For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரானுடன் சண்டை.. முக்கியமான நேரத்தில் டிரம்பிற்கு போன் செய்த மோடி.. திடீர் பேச்சு.. என்ன பின்னணி?

ஈரானுடன் அமெரிக்கா போர் செய்ய தயார் ஆகி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பிரதமர் மோடி போனில் உரையாடி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    முற்றும் அமெரிக்கா ஈரான் மோதல்... மூன்றாம் உலக போர் வெடிக்குமா ?

    டெஹ்ரான்: ஈரானுடன் அமெரிக்கா போர் செய்ய தயார் ஆகி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பிரதமர் மோடி போனில் உரையாடி இருக்கிறார்.

    கடந்த வாரம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் டிரோன் விமானம் மூலம் நடத்தியது. இந்த தாக்குதலில் முக்கியமான ஈரான் தலைவர்கள் சிலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.

    இதனால் ஈரான் அமெரிக்காவை பழி வாங்க துடித்துக் கொண்டு இருக்கிறது. உலக நாடுகளுக்கு இடையில் இது மிகப்பெரிய போரை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் அதிபர் டிரம்ப் உடன் பிரதமர் மோடி போனில் பேசி உள்ளார்.

    டிரம்ப் தலையை கொண்டு வந்தால் 80 மில்லியன் டாலர்.. ஈரானில் ஷாக்கிங் விளம்பரம்.. பழிவாங்க அழைப்பு!டிரம்ப் தலையை கொண்டு வந்தால் 80 மில்லியன் டாலர்.. ஈரானில் ஷாக்கிங் விளம்பரம்.. பழிவாங்க அழைப்பு!

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    பிரதமர் மோடி தனது உரையாடலில், அதிபர் டிரம்பிற்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது வாழ்த்துக்கள். அமெரிக்க மக்கள் நல்ல நலத்துடன், வளத்துடன் இருக்க இந்தியா சார்பாக வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டார்.

    உறவு எப்படி

    உறவு எப்படி

    இரண்டு நாடுகளுக்கு இடையில் இருக்கும் உறவு குறித்தும் இதில் ஆலோசனை செய்துள்ளனர். கடந்த ஆண்டுகளில் இரண்டு நாட்டு உறவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நிறைய சாதனைகளை அமெரிக்காவும், இந்தியாவும் கைகோர்த்து செய்துள்ளது.

    ஒன்றாக செயல்பட வேண்டும்

    ஒன்றாக செயல்பட வேண்டும்

    இனியும் அமெரிக்காவும், இந்தியாவும் ஒன்றாக செயல்பட வேண்டும். இரண்டு நாட்டு உறவு எப்போதும் போல ஒற்றுமையாக இருக்க வேண்டும். உலக அரங்கில் இரு நாடுகளும் ஒன்றாக முன்னேற வேண்டும் என்று இவர்கள் பேசி இருக்கிறார்கள்.

    வேறு காரணம்

    வேறு காரணம்

    ஆனால் இந்த உரையாடலுக்கு வேறு காரணம் உள்ளது என்கிறார்கள். இதற்கு பின் ஈரான் உடன் அமெரிக்கா செய்து வரும் சண்டைதான் காரணம் என்று கூறுகிறார்கள். ஈரானுடன் போர் வந்தால் பெரும்பாலும் இந்தியா அமெரிக்கா பக்கம் இருக்கும். அமெரிக்காவிற்கே இந்தியா ஆதரவு அளிக்கும் என்று கூறுகிறார்கள்.

    கூட்டு

    கூட்டு

    அமெரிக்காவை சீனாவும், பாகிஸ்தானும் எதிர்க்க வாய்ப்புள்ளது. இதனால் அவர்களுக்கு எதிராக இந்தியா களமிறங்கும். அதற்கு ஒரு முன்னோட்டமாகத்தான் மோடி, இன்று டிரம்ப் உடன் போனில் பேசினார் என்று கூறுகிறார்கள்.

    English summary
    Fight With Iran: PM Modi talked with US President Trump about many issues.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X