ரத்தக்களறியாக மாறிய உலக வர்த்தகம்! டிரம்ப்பால் பல லட்சம் கோடி அழிந்தது! கதறிய மக்கள்! எல்லாம் போச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக அளவில் அடுத்தடுத்து பல நாடுகளின் சந்தைகள் சரிவு அடைந்து உள்ளது. ஒரே நாளில் உலக மார்க்கெட் கதற தொடங்கி உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போரால் மார்க்கெட் சரிவு உச்சம் அடைந்து உள்ளது.

புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியருமான ராபர்ட் கியோசாகி உலக அளவில் மிகப்பெரிய பங்குச்சந்தை வீழ்ச்சி நடக்க போவதாக எச்சரித்து இருந்தார். அவர் எச்சரித்தபடியே உலக அளவில் பங்குச்சந்தை சரிய தொடங்கி உள்ளது.

Donald Trump India

வரலாற்றில் மிகப்பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சியைத் சந்திக்கும் என்று கணித்துள்ளார். முதலீட்டாளர்களை எச்சரிக்கும் அதே வேளையில், குறைந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கான பொன்னான வாய்ப்பு இது என்றும் அவர் கூறுகிறார்.

பங்குச்சந்தை உலக வரலாற்றில் இல்லாத மிக மோசமான சரிவை அடையும். தயாராக இருங்கள். இப்படிப்பட்ட நேரத்தில் உண்மையான பணமான தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யுங்கள். முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கும் சம்பவம் இந்த பிப்ரவரி மாதம் நடக்கும், என்றுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் அமெரிக்க அதிபர் டிரம்ப்பால் உலக அளவில் பொருளாதார சரிவு ஏற்படும், மார்க்கெட் சரியும் வாய்ப்புகள் உள்ளதாக பிரபல ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்து உள்ளார். உலக அளவில் பிட்காயின் மதிப்பு பெரிய அளவில் சரியும். தங்கம், வெள்ளி மதிப்பு கிராஷ் ஆகும். இதன் மதிப்புகள் குறைந்ததும் உடனே அதில் முதலீடு செய்து வைத்துக்கொள்ளுங்கள். கடன் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

கடன் நாளுக்கு நாள் உயரும். பொருளாதாரம் சரிந்தால்.. பொருட்கள் விலை குறையும். இதன் அர்த்தம் நாம் பணக்காரர்கள் ஆவதற்கு இதுவே சரியான நேரம் என்பதுதான், என்று பிரபல ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரித்து உள்ளார்.

உலக மார்க்கெட் சரிவு

உலக அளவில் எந்தெந்த மார்கெட்டுகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன என்று இங்கே பார்க்கலாம்.

பங்கு சந்தை சரிவால் ஜப்பான் மார்க்கெட் மூடப்பட்டது

ஜப்பானின் நிக்கேய் 225 9% குறைந்தது

சிங்கப்பூர் பங்குச் சந்தை 5.5% சரிவு

மலேசியா பங்குச் சந்தை 4% சரிவு

ஹாங்காங் பங்குச் சந்தை 8.8% சரிவு

தைவானின் செமிகண்டக்டர் நிறுவனமான TSMC 10% சரிந்தது

தைவான் பங்கு குறியீடு திறந்த நிலையில் 9.8% சரிந்தது

ஜெர்மனி பங்குச் சந்தை எதிர்காலம் 5% குறைந்தது

ஜப்பானின் TOPIX வங்கிக் குறியீடு 14%க்கு மேல் குறைந்துள்ளது

ஷாங்காய் கச்சா எண்ணெய் 7% குறைந்தது

ஆஸ்திரேலிய பங்குச்சந்தை 6.4 சதவீதம் சரிவு

நாஸ்டாக் 100 ஃபியூச்சர்ஸ் 6%க்கு மேல் வீழ்ச்சி

பிட்காயின் $78,000 க்கு கீழ் வருகிறது

கிரிப்டோ மார்க்கெட் சரிவு

மொத்த கிரிப்டோ மார்க்கெட் கேப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கிரிப்டோ சந்தைக் குறியீடு, $2.5 டிரில்லியனில் இருந்து $2.38 டிரில்லியனாக 4.8% சரிந்தது.. டொனால்ட் டிரம்ப் தொடங்கி உள்ள வர்த்தக போருக்கு இடையே கிரிப்டோகரன்சி சந்தையில் கடும் வீழ்ச்சியை கண்டது. கடந்த சில நாட்களில் 27% சதவிகிதம் வாய் சரிவு ஏற்பட்டது. இதில் ஒரே நாளில் 2800 கோடி ரூபாய் வாஷ் அவுட் ஆகி உள்ளது.

1 லட்சத்திற்கு மேல் இருந்த பிட்காயின் 70 ஆயிரம் டாலருக்கு கீழ் சென்றுள்ளது. உலகில் நாம் பயன்படுத்தும் பணம் போலவே இணையத்திலும் நிறைய பணம் இருக்கிறது. இந்த பணத்தை நாம் நேரடியாக பயன்படுத்தாமல் இணையத்தில் மட்டுமே பயன்படுத்துவோம். 1500க்கும் அதிகமான இதுபோன்ற பணங்கள் உலகில் பயன்பாட்டில் இருக்கிறது. இதற்கு 'கிரிப்டோ கரன்சி' என்று பெயர். அவற்றில் ஒன்றுதான் இந்த பிட்காயின். இந்த பிட்காயினை நாம் பணம் கொடுத்தோ, பங்குகள் கொடுத்தோ வாங்கி கொள்ள முடியும். மேலும் தங்கத்திற்கு பதிலாகவும் இதை மாற்ற முடியும். இதற்கு வடிவம் இல்லை என்பதால் இதை வைத்து இணையத்தில் எளிதாக பொருட்கள் வாங்கலாம். மேலும் இதற்கு சரியான வரி விதிப்பு முறையோ, வங்கி கட்டுப்பாடோ இல்லை என்பதால் இதில் அதீத சுதந்திரம் இருக்கிறது.

ஏற்கனவே இந்திய மார்க்கெட் சரிவு

இன்று இந்திய பங்கு சந்தை கடுமையான சரிவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக போர் காரணமாக டாலர் மதிப்பு சரியலாம். இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக மார்க்கெட்டில் இருந்து வெளியேறுகிறார்கள். பங்குசந்தை சரியலாம் என்பதால் கூட்டம் கூட்டமாக வெளியேறுகிறார்கள். இதனால் சந்தை மேலும் சரிந்து வருகிறது. அமெரிக்க பங்குச்சந்தை தினம் தினம் 200 புள்ளிகள் வரை சரிந்து வருகிறது. மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு மார்க்கெட் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் 10 மட்டும் ஆயிரம் புள்ளிகள் சென்செக்ஸ் வர்த்தகத்தில் சரிந்து உள்ளது.

81 ஆயிரம் புள்ளிகளில் இருந்து 72 ஆயிரம் புள்ளிகளுக்கு சென்செக்ஸ் சரிந்து உள்ளது. தொடர்ந்து சென்செக்ஸ் சரிவது இந்திய மார்க்கெட்டில் பெரிய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பின் வரும் காரணங்கள் உள்ளன.

பதிலடி வரிகள் என்றால் என்ன?

முதலில் இது என்ன வர்த்தக போர் என்று பார்க்கலாம் . அமெரிக்க அதிபர் டிரம்ப் reciprocal tariff எனப்படும் வரிகளை விதிக்க உள்ளார். அதாவது பதிலடி வரி. அதாவது இந்தியா அமெரிக்கா மீது விதிக்கும் வரியை அப்படியே இந்தியா மீது அமெரிக்கா விதிக்கும். அதாவது ஒரு துறையில் உள்ள ஒரு பொருளுக்கு இந்தியா 30 சதவிகிதம் வரி விதிக்கிறது. அமெரிக்கா 10 சதவிகிதம்தான் வரி விதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த புதிய விதிப்படி அமெரிக்காவும் அதே 30% வரியை இனி விதிக்கும்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏப்ரல் 2ம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது பதிலடி வரிகளை விதிக்க போவதாக அறிவித்து உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கான அனைத்து எஃகு இறக்குமதிக்கும் 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். விவசாய பொருட்கள் மீது 100% வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

• சிலி 10%
• இந்தியா 26%
• இஸ்ரேல் 17%
• பிரேசில் 10%
• சீனா 34%
• ஜப்பான் 24%
• துருக்கி 10%
• தைவான் 32%
• வியட்நாம் 46%
• பாகிஸ்தான் 29%
• தாய்லாந்து 36%
• ஆஸ்திரேலியா 10%
• மலேசியா 24%
• கொலம்பியா 10%
• இலங்கை 44%
• சிங்கப்பூர் 10%
• இந்தோனேசியா 32%
• கம்போடியா 49%
• பிலிப்பைன்ஸ் 17%
• சுவிட்சர்லாந்து 31%
• பங்களாதேஷ் 37%
• தென் கொரியா 25%
• தென்னாப்பிரிக்கா 30%
• யுனைடெட் கிங்டம் 10%
• ஐரோப்பிய ஒன்றியம் 20%

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+