இவ்வளவு பெரிய முட்டையா? இது எப்புடி கோழியில் இருந்து வெளியே வந்தது?ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்
ஆஸ்திரேலிய கோழிப்பண்ணையில் கோழி ஒன்று போட்ட மிகப்பெரிய முட்டை வைரலாகியுள்ளது.
Recommended Video

சிட்னி: ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு முட்டை பண்ணையில், வழக்கத்துக்கு மாறாக சாதாரண முட்டையின் அளவைவிட மூன் று மடங்கு பெரிய சைஸ் முட்டையை கோழி ஒன் று போட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் காய்ன்ஸ் எனும் இடத்தில், ஸ்காட் ஸ்டாக்மேன் என்பவர் முட்டை பண்ணை நடத்தி வருகிறார். இருதினங்களுக்கு முன்பு இவரது பண்ணையில் வியக்கதக்க சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
அதாவது அங்கிருக்கும் கோழி ஒன் று பெரிய சைஸ் முட்டை போட்டுள்ளது. சாதாரண முட்டை 58 கிராம் எடை இருக்கும். ஆனால் இந்த முட்டை மூன் று மடங்கு அதிகமாக 178 கிராம் எடையுடன் உள்ளது.

ஒப்பீடு...
இதைக் கண்டு ஆச்சரியமடைந்த பண்ணையின் உரிமையாளர், அந்த முட்டையை எடுத்து எல்லோரிடமும் காட்டியுள்ளார். பிறகு அந்த முட்டையை தனியாகவும், மற்ற சாதாரண முட்டைகளுடனும் வைத்து போட்டோ எடுத்துள்ளார்.

முட்டைக்குள் முட்டை...
ஏற்கனவே முட்டையைப் பார்த்து ஆச்சர்யத்தில் இருந்த பண்ணையின் உரிமையாளருக்கு மற்றொரு ஆச்சர்யமும் காத்திருந்தது. அதாகப்பட்டது பெரிய முட்டையை உடைத்தபோது, அதற்குள் சின்ன சைஸ் முட்டை ஒன்று இருந்தது.

பேஸ்புக்கில் போட்டோ...
அதையும் புடைப்படம் எடுத்த ஸ்காட் ஸ்டாக்மேன், இதனை ஃபேஸ்புக்கில் போட்டுள்ளார். இதையடுத்து இந்த பெரிய சைஸ் முட்டை விஷயம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

எப்படி சாத்தியம்...
ஒரு கோழி இவ்வளவு பெரிய முட்டையை போடுவதற்கு வாய்ப்பே இல்லை என வியக்கும் விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள், ‘கோழியில் இருந்து முட்டை வந்ததா? இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என நாம் கேள்விக்கேட்டுக் கொண்டிருக்கையில், இவ்வளவு பெரிய முட்டை எப்படி கோழியில் இருந்து வெளியே வந்தது?' என தலையை சொறிந்து கொண்டிருக்கிறார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications