For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரில்லாவின் குடும்ப பாசம்.. மழையில் இருந்து எப்படி குட்டிகளைக் காப்பாற்றுகிறது பாருங்கள்!

கொரில்லா குரங்குகளின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில், கொரில்லா குரங்குகள் சில மழையில் இருந்து தங்கள் குட்டிகளை பாதுகாக்கும் அதிசய வீடியோ வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின் கொலம்பியா நகரில் உள்ளது ரிவர்பேங்க்ஸ் உயிரியல் பூங்கா. இந்த பூங்காவில் இருந்து தான் அந்த வியப்பளிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

அந்த வீடியோவில், கொரில்லாக்கள் சில குட்டிகளுடன் உயிரியல் பூங்காவில் இருக்கின்றன. மழை பெய்து கொண்டிருப்பதால், எப்படி தங்களுடைய கூண்டுகளுக்கு செல்வது என முதலில் அவை யோசிக்கின்றன.

இந்நிலையில், அகாசிய எனும் கொரில்லா குரங்கு முதலில் மழையில் நடந்து சென்று கூண்டுக்குள் செல்கிறது. இதை பார்த்த மாசி எனும் கொரில்லா, தனது குட்டி மோவுடன் கூண்டுக்குள் செல்கிறது.

gorillas protect their babies from rain

அதனைத் தொடர்ந்து, சகோடா எனும் தனது குட்டியை தூக்கிக்கொண்டு அதன் தாய் காசி கூண்டுக்குள் செல்கிறது. இவை அனைத்தும் சென்றவுடன் கென்சூ எனும் ஆண் கொரில்லா கடைசியாக கூண்டுக்குள் செல்கிறது.

இந்த வீடியோவை உயிரியல் பூங்கா நிர்வாகிகள் தங்களுடைய பேஸ்புக் பக்கத்தில் அப்லோட் செய்தனர். சில மணி நேரத்தில் எல்லாம் மில்லியன் பார்வையாளர்களை தாண்டிவிட்டது வீடியோ.

பேஸ்புக் பாலோயர்கள் கொரில்லாக்களில் செயலை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். அதுவும் கென்சூவின் பொறுப்பாக மற்ற கொரில்லாக்கள் செல்லும் வரை பொறுமையாக இருந்து, கடைசியாக செல்வதை பலரும் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A video of a group of gorillas trying to avoid the rain in South Carolina zoo goes viral in social medias.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X