For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'தாத்தா' காலத்து டெக்னாலஜி ஓவர்.. வந்துருச்சு 'தாத்' ... 'லிப்ட்'டில் ஏறி ராக்கெட்டில் பறக்கலாம்!

Google Oneindia Tamil News

டோரன்டோ: வருங்காலத்தில் விண்வெளி தொழில்நுட்பம் எப்படியெல்லாம் இருக்கும் என்று இப்போது நமக்குத் தெரியாதுதான். ஆனால் வியக்க வைக்கும் பல மாற்றங்களை அது சந்திக்கப் போகிறது என்பதை கட்டியம் கூறும் வகையில் கனடாவைச் சேர்ந்த ஒரு விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.

தற்போது தரையிலிருந்துதானே நாம் ராக்கெட்களை ஏவுகிறோம். வருங்காலத்தில் கிட்டத்தட்ட பாதி விண்வெளிக்குப் போய் ராக்கெட்களை ஏவும் நிலை வரும் என்பதை இந்த நிறுவனத்தின் புதிய தயாரிப்பு நமக்கு விளக்குகிறது.

விண்வெளி சுற்றுலாவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தப் போகும் கண்டுபிடிப்பாக இது பார்க்கப்படுகிறது. ஐடியா மிகச் சாதாரணமானதுதான். ஆனால் அது ஏற்படுத்தப் போகும் விளைவுகள்தான் அபாரமாக இருக்கிறது.

மண்ணிலிருந்து விண்ணுக்கு

மண்ணிலிருந்து விண்ணுக்கு

தற்போது தரையிலிருந்து ஏவப்படும் ராக்கெட்களை, விண்கலங்களை, விண்ணிலிருந்தே விண்ணுக்கு ஏவும் புரட்சித் திட்டம்தான் இது.

தாத் தொழில்நுட்பம்

தாத் தொழில்நுட்பம்

தாத் தொழில்நுடபக் கழகம் என்ற நிறுவனம்தன் இதை கம்டுபிடித்துள்ளது. இந்த நிறுவனம் எலிவேட்டர் ஒன்றை உருவாக்கியுள்ளது. இது ஸ்பேஸ் எலிவேட்டர் ஆகும்.

20 கிலோமீட்டர் உயரம்

20 கிலோமீட்டர் உயரம்

இந்த தாத் எலிவேட்டரின் உயரம் பூமியிலிருந்து 20 கிலோமீட்டர் ஆகும். இது ஒரு நிலையான கட்டடம் போலத் தெரிந்தாலும் கூட இதற்குள் அதி சக்தி வாய்ந்த மின்னணு எலிவேட்டர் ஒன்று இருக்கும்.

'ஏக் தம்'மில் போய் விடலாம்

'ஏக் தம்'மில் போய் விடலாம்

இந்த எலிவேட்டர் மூலம் உச்சிக்குப் போன பின்னர் அங்கிருந்து ராக்கெட்டில் ஏறிக் கொள்ளும் விண்வெளி வீரர்கள், ஒரே ஸ்டேஜில் பூமியின் சுற்று வட்டப் பாதைக்குப் போய் விட முடியும். அதாவது கீழேயிலிருந்து மேலே வருவதற்கு 20 கிலோமீட்டர் தூரத்தை நாம் மிச்சப்படுத்த முடியும்.

லேன்டிங் வசதியும் உண்டு

லேன்டிங் வசதியும் உண்டு

இந்த எலிவேட்டரின் மேற்பரப்பில் ராக்கெட்களை ஏவுவதற்கு மட்டுமல்லாமல், லேன்டிங் வசதியும் கூட உண்டாம். அதாவது விண்கலங்களை இங்கு தரையிறக்கவும் முடியும். எரிபொருள்ட்களை நிரப்பிக் கொள்ள முடியும்.

வேற மாதிரி மாறி விடுவோம்

வேற மாதிரி மாறி விடுவோம்

இந்தக் கனவுத் திட்டத்தை உருவாக்கியவரான குயின் கூறுகையில், இது விண்வெளி சுற்றுலாவுக்கு மிகவும் உகந்தது. மேலும் விண்வெளிக்குச் செல்லும் விண்கலங்களை குறைந்த செலவில் அனுப்ப முடியும். எரிபொருள் மிச்சமாகும் என்றார்.

தற்போது எப்படி

தற்போது எப்படி

தற்போது தரையிலிருந்து ஏவப்படும் ராக்கெட்கள் முதலில் 25 கிலோமீட்டர் உயரம் வரை செங்குத்தாக பறக்கும். பின்னர் ஸ்டேஜ் மாறும். படிப்படியாக ஸ்டேஜ் மாறி பிறகு ராக்கெட்டின் கீழ்ப் பகுதி கீழே விழுந்து விடும். கடலில் விழும். இறுதிக் கட்டத்தில் ராக்கெட் பக்கவாட்டில் பறக்க ஆரம்பிக்கும். தற்போது உருவாக்கப்பட்டுள்ள தாத் எலிவேட்டர் மூலம் செங்குத்தாக பறப்பது மற்றும் படிப்படியாக ஸ்டேஜ் மாறுவது ஆகியவை தேவைப்படாதாம்.

பிளைட் மாதிரி கிளம்பிப் போகலாம்

பிளைட் மாதிரி கிளம்பிப் போகலாம்

அதாவது விமானங்கள் எப்படி டேக் ஆப் ஆகி கிளம்பிச் செல்கிறதோ, வந்து இறங்குகிறதோ அதேபோல இந்த எலிவேட்டர் உச்சியிலிருந்து விண்கலங்களை கிளப்பிச் செல்ல முடியும் என்கிறார் குயின்.

English summary
A Canadian space firm has been granted US and UK patents for elevator designed to take astronauts 20km above Earth so they can then be propelled into space.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X