ஒரு எறும்புகூட நுழைய முடியாது... வடகொரியா அதிபரின் பாதுகாப்பு அதிசயங்கள்!
வடகொரிய அதிபர் கிம்முக்கு ஆறு அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ஒரு எறும்பு கூட, இந்த பாதுகாப்பை மீறு உள்ளே நுழைய முடியாது.
சியோல்: அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு மிகப் பெரிய சிம்மசொப்பனமாக இருக்கும் வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், மிகப் பெரிய பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ளார். சொந்த நாட்டில் கூட எங்கு சென்றாலும், ஒரு எறும்பு கூட நுழைய முடியாத அளவுக்கு அவருக்கு ஆறு அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
வடக்கு கொரியா மற்றும் தெற்கு கொரியாவுக்கு இடையே எப்போதும் ஏழாம் பொருத்தம். நீண்டகாலமாக இரு நாடுகளுக்கும் இடையே பிரச்னைகள், சண்டைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள், ஐநா சபை ஆகியவை எச்சரித்தும், தொடர்ந்து அணு ஆயுதங்களை தயாரித்து மிரட்டி வந்தது வடகொரியா.

வடகொரியவின் இந்த அணு ஆயுதகக் குவிப்பு பல நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த நிலையில், வடக்கு கொரியா மற்றும் தெற்கு கொரியாவுக்கு இடையே பேச்சு வார்த்தை நடந்தது. அதில் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் தென் கொரியா அதிபர் மூன் ஜேயின் சந்தித்து பேசினர்.
இந்த பேச்சுவார்த்தையை விட, கிம் ஜாங் உன்னுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பே மிகப் பெரிய விவாதமாக அமைந்துள்ளது. கோட்-சூட் அணிந்து கொண்டு, அதிபருக்கு பாதுகாப்பு அளித்த வீரர்கள் குறித்தே அதிகம் பேசப்படுகிறது. மிகவும் கடினமான தேர்வுகள் மூலம், அதிபரின் பாதுகாப்புப் படையினர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
துப்பாக்கிச் சுடுதலில் கன்னாகவும், உடல் தகுதியில் பிட்டாகவும், கிட்டத்தட்ட பாதுகாப்புப் படையில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு ஜேம்ஸ் பாண்ட், சூப்பர் மேன்கள். உன்னுக்கு ஆறு அடுக்கு பாதுகாப்பு வளையம் அளிக்கப்படுகிறது. இந்த பாதுகாப்பு வளையத்தை்த தாண்டி, ஒரு எறும்பால் கூட உள்ளே புக முடியாது. அமெரிக்கா உள்பட வேறு எந்த நாட்டு அதிபருக்கோ, பிரதமருக்கோ இந்த அளவுக்கு சிறந்த, விரிவான பாதுகாப்பு கிடையாது.
இது கிம் ஜாங் உன்னுக்கு மட்டுமல்ல, அவருடைய குடும்பத்தாருக்கும் இதுபோன்ற தீவிர பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. தென்கொரியாவில் சமீபத்தில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில், கிம்மின் சகோதரி கலந்து கொண்டார். போட்டியில் பங்கேற்ற வீரர்களின் எண்ணிக்கைவிட, பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications