சூரியனை விட 40 லட்சம் மடங்கு பெரியது! ஒளியை கூட விட்டு வைக்காதாம்.. இது தான் அந்த பிளாக் ஹோல்
பாரீஸ்: நமது பால்வெளி மண்டலத்தில் உள்ள பிளாக் ஹோல் எனப்படும் மிகப் பெரிய கருந்துளையின் படம் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
பால்வெளி மண்டலத்தில் உள்ள ஏகப்பட்ட பிளாக் ஹோல்கள் எனப்படும் கருந்துளைகள் உள்ளன. பிளாக் ஹோல்களில் இருந்து அபரிவிதமான ஆற்றல் வெளிவரும்.
இந்த பிளாக் ஹோல்கள் குறித்து உலகெங்கும் ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே பால்வெளியில் உள்ள மிகப் பெரிய பிளாக் ஹோலின் படம் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

பிளாக் ஹோல் படம்
ஹொரைசன் தொலைநோக்கி கோலாப்ரேஷன் என்று அழைக்கப்படும் சர்வதேச விஞ்ஞானிகளின் குழுவால் இந்த படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பிளாக் ஹோலின் இருப்பு உறுதி செய்து பல ஆண்டுகள் ஆகும் நிலையில், இதன் படம் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. Sagittarius A* என்று அழைக்கப்படும் இந்த பிளாக் ஹோலின் படத்தை மக்களிடம் காட்டுவதில் மகிழ்ச்சி அடைவதாக EHT திட்ட இயக்குநர் லாங்கேவெல்டே தெரிவித்தார்.

ஈர்ப்பு விசை தீவிரமானது
பிளாக் ஹோல்கள் எனப்படும் இந்த கருந்துளைகளில் இருக்கும் ஈர்ப்பு விசை மிக மிகத் தீவிரமானது. இந்த கருந்துளைகளில் இருந்து ஒளி உட்பட எதுவும் வெளியேற முடியாது. அந்தளவுக்கு அதன் ஈர்ப்பு விசை மிகத் தீவிரமானதாக இருக்கும். இந்த படம் நமது பால்வெளி மண்டலத்தில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடைபெறும் என்பதைப் புரிந்து கொள்ள உதவும் வகையில் இருக்கும் என்று லாங்கேவெல்டே தெரிவித்தார்.

40 லட்சம் மடங்கு
ஆனால், இப்போது வெளியிடப்பட்டுள்ள இந்தப் படம் பிளாக் ஹோலின் படம் இல்லை. ஏனென்றால் பிளாக் ஹோல் என்பது முற்றிலும் இருட்டாக இருக்கும். ஆனால் அதைச் சுற்றி ஒளிரும் வாயு இருக்கும். அதுதான் இந்த படத்தில் உள்ளது. மேலும், இது நமது சூரியனை விட 40 லட்சம் மடங்கு பெரியதாகும். கடந்த 1974ஆம் ஆண்டு கேலக்ஸியின் மையத்தில் அசாதாரண ரோடியோ சோர்ஸ் கண்டறியப்பட்டதன் மூலம் இதன் இருப்பு முதல்முறையாக உறுதி செய்யப்பட்டது.

27 ஆயிரம் ஒளி ஆண்டுகள்
இந்த பிளாக் ஹோல் பூமியில் இருந்து சுமார் 27 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. அத்தனை தொலைவில் உள்ளதால் இது பூமியில் இருந்து பார்க்கும்போது, நிலவைப் போலவே காட்சி தருகிறது. இதேபோல கடந்த 2019ஆம் ஆம்டில் M87 என்ற பிளாக் ஹோலின் படமும் இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த M87 பிளாக் ஹோலுக்கும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள Sagittarius A பிளாக் ஹோலுக்கும் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன.

என்ன ஒற்றுமை
இருந்த போதிலும் M87 பிளாக் ஹோலை Sagittarius A பிளாக் ஹோல் சுமார் 2000 மடங்கு சிறியதாகும். இந்த M87 பிளாக் ஹோல் Messier 87 என்ற கேலக்ஸியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரு பிளாக் ஹோல்களின் வெளிப்புறங்கள் ஒரே மாதிரியான காட்சி அளிப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications