For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாழ்க்கை வட்டம்டா.. வேலை தர மறுத்த பேஸ்புக்குக்கு '1 லட்சம் கோடி' ஆப்பு வைத்த 'வாட்ஸ் ஆப்' ஆக்டன்!

Google Oneindia Tamil News

சிலிக்கான் வேலி: இன்று கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி விலை கொடுத்து வாட்ஸ் ஆப் நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளது பேஸ்புக்.. ஆனால் அதன் இணை நிறுவனரான பிரையன் ஆக்டனுக்கு ஒரு காலத்தில் வேலை கொடுக்க மறுத்த நிறுவனம்தான் பேஸ்புக்.

வாழ்க்கை ஒரு வட்டம்டா.. என்று விஜய் பேசிய வசனம்தான் இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது... அன்று யாரை நிராகரித்ததோ இன்று அவரிடமிருந்தே, அவரது நிறுவனத்தை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது பேஸ்புக்.

அன்றே பிரையனுக்கு வேலை கொடுத்திருந்தால் இந்த ஒரு லட்சம் கோடி நிச்சயம் பேஸ்புக்குக்கு மிச்சமாகியிருக்கும்..

பிரமிக்க வைக்கும் பிரையன் கதை

பிரமிக்க வைக்கும் பிரையன் கதை

பிரையன் கதை நிச்சயம் பிரமிக்கத்தக்க ஒன்று.. யார் நம்மை நிராகரித்தாலும்.. அதிலிருந்து வீறு கொண்டு மீண்டெழுவது எப்படி என்ற தத்துவமே அவரது வாழ்க்கையில் அடங்கியுள்ளது.

4 வருடத்திற்கு முன்பு பேஸ்புக் வாசலில்

4 வருடத்திற்கு முன்பு பேஸ்புக் வாசலில்

இதே பிரையன் நான்கு வருடங்களுக்கு முன்பு பேஸ்புக் நிறுவன வாசலில் வேலை கேட்டு போய் நின்றார்... ஆனால் அவருக்குக் கிடைத்த பதில்.. நீ வேண்டாம் போ என்பதே.

இன்று பிரையன் வீட்டு வாசலில் பேஸ்புக்

இன்று பிரையன் வீட்டு வாசலில் பேஸ்புக்

ஆனால் இன்று பிரையன் வீட்டு நிறுவன வாசலில் வந்து அவரது நிறுவனத்தை இரு கைகளையும் ஏந்தி வாங்கியுள்ளது பேஸ்புக்.. இதுதான் வாழ்க்கை.

 விரக்தியில் போட்ட டிவிட்டர் செய்தி

விரக்தியில் போட்ட டிவிட்டர் செய்தி

பேஸ்புக்கிடம் வேலை கேட்டுப் போய் அவர்கள் நிராகரித்தவுடன் அதை டிவிட்டரில் போட்டிருக்கிறார் பிரையன். அதில், என்னை பேஸ்புக் நிராகரித்து விட்டது. அருமையான மக்களுடன் இணைந்திருக்கக் கிடைத்த வாய்ப்பு அது. வாழ்க்கையின் அடுத்த சாதனைக்காக காத்திருக்கிறேன்.. என்று கூறியுள்ளார் பிரையன்.

 மாபெரும் சாதனையாளராக

மாபெரும் சாதனையாளராக

பேஸ்புக் நிராகரித்ததால் சோம்பிப் போய் உட்கார்ந்து விடவில்லை பிரையன். தனது கடினமான உழைப்பால் தன்னைத் தேடி வர வைத்து விட்டார் பேஸ்புக்கை.. தனது வாட்ஸ் ஆப் சாதனையால்.

 அட.. டிவிட்டரும் கூட ரிஜெக்ட் செய்ததாம்...

அட.. டிவிட்டரும் கூட ரிஜெக்ட் செய்ததாம்...

பேஸ்புக்கில் வேலை கிடைக்கவில்லையே என்று விரக்தியில் டிவிட்டரில் செய்தி போட்டிருந்தார் அல்லவா பிரையன்.. சோகம் என்னவென்றால், அதே டிவிட்டரும் கூட பிரையனை ஒரு கட்டத்தில் நிராகரித்த நிறுவனம்தான்.

நாமெல்லாம் ..!

நாமெல்லாம் ..!

நாமெல்லாம் முட்டையிலிருந்து கோழி வந்துச்சா.. இல்லாட்டி கோழியிலிருந்து முட்டை வந்துச்சா என்று கதை பேசிக் கொண்டிருக்கிறோம்.. ஆனால் பிரையனைப் பாருங்கள்... ஒரு முட்டைக்குப் பக்கத்தில் எத்தனை முட்டையைப் போட்டு பேஸ்புக்கை ஆட்டிப் படைத்து விட்டார் என்று...!

English summary
Here’s an inspiring story on perservering in spite of rejection. Four years after Facebook turned him down for a job, WhatsApp co-founder Brian Acton is now selling his company to Facebook for as much as $19 billion.
 We love how upbeat Acton’s 2009 tweet is as he opines about “life’s next adventure.” That
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X