For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யுஎஸ்: 228 ஆண்டு கால வரலாற்றில் முதல் பெண் அதிபர் வேட்பாளரானார் ஹிலரி க்ளிண்டன்!

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்) 228 ஆண்டு கால அமெரிக்க அரசியல் வரலாற்றில் முதன் முறையாக ஒரு பெரிய அரசியல் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளாராக ஹிலரி க்ளிண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் டொனால்ட் ட்ரம்ப் -ஐத் தோற்கடித்து அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் ஆவாரா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

56 தேர்தல்கள் 44 அதிபர்கள்

56 தேர்தல்கள் 44 அதிபர்கள்

அமெரிக்காவின் முதல் அதிபர் தேர்தல் நடைபெற்றது 1788 ஆம் ஆண்டாகும். இதுவரையிலும் 56 அதிபர் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. 44 அதிபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பராக் ஒபாமா 44வது அதிபராவார். ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் க்ளிண்டன், ரொனால்ட் ரீகன் உள்ளிட்ட இரு தடவை பதவி வகித்தவர்கள் 12 அதிபர்கள். நான்கு முறை அதிபராக பதவி வகித்தவர் ஃப்ராங்ளின் டி. ரூஸ்வெல்ட்.

இத்தகைய அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் இதுவரையிலும் ஒரு பெண் வேட்பாளர் கூட அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி அல்லது ஜன நாயககக் கட்சி சார்பில் போட்டியிட்டதில்லை.

முதல் பெண் அதிபர் வேட்பாளர்

முதல் பெண் அதிபர் வேட்பாளர்

இந்த வரலாற்றை மாற்றி எழுதும் வகையில் ஹிலரி க்ளிண்டன் ஜன நாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக உருவெடுத்துள்ளார்

ஜன நாயகக் கட்சியின் உட்கட்சி தேர்தலில் , அதிபர் வேட்பாளார் ஆவதற்கு 2383 டெலிகேட்ஸ் வாக்குகள் தேவை. செவ்வாய்க் கிழமை நடைபெற்ற தேர்தலில் நியூ ஜெர்ஸி, நியூ மெக்சிகோ, தெற்கு டகோட்டா, மோன்டனா மாநிலங்களில் வெற்றி பெற்று 1904 டெலிகேட்ஸ் வாக்குகளை ஹிலரி பெற்றுள்ளார்.

கலிஃபோர்னியாவில் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கிறது. அங்கும் ஹிலரி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. முடிவுகள் ஹிலரிக்கு சாதகமாக வந்து கொண்டிருக்கின்றன.

கலிஃபோர்னியா முடிவுகளுக்கு முன்னர், ஹிலரிக்கு ஆதரவளிக்கும் 572 சூப்பர் டெலிகேட்ஸ் வாக்குகளை சேர்த்து மொத்தம் 2476 வாக்குகள் உள்ளன.

தேவையான 2383 வாக்குகளை விட 93 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். கலிஃபோர்னியா தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இந்த எண்ணிக்கை மேலும் உயரும்.

ஆதரிப்பார்களா சான்டர்ஸ் ஆதரவாளர்கள்?

ஆதரிப்பார்களா சான்டர்ஸ் ஆதரவாளர்கள்?

உட்கட்சி தேர்தலில் ஹிலரிக்கு கடும் சவாலாக விளங்கும் பெர்னி சான்டர்ஸ் இன்னும் போட்டியிலிருந்து விலக வில்லை. கட்சி மாநாட்டில் வேட்பாளர் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறி வருகிறார். கலிஃபோர்னியாவில் வென்றால் சூப்பர் டெலிகேட்ஸ்களை நிர்பந்திக்க முடியும் என்று நம்புகிறார்.

இது வரையிலும் சான்டர்ஸ் ஆதரவாளார்கள் ஹிலரியை ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் இல்லை. நாம் தொடர்பு கொண்ட கல்லூரி மாணவ மாணவிகள் பெர்னி சான் டர்ஸ்க்கு தீவிர ஆதரவு தெரிவிக்கிறார்கள். சுற்றுச்சூழல், குறைந்தபட்ச ஊதிய உயர்வு, கல்லூரிகளில் இலவசக் கல்வி போன்ற சான்டர்ஸின் கொள்கைகளுக்கு இளைஞர்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது.

பில் க்ளிண்டனின் ஆட்சியில் குறைகள் காணும் ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் சான்டர்ஸ் ஆதரவாளருமான அமெரிக்கத் தமிழர், ட்ரம்ப்-க்கு வாக்களிப்பேன் என்கிறார்.

சமாதானத்திற்கு வருவாரா சான்டர்ஸ்

சமாதானத்திற்கு வருவாரா சான்டர்ஸ்

நியூ ஜெர்ஸி வெற்றியைத் தொடர்ந்து உரையாற்றிய ஹிலரி, பெண்கள் எதையும் சாதிக்க முடியும். அமெரிக்க அதிபர் ஆவது உட்பட என்று பெண்களை முன்னிலைப்படுத்தி தான் பேசினார். சான்டர்ஸிடம் சமாதானத்திற்கு தயாராக இருப்பதாகத்தான் அவரது அணுகுமுறை இருக்கிறது.

கலிஃபோர்னியா முடிவுகளுக்குப் பின் இரண்டொரு தினங்களில் சான்டர்ஸ் தானாக போட்டியிலிருந்து விலகிவிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஹிலரி தரப்பிலிருந்தும் சமாதானப் படலங்கள் அரங்கேறி வருவதாக தெரிகிறது.

ட்ரம்ப்-க்கு எதிராக பிரச்சாரம்

ட்ரம்ப்-க்கு எதிராக பிரச்சாரம்

பொதுத் தேர்தலில் ஹிலரி வெற்றி பெற சான்டர்ஸ் ஆதரவாளர்களின் வாக்குகள் மிகவும் முக்கியமானதாகும். சான்டர்ஸின் கொள்கைகளை செயல்படுத்தும் வகையில் உள்துறை அமைச்சர் பதவியைக் கொடுத்து அவரது ஆதரவாளர்களின் தன்வசம் ஹிலரி இழுக்கக்கூடும்.

ஹிலரியும் பொதுத் தேர்தலின் எதிரியான ட்ரம்ப் -ஐ கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ட்ரம்ப்-ன் ஒரிஜினல் பேச்சுக்களையே குறிப்பிட்டு, அதை அவருக்கு எதிராக திருப்பி தாக்கி வருகிறார்

இந் நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி மெக்சிகோவை சார்ந்தவர் என்பதால் தனக்கு எதிராக தீர்ப்பளிப்பார் என்று கூறி இனவாத சர்ச்சையில் சிக்கியுள்ளார் ட்ரம்ப். அவரது சொந்த கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இன்றைய தேதியில், ஹிலரி க்ளிண்டன் அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக வெற்றிபெறுவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க அரசியல் பார்வையாளர்கள் கணித்துள்ளனர்.

English summary
Hillary Clinton gained required delegates to be nominated as first women presidential candidate of the major political party in United States. At this date, there are very high chances for her to become the first women president of U.S
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X