For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1 நிமிடம் எலான் மஸ்கையே.. திக்கி திணறடித்த ரஷ்யா.. மொத்த டீமையும் இறக்கிய Space X.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

மாஸ்கோ: உக்ரைன் போரில் முக்கிய கவனம் ஈர்த்து இருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கிற்கு முக்கியமான சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே எலான் மஸ்க் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறார். முக்கியமாக ஸ்பேஸ் ஸ்டேஷனை இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது தள்ளிவிடுவோம் என்று ரஷ்ய விண்வெளி மைய இயக்குனர் மிரட்டியதற்கு நான் ஸ்பேஸ் எக்ஸ் மூலம் ஸ்பேஸ் ஸ்டேஷனை காப்பாற்றுவேன் என்று நம்பிக்கை அளித்தார் எலான் மஸ்க்.

அது மட்டுமின்றி எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும், அணு மின் நிலைய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று பல விஷயங்களை எலான் மஸ்க் பேசி வருகிறார்.

நீடிக்கும் போர்.. தவிக்கும் இந்திய மாணவர்கள்.. உக்ரைன் அதிபருடன் போனில் பேசுகிறார் பிரதமர் மோடி நீடிக்கும் போர்.. தவிக்கும் இந்திய மாணவர்கள்.. உக்ரைன் அதிபருடன் போனில் பேசுகிறார் பிரதமர் மோடி

ஸ்டார் லிங்க்

ஸ்டார் லிங்க்

அவரின் ஸ்டார் லிங்க் செயற்கைகோள்கள் இந்த விவகாரத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது. அதை பற்றி பார்க்கும் முன் ஸ்டார் லிங்க் பற்றி தெரிந்து கொள்வோம். எலான் மஸ்க் தனது ஸ்டார் லிங்க் திட்டத்திற்காக கடந்த 2 வருடமாக 2200 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி உள்ளார். உலகிலேயே ஒரு திட்டத்திற்காக அதிகம் அனுப்பப்பட்ட செயற்கைகோள்கள் இதுதான்.

இணையம் எப்படி?

இணையம் எப்படி?

இந்த ஸ்டார் லிங்க் என்பது நமக்கு இணையம் வழங்க போகும் புதிய திட்டம் ஆகும். உலகம் முழுக்க கடலுக்கு அடியில் கேபிள் மூலமே இணையம் வழங்கப்பட்டு வருகிறது. பிராட் பேண்ட் மூலம் வீடுகளுக்கு வழங்கப்படுகிறது. டவர்கள் மூலம் போன்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் டிஷ் போல நேரடியாக வீட்டில் டிஷ் வைத்து இணையத்தை சாட்டிலைட் மூலம் பெறும் வசதி கிடையாது. ஆனால் ஸ்டார் லிங்க் பயனாளிகள் வீட்டில் டிஷ் வைத்து இணையத்தை பெற முடியும்.

உக்ரைன் இணையம்

உக்ரைன் இணையம்

டிஷ் டிவி போலவே.. இது இணையத்தை வழங்கும். இப்போது விஷயத்திற்கு வருவோம். ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் இணையம் நிறுத்தப்பட்டு உள்ளது. டவர்கள் செயல் இழந்து உள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கும், செய்தியாளர்களுக்கு இணையம் வழங்கும் வகையில் ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் சிலவற்றை எலான் மஸ்க் உக்ரைன் நோக்கி திருப்பி உள்ளார்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

உக்ரைன் நாட்டின் டிஜிட்டல் அமைச்சர் மைக்கிலோ கோரிக்கையை தொடர்ந்து இந்த செயலை எலான் மஸ்க் செய்தார். அவரின் இந்த செயல் பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது. உக்ரைன் தொடர்பான வீடியோக்கள் பலவற்றை நாம் இப்போது பார்க்க ஸ்டார் லிங்க்தான் காரணம். உக்ரைனில் ரஷ்யா தொலைத்தொடர்புகள் மட்டுமே இயங்கி வந்த நிலையில்தான் எலான் மஸ்க் தனது ஸ்டார் லிங்க் மூலம் உக்ரைன் மக்களுக்கு இணையம் கொடுத்துள்ளார்.

ஸ்பேஸ் எக்ஸ்

ஸ்பேஸ் எக்ஸ்

இந்த இணையம் காரணமாக உக்ரைன் போர் குறித்த விவகாரங்கள் உடனுக்குடன் வெளியே தெரிய தொடங்கி உள்ளது. உக்ரைன் பற்றி மக்கள் நொடிக்கு நொடி தெரிந்து கொண்டு வருகிறார்கள். வீட்டில் சிறிய அளவிலான ஆன்டென்னாவை வைத்து மக்கள் இணையத்தை பெற்று வருகிறார்கள். வரும் நாட்களில் மேலும் சில செயற்கைகோள்களை அனுப்பி இன்னும் அதிக பேருக்கு இணையத்தை ஏற்படுத்த எலான் மஸ்க் உறுதி அளித்துள்ளார்.

ரஷ்யா அத்துமீறல்

ரஷ்யா அத்துமீறல்

சரி இந்த விஷயத்தில்தான் தற்போது ரஷ்யா தலையிட்டுள்ளது. அதன்படி ரஷ்யா தனது சைபர் படை மூலம் இந்த ஸ்டார் லிங்க் சிக்னலை பிளாக் செய்து வருகிறது. பெரிய அளவிலான ஜாமர்கள் மூலம் ரஷ்யா இந்த சிக்னலை பிளாக் செய்து வருகிறது. எலான் மஸ்க் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்காத நிலையில் திடீரென இந்த பிளாக் காரணமாக உக்ரைனில் பல்வேறு இடங்களில் சிக்னல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஸ்டார் லிங்க் சில இடங்களில் இணையம் வழங்க முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இணையம் போச்சு

இணையம் போச்சு

பல மணி நேரங்களுக்கு போர் நடக்கும் இடங்களில் இதனால் இணையம் துண்டிக்கப்படுகிறது என்று மஸ்க் தெரிவித்துள்ளார். இதற்காக தற்போது புதிய சைபர் டிபன்ஸ் டீம் ஒன்றை களமிறக்கி உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இவர்கள் தற்போது ஜாம்மிங் செய்வதற்கு எதிராக ஸ்டார் லிங்கை இயக்குவது தொடர்பாக ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். விரைவில் இதற்கு தீர்வு எட்டப்படும் என்று கூறப்படுகிறது.

Recommended Video

    வான் பகுதியை தடை செய்தால் அவ்வளவு தான்.. மேற்கு உலக நாடுகளுக்கு Putin எச்சரிக்கை
    அதிபர் செலன்ஸ்கி நன்றி

    அதிபர் செலன்ஸ்கி நன்றி

    முன்னதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி எலான் மஸ்க்கிடம் போனில் பேசினார். அதில் எங்கள் நாட்டிற்கு இணையம் கொடுத்ததற்கு நன்றி என்று அவர் கூறினார். போர் முடிந்த பின் மஸ்க்கை உக்ரைன் வரும்படி அவர் கோரிக்கை விடுத்து இருந்தார். இது போக மஸ்க்கை அடுத்த அமெரிக்க அதிபராக்க வேண்டும் என்று அமெரிக்கர்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    Space X Elon Musk says Starlink network is jammed in war-affected area in Ukraine.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X