For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குதிரை வண்டியில் மங்கோலியாவுக்குள் நுழைந்த 'கூகுள் ஸ்ட்ரீட் வியூ'

By Siva
Google Oneindia Tamil News

உலான் படோர்: உலகின் பல்வேறு நகரங்களை புகைப்படம் எடுத்த பிறகு கூகுள் ஸ்ட்ரீட் வியூ வியாழக்கிழமை மங்கோலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கூகுள் ஸ்ட்ரீட் வியூ மூலம் உலகின் பல்வேறு நகரங்கள் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் தொகை குறைவாக உள்ள ஆசிய நாடான மங்கோலியாவில் வியாழக்கிழமை கூகுள் ஸ்ட்ரீட் வியூ அறிமுகப்படுத்தப்பட்டது.

தலைநகர் உலான் படோரில் அறிமுக விழா நடந்தது. மங்கோலியாவில் உள்ள கோவ்ஸ்கோல் ஏரி உள்ளிட்ட தொலைதூர இடங்களை புகைப்படம் எடுக்க குதிரை வண்டியில் கேமராவை வைத்தது கூகுள் நிறுவனம்.

Google Street View enters Mongolia... on horseback

கோபி பாலைவனம் அருகே உள்ள மலைகளை படம்பிடிக்க உள்ளூர்காரர் ஒருவர் தனது பையில் கேமராவை வைத்து எடுத்துச் சென்றதாக கூகுள் தெரிவித்துள்ளது.

இது குறித்து கூகுள் நிறுவன பிரதிநிதி சூசன் கூறுகையில்,

மங்கோலியாவில் ஸ்ட்ரீட் வியூவை அறிமுகப்படுத்துவது மூலம் அந்த நாடு பற்றி பிற நாட்டவர் மத்தியில் விழுப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்று கூகுள் நம்புகிறது. சுற்றுலாப்பயணிகள் அதிகம் வந்தால் அந்நாட்டு பொருளாதாரம் மேம்படும் என்றார்.

பிரான்ஸை விட இரண்டு மடங்கு பெரிய நாடான மங்கோலியாவில் 30 லட்சம் பேர் வசிக்கிறார்கள்.

English summary
Google street view has been launched in Mangolia on thursday. Inorder to cover the remote areas, camera was carried on a horse drawn sled.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X