For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆப்கனில் இந்திய, பாகிஸ்தான் தூரகங்கள் அருகே குண்டு வெடிப்பு, துப்பாக்கி சண்டை

By Veera Kumar
Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள இந்திய துணை தூதரகங்களின் அருகே இன்று அடுத்தடுத்து குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடந்துள்ளன. பாகிஸ்தான் தூதரகமும் அருகேயுள்ளதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

ஆப்கனின், ஜலாலாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சுமார் 200 மீட்டர் அருகே இன்று காலை வெடிகுண்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.

இச்சம்பவம் நடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே தூதரகத்தை சுற்றி துப்பாக்கிச் சூடு தாக்குதலும் நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

3வது தாக்குதல்

3வது தாக்குதல்

கடந்த 10 நாட்களில் இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்படும் 3-ஆவது தாக்குதல் இதுவாகும். தூதரகத்தில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.

அமைதி பேச்சுக்கு குந்தகம்

அமைதி பேச்சுக்கு குந்தகம்

தலிபான்களுடன் பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இருந்த நிலையிலும், இந்தியா, பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை துவங்க இருந்த நிலையிலும் இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

பாக். மீது சந்தேகம்

பாக். மீது சந்தேகம்

ஏற்கனவே இந்திய தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவம் தான் காரணம் என ஆப்கான் போலீசார் அறிக்கை அளித்துள்ள நிலையில், இன்று மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல், துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்துவருவது பாகிஸ்தான் மீதான சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.

விவரம்

விவரம்

இத்தாக்குதலில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை, சண்டை முடிவுக்கு வந்த பிறகு முழு தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Explosion and gun fire heard near India and Pakistan consulate in Afghanistan, Officials still to confirm the casualties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X