ஹார்வி வலுக்கட்டாயமாக என் வீட்டிற்குள் நுழைந்து என்னை வல்லுறவு செய்தார்: மேலும் ஒரு நடிகை புகார்

Posted By: BBC Tamil
Subscribe to Oneindia Tamil
''ஹார்வி வலுக்கட்டாயமாக என் வீட்டிற்கு நுழைந்து என்னை வல்லுறவு செய்தார்'': ஆனபெல்லா ஸ்கியோரா
Getty Images
''ஹார்வி வலுக்கட்டாயமாக என் வீட்டிற்கு நுழைந்து என்னை வல்லுறவு செய்தார்'': ஆனபெல்லா ஸ்கியோரா

அமெரிக்காவில் 'தி சோப்ரனோஸ்' என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த இத்தாலிய அமெரிக்க நடிகை ஆனபெல்லா ஸ்கியோரா, சர்ச்சைக்குரிய ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் மீது பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

1992ல் நியுயார்க்கில் இருக்கும் தனது அடுக்குமாடி குடியிருப்பில் வலுக்கட்டாயமாக நுழைந்து தாக்குதல் நடத்தியதாக தி நியு யார்கர் நாளிதழுக்கு நடிகை பேட்டியளித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவத்திற்குபிறகு தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகள் தான் ஹார்வியால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக ஆனபெல்லா குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதே கட்டுரையில் மற்றொரு நடிகையான டாரியல் ஹானா, ஹார்வியால் தானும் துன்புறுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

ஹார்வி வைன்ஸ்டீன்
ALEXANDER KOERNER/GETTY IMAGES
ஹார்வி வைன்ஸ்டீன்

நடிகைகளின் இந்த குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹார்வியின் பெண் பேச்சாளர், உடன்பாடில்லாத பாலுறவு குற்றச்சாட்டுகளை தயாரிப்பாளர் ஹார்வி மறுப்பதாக கூறியுள்ளார்.

கடந்த வியாழனன்று, நார்வே நடிகையும், மாடல் அழகியுமான நட்டாஸியா மால்தி, 2008 ஆம் ஆண்டு பாஃப்தா விருது பெற்ற பின்னர், லண்டன் ஹோட்டல் அறையில் ஹார்வி வைன்ஸ்டீன் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதுவரை ஹார்வி வைன்ஸ்டீன் மீது 50ற்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவு முதல் பாலியல் துன்புறுத்தல் வரை பரவலான குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளனர்.

பிற செய்திகள்:


BBC Tamil
English summary
Italian-American actress Annabella Sciorra, who starred in US TV series The Sopranos, has accused disgraced producer Harvey Weinstein of rape.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற