதளத்தில் ஏதாவது ஒரு வழியில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கானக வசதிகளை சிறுவர்கள் பயன்படுத்துகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் அறிமுகம்
இதனை தடுக்க உலகிலேயே முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் பயனர்களுக்கு புதிய விதிகளை கொண்டு வர உள்ளது கூகுள் நிறுவனம். இதுகுறித்து அந்த நிறுவனத்தின் அரசியல் விவகாரத்துறை மூத்த மேலாளர் சமந்தா யார்கே தெரிவிக்கையில், வரும் மாதம் முதல் யூடியூப் மற்றும் கூகுள் ப்ளேவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான வசதிகளை சிறுவர்கள் பயன்படுத்தாமல் தடுக்க அந்நாட்டு பயனர்களிடம் ஓட்டுநர் உரிமம் அல்லது பாஸ்போர்ட் ஆவணங்களை கட்டாயமாக்க இருக்கிறோம்.

வயசுக்கு மீறிய வீடியோ
இணைய சேவை நிறுவனங்கள் சிறுவர்கள் வயதுக்கு மீறிய வசதிகளை பயன்படுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆஸ்திரேலிய ஆன்லைன் பாதுகாப்பு விதிகள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை வயதுக்கு மீறிய செயல்பாடுகளை தடுக்கும் வகையில் எடுக்கப்படுகிறது.

பாஸ்போர்ட் தேவை
18 வயதுக்கும் மேற்பட்டோருக்கான வீடியோக்களை யூடியூபில் இனி பார்க்க வேண்டுமென்றால் நாம் கேட்கும் அரசு ஆவணங்களை வழங்க வேண்டும். கூகுள் அல்லாத பிற தளங்கள் வாயிலாக தடுக்கப்பட்ட வீடியோக்களை பார்க்க முயன்றாலும் யூடியூபுக்கு திருப்பிவிடப்படுவார்கள். அதே நேரம் கூகுள், யூடியூப் போன்ற தளங்களை கல்வி மற்றும் பொழுதுபோக்கிற்காகவும் ஏராளமானோர் பயன்படுத்துகிறார்கள்." என அவர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications