For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொருளாதார தடையை நீக்க உதவுங்கள்.. இல்லையெனில் அணுஒப்பந்தத்தை மீறுவோம்.. ஈரான் அதிரடி

Google Oneindia Tamil News

தெஹ்ரான்: அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளில் இருந்து மீள்வதற்கான வழி கிடைக்காவிடில், அணுசக்தி ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறுவதை தவிர வேறு வழியில்லை என ஈரான் எச்சரித்துள்ளது.

வங்கி மற்றும் எண்ணெய் துறைகளில் அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளால், ஈரான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொறுமையிழந்துள்ள ஈரான் அரசு, அணுசக்தி ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்டுள்ள சில கட்டுப்பாடுகளை பின்பற்றப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.

Echo of US economic sanctions.. Iran plans to increase uranium production

மேலும் அடுத்து வரும் 60 நாட்களில் அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளில் இருந்து ஈரான் மீள வழிவகை செய்ய வேண்டும் என்று ஐநா உறுப்பு நாடுகளை அந்நாட்டு அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மகனுக்கு பெயர் சூட்டியது அரச குடும்பம்.. என்ன பெயர் தெரியுமா?பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மகனுக்கு பெயர் சூட்டியது அரச குடும்பம்.. என்ன பெயர் தெரியுமா?

ஈரான் இந்த சிக்கலில் இருந்து மீள வழி ஏற்படாவிட்டால், அணுசக்தி ஒப்பந்தத்தின் பல கட்டுப்பாடுகளை கைவிடும் சூழல் உருவாகும் என அதிபர் ஹசான் ருஹானி எச்சரித்துள்ளார்.

அணுசக்தி ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக, அணு ஆயுதங்களில் எரிபொருளாகப் பயன்படுத்தக் கூடிய அளவுக்கு யுரேனியத்தை தயாரிக்கும் பணியில் ஈரான் ஈடுபடும் என கூறியுள்ளார்.

ஆனால் அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகள் சிலவற்றைப் புறக்கணிக்கும் ஈரானின் முடிவு வரவேற்கத்தக்கது அல்ல. இதுபோன்ற அறிவிப்புகள் பதற்றத்தை அதிகரிக்கவே செய்யும். ஈரானின் இந்த முடிவு மிகவும் கவலையளிப்பதாக பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க் ஃபீல்டு கூறியுள்ளார்

தீவிரவாதிகளுக்கு ஆயுதம் தயாரித்து அளிப்பதாக குற்றம்சாட்டிய மெரிக்கா ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு வெளியேறியது அதன் பின் ஈரான் மீது பல பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன குறிப்பாக ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய உலக நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்ததால் ஈரானின் பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது

English summary
Iran has warned that unless there is a way to recover from the sanctions imposed by the US, there is no way other than violating the restrictions contained in the nuclear deal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X