'தாலிபான் முகம் மாறுகிறதா'? 'உண்மையில் அவர்கள் பிளான் தான் என்ன'? காபூல் ஏர்போர்டில் நடந்த சம்பவம்!
காபூல் : ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், முதல் முறையாக காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் அமெரிக்கர்கள் உட்பட சுமார் 100 பயணிகள் தோஹா வந்தடைந்தனர். அமெரிக்க தலைமையிலான வெளியேற்றம் முடிவடைந்த பின்னர் வெளிநாட்டினரை அழைத்துச் சென்ற முதல் விமானம் இதுதான்.
Recommended Video
தாலிபன்கள் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி காபூலை கைப்பற்றியபின்னர் மொத்த ஆப்கானிஸ்தானும் அவர்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அவர்கள் கட்டுப்பாட்டில் வந்த நாளில் இருந்து அடுத்த 16 நாட்கள், அதாவது ஆகஸ்ட் 31 வரை ஏராளமான அமெரிக்கர்கள், அமெரிக்காவிற்காக வேலை செய்தவர்கள். அரசு ஊழியர்கள் நாட்டை விட்டு தப்பி ஓடினர்.
இந்நிலையில் அமெரிக்கா ஆகஸ்ட் 31ம் தேதி படைகளை வாபஸ் பெற்ற பின்னர், புதிதாக ஆப்கானிஸ்தானில் இருந்து அகதிகளாகவோ அல்லது அமெரிக்கர்கள் உள்பட வெளிநாட்டினரோ வெளியேற முடியாமல் தவித்து வந்தனர்.

அமெரிக்கர்கள்
ஆனால் அமெரிக்கா உள்பட மேற்கு நாடுகள் வைத்த கோரிக்கையை ஏற்று தாலிபன்கள், ஆப்கனில் சிக்கி தவித்த அமெரிக்கர்கள், கனடியர்கள், ஜெர்மனியர்கள் உள்பட சுமார் 113 பயணிகள் வெளியேற அனுமதித்தனர்.

விமானம் வந்தது
கத்தார் ஏர்வேஸ் போயிங் 777 விமானத்தில் அமெரிக்கர்கள், கனடியர்கள், ஜெர்மனியர்கள் மற்றும் உக்ரேனியர்கள் உட்பட "சுமார் 113" பயணிகள் காபூலில் இருந்து புறப்பட்டு கத்தார் தலைநகர் தோஹா வந்தனர். குழந்தைகள், பெண்கள் என பலர் சூட்கேஸ்களுடன் நிம்மதி பெருமூச்சுடன் தோஹா வந்திறங்கினர்.

120000 பேர்
ஆப்கானிஸ்தான் அகதிகளின் முக்கிய போக்குவரத்து மையமான கத்தார் தலைநகர் தோஹா நகரம் விளங்குகிறது. காபூல் விமான நிலையத்தில் வரும் மக்களை அனுமதிப்பதுடன் அவர்களுக்கு உதவிகளை செய்கிறது. கடந்த மாதம் மட்டும 120,000 -க்கும் மேற்பட்டவர்கள், கத்தாரின் ஹமத் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி உள்ளனர். அங்கிருந்து அவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு சென்றுவிடுவார்கள்

கத்தார் துருக்கி
தாலிபன்கள் அளித்த ஒத்துழைப்பின் காரணமாகவே வெளிநாட்டு பயணிகள், காபூலில் இருந்து பத்திரமாக சென்றுள்ளனர். தாலிபன்களின் இந்த புதிய நடவடிக்கை சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரை சொந்த நாடுகளுக்கு செல்ல அனுமதிக்கும் தாலிபன்களின் இந்த செயலுக்கு அவர்களுடன் நெருக்கமாக உள்ள கத்தார், துருக்கி உள்பட பல்வேறு நாடுகள் வரவேற்றுள்ளன.

கத்தார் பாராட்டு
கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான், தாலிபன்களின் செயலை பாராட்டினார். சொன்னபடியே நடந்து கொள்ளும் இந்த நேர்மையைத்தான்.. தலிபான்களிடமிருந்து நாங்கள் உண்மையில் எதிர்பார்க்கிறோம். இது ஒரு பாசிட்டிவ் செய்தி என்று நான் நினைக்கிறேன், நாங்கள் ஆதரிக்கிறோம்." என்றார்.

தாலிபன்கள் திட்டம்
பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உட்பட பல நாடுகள் தங்கள் தூதரகங்களை காபூலில் இருந்து தோஹாவுக்கு மாற்றிய நிலையில், தாலிபன்களின் இந்த மனமாற்றத்தால், காபூலுக்கு மீண்டும் வெளிநாட்டு தூதர்கள் வர அதிக வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலையில் தாலிபன்கள் ரஷ்யா உடன் நெருக்கமாக இருக்கும் அதேநேரம், அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுடன் சுமூகமான போக்கை கடைபிடிக்க விரும்புவதாக தெரிகிறது. எனவே வரும் நாட்களில் தாலிபன்கள் ஆட்சி எப்படி இருக்கும் என்பது புதிய ஆட்சிஅமைந்த பின்னர் தெரியும்,
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications