உலகின் “மாசுமருவில்லா” 100 கேரட் வைரத்தை வாங்க ரெடியா? – விலை வெறும் 156 கோடிதான்!

Subscribe to Oneindia Tamil

ஷார்ஜா: துளிக்கூட மாசுமருவில்லாத, குறைபாடற்ற 100 கேரட் வைரம் ஒன்று துபாயில் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஏலம் விடப்பட உள்ள இந்த வைரம் 25 மில்லியன் டாலர்கள் வரையில் விலை போகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அதாவது, இந்திய மதிப்பில் கிட்டதட்ட 156 கோடியே 73 லட்சத்து 75 ஆயிரம்.

தென் ஆப்ரிக்காவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கண்டறியப்பட்ட இந்த வைரம் "மனம்கவரும் நகைகள்" என்ற பிரிவின் கீழ் நியூயார்க்கில் ஏலம் விடப்பட உள்ளது.

'Flawless' 100-carat diamond on show in Dubai

100 கேரட்டுக்கு மேலான எடையைக் கொண்ட இந்த வைரமானது 25 வருடங்களாக சந்தையில் விற்பனைக்குள்ளது. சோத்பை ஏல நிறுவனத்தின் கூற்றின்படி இவ்வைரத்தின் மதிப்பு பல மில்லியன் கோடியைத் தாண்டுமாம்.

இதுகுறித்து அந்த ஏல நிறுவனம், "அருமையான வடிவமைப்பு கொண்ட இந்த வைரம் சரியாக 100.20 கேரட் ஆகும். சரியான வண்ண அமைப்பு, கொஞ்சம் கூட மாசு மருவில்லாத வைரம் இது. இதுவரை ஏலம் விடப்பட்ட வைரங்களை விட அருமையான ஒன்று" என்று தெரிவித்துள்ளது.

இந்த வைரத்தினை ஏலம் எடுப்பவர்கள் கண்டிப்பாக சிறந்தவைகளுள் சிறந்தவற்றை விரும்புவர்களாக இருப்பார்கள். மோதிரம் அல்லது பிரேசிலெட்டில் இந்த வைரத்தினை உபயோகிக்கலாம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+