For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வறுமை நாடான ஜாம்பியாவிற்கு இலவச இண்டர்நெட்... பேஸ்புக் திட்டம்

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் உள்ளவர்களுக்காக, இலவச இணையதள வசதியை பேஸ்புக் செய்து கொடுத்துள்ளது. இதற்காக ஒரு விசேஷ ஆப்பையும் அது அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் ஜாம்பியா மக்கள் தங்களது செல்போன் மூலம், எந்த ஒரு டேட்டா தேவையும் இல்லாமல் பேஸ்புக்கை இலவசமாக பார்க்கலாம்.

இதற்கு அவர்கள் செய்ய வேண்டியது Internet.org என்ற இணையதளத்திற்குப் போய் தங்களது செல்போனில் அந்த இலவச அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய வேண்டியது மட்டும் தான்.

13 வித இணைய தளங்கள்...

13 வித இணைய தளங்கள்...

அதன் பின்னர் பேஸ்புக், விக்கிபீடியா உள்பட 13 விதமான இணையதளங்களை ஜாம்பியா மக்கள் இலவசமாக பார்த்து பயன் பெறலாம்.

கூட்டணி...

கூட்டணி...

இந்த சிறப்பு வசதிக்காக நோக்கியா, சாம்சங் போன்ற செல் போன் நிறுவனங்களுடன் பேஸ்புக் கை கோர்த்துள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்காக...

பொருளாதார வளர்ச்சிக்காக...

இன்டர்நெட் பயன்பாட்டை ஜாம்பியாவில் பிரபலப்படுத்தவும், அதிகரிக்கவும் இந்த முயற்சியை எடுத்துள்ளது பேஸ்புக். மேலும் இன்டர்நெட் மூலம் சுகாகாதார பாதுகாப்பை ஊக்குவிக்கும் முயற்சியாகவும், பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கையை பேஸ்புக் எடுத்துள்ளது.

வருமானம் அதிகரிக்கும்...

வருமானம் அதிகரிக்கும்...

இதுகுறித்து பேஸ்புக் கூறுகையில், இணையதள பயன்பாடு என்பது பொருளாதார வளர்ச்சிக்கும் வித்திடும். இதன் மூலம் ஜாம்பியாவில் உள்ள பல இணையதள சேவையாளர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். அதன் மூலம் நாட்டுக்கும், அரசுக்கும் வருவாய் அதிகரிக்கும். உபயோகிப்பாளர்களுக்கும் பல்வேறு நல்ல தகவல்களை அறிந்து கொள்ள வழி பிறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறுமை நாடு...

வறுமை நாடு...

மிகவும் வறுமையான நாடான ஜாம்பியாவில் சிலரிடமே இணையதள வசதி உள்ளது. எனவேதான் இலவச சேவையை பேஸ்புக் அங்கு அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Facebook has launched a free app that provides limited internet access to people in the African nation Zambia who have mobile phones without data plans.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X