கூகுளுக்கு ஆஸ்திரேலியா கோர்ட் விதித்த மில்லியன் டாலர் அபராதம்; ஏன் தெரியுமா?
கான்பெரா: உலகின் மிகப் பெரிய சர்ச் இன்ஜின் நிறுவனமான கூகுள், அதன் பயனாளர்களை தவறாக வழிநடத்தியதற்காக சுமார் 43 மில்லியன் டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அறிவிப்பை அந்நாட்டு போட்டி கண்காணிப்புக் குழு வெளியிட்டுள்ளது. இதில் மேற்குறிப்பிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2017 டிசம்பர் முதல் 2018 ஜனவரி வரையான காலகட்டத்தில் கூகுள் இந்த தவறை மேற்கொண்டதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தரவு
இது குறித்து இன்று ஆஸ்திரேலியா போட்டி கண்காணிப்புக்குழு வெளியிட்டுள்ள தகவலின்படி, கூகுளின் யூனிட்டான 'ஆல்பாபெட் இன்க் இன்', தங்கள் தனிப்பட்ட இருப்பிடத் தரவைச் சேகரிப்பதற்காக பயனர்கள் தவறாக வழிநடத்தியுள்ளது என குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 2017 டிசம்பர் முதல் 2018 ஜனவரி வரையாக காலகட்டத்தில் கூகுள் இந்த தவறை மேற்கொண்டதாகவும் கண்காணிப்புக்குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பதியப்பட்ட வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

தவறாக வழிநடத்தல்
அந்நாட்டின் பெடரல் நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி, 60 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை இழப்பீடாக செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.34 ஆயிரம் கோடியாகும். இது இந்நிறுவனத்திற்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என சர்வதேச தொழில் நிபுணர்கள் கருதுகின்றனர். 2017-2018 காலகட்டத்தில், சில வாடிக்கையாளர்களின் ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட இருப்பிடத் தரவைப் பற்றி கூகுள் தவறாக வழிநடத்தியதை நீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

பழைய கணக்கு
ஏற்கெனவே சில நாட்களுக்கு முன்னர், ரஷ்ய அரசு இரண்டாவது முறையாக 390 மில்லியன் டாலர் அளிவிற்கு கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்திருந்தது. அதாவது உக்ரைனில் நடந்த போர் குறித்து போலி செய்திகள் உட்பட ரஷ்யா சட்டவிரோதமாகக் கருதப்பட்ட உள்ளடக்கத்தை நீக்கத் தவறியதற்காக ரஷ்ய நீதிமன்றத்தால் ஆல்பாபெட் நிறுவனத்திற்கு சொந்தமான தேடல் நிறுவனமான கூகுளுக்கு 21.8 பில்லியன் ரூபிள் அதாவது $390 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது.

மூன்றாவது முறை
அதற்கு முன்னதாக கடந்த ஆண்டு, கூகுள் நிறுவனத்திற்கு 7 பில்லியன் ரூபிள் (USD 129 மில்லியன்) அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் இது இந்நிறுவனத்திற்கு மூன்றாவது அபராதமாகும். ஆல்பாபெட் நிறுவனத்தின் யூடியூப் செயலி மீது ரஷ்யாவுக்கு பெரும் கோபம் உள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் குறித்து யூடியூபில் அபாண்டமான தகவல்களுடன் கூடிய வீடியோ வெளி வந்து கொண்டிருப்பதாகவும், இதனை யூடியூப் நிர்வாகம் கட்டுப்படுத்தவில்லை என்றும் ரஷ்யா கோபம் கொண்டுள்ளது. ரஷ்யாவில் தொடங்கிய சர்ச்சை தற்போது ஆஸ்திரேலியா வரை நீண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications