For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வந்த ஹிலரி க்ளிண்டன்!

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன் (யு.எஸ்): அடுத்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி நடைபெறப்போகும் அமெரிக்க அதிபர் தேர்தல் ஹிலரி க்ளிண்டன் வருகையால் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

நேற்று இணையத்தளம் மூலம் தனது போட்டியை அறிவித்ததைத் தொடர்ந்து, அவருடைய ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

உட்கட்சித் தேர்தல்

உட்கட்சித் தேர்தல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு, முதலில் உட்கட்சியில் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பொதுத் தேர்தல் போல் அனைத்து மாநிலங்களிலும் இது நடைபெறும். போட்டியிட விரும்பும் அனைத்து வேட்பாளர்களும் கட்சியினரிடம் ஆதரவு திரட்டுவார்கள்.

ஒவ்வொரு மாகாணமாக நடைபெறும் இந்த ப்ரைமரி தேர்தலில், யார் அதிக ஆதரவைப் பெறுகிறார்களோ, அவர் கட்சியின் தேசிய மாநாட்டில் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். ஜனநாய மற்றும் குடியரசுக் கட்சிகளுக்கு இதுவே நடைமுறை.

அதிபர் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியில் ஹிலரி க்ளிண்டன் போட்டியிடுகிறார். முன்னதாக 2008ம் ஆண்டு உட்கட்சி தேர்தலில் தான் ஒபாமாவிடம் ஹிலரி க்ளிண்டன் தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

நான் உங்கள் சாம்பியன்!

நான் உங்கள் சாம்பியன்!

நேற்று வெளியான முதல் வீடியோவில், சாமானிய அமெரிக்கர்கள் தாங்கள் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று தங்களுடைய அன்றாட வாழ்க்கையின் அடுத்தக் கட்ட நகர்வைப் பற்றி சொல்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து ஹிலரி, "நானும் தயாராகி விட்டேன். அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறேன். அமெரிக்கர்கள் கடுமையாக உழைத்து, கடினமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வந்துள்ளார்கள். ஆனால் இன்னும் மேல் மட்டத்தில் உள்ளவவர்களுக்கே சாதகமான நிலை உள்ளது.

ஒவ்வொரு நாளும் அமெரிக்கர்களுக்கு ஒரு சாம்பியன் தேவைப்படுகிறார். நான் அந்த சாம்பியனாக இருக்க விரும்புகிறேன். அன்றாடத் தேவைகளுக்கும் மேலாக, நீங்கள் சாதிக்க முடியும். முன்னேற முடியும். குடும்பங்கள் பலமாக இருக்கும் போது அமெரிக்கா பலமாக இருக்கும். எனவே உங்களை சந்திக்க வந்து கொண்டிருக்கிறேன். இது உங்களுடைய பொன்னான நேரம். இந்த பயணத்தில் நீங்களும் இணைவீர்கள் என நம்புகிறேன்," என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அயோவா நோக்கிப் பயணம்

அயோவா நோக்கிப் பயணம்

தேர்தலில் போட்டியிடும் முடிவை அறிவித்த உடன், உட்கட்சித் தேர்தலில் முக்கிய மாகாணமான மிசிசிபி ஆற்றுக்கு மேற்கு கரையோர அயோவா வுக்கு தரைவழியாக பயணமாகிக் கொண்டிருக்கிறார். நியூயார்க்கிலிருந்து 1000 மைல்கள் கேரவன் வேன் மூலம் சென்று கொண்டிருக்கும் ஹிலரி, வழியில் சாமானிய மக்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

பென்சில்வேனியாவில் ஒரு பெட்ரோல் பங்க் -ல் 19 வயது கல்லூரி மாணவர் உட்பட, சிலர் அவரை அடையாளம் கண்டு வாழ்த்தி அனுப்பினர். அவருடைய கேரவனுக்கு 'ஸ்கூபி' என்று செல்லமாக பெயரிடப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் அயோவா அவரை கைவிட்டதை மனதில் கொண்டு அங்கு தீவிரமாக ஆதரவு திரட்ட உள்ளார்.

தனிக் காட்டு ராணி?

தனிக் காட்டு ராணி?

எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியில் ரான் பால், ஜெப் புஷ், டெட் க்ரூஸ் என பலரும் ரவுண்டு கட்டி போட்டியில் குதித்திருக்கும் நிலையில், ஜனநாயகக் கட்சியினர் மந்தமான நிலையில் இருந்தனர். ஹிலரி எப்படியும் போட்டியிடுவார், அவருடன் மோதுவதா என தயக்கத்தில் யாரும் வெளிப்படையாக போட்டியில் குதிக்க வில்லை.

50 சதவீதத்திற்கும் அதிகமான கட்சியினர் ஹிலரியை ஆதரிக்கும் நிலையில், தற்போது போட்டியிடும் தன் முடிவை அறிவித்த அவர், ஜனநாயகக் கட்சிக்குள் தனிக்காட்டு ராணியாக விளங்குகிறார். ஆனால் ஒபாமாவிடம் தோல்வியுற்றதை மறக்காத ஹிலரியின் ஆதரவாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இந்த உட்கட்சித் தேர்தலை அணுகுகிறார்கள்.

எப்படியும் வருவார் என எதிர்ப்பார்த்த குடியரசுக் கட்சியினர்

எப்படியும் வருவார் என எதிர்ப்பார்த்த குடியரசுக் கட்சியினர்

ஒபாமாவின் முதல் நான்காண்டு ஆட்சியில் வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த ஹிலரி, அடுத்த முறை பதவியில் நீடிக்காமல் விலகிய போதே, அதிபர் தேர்தலுக்குத் தான் அடி போடுகிறார் என்பது குடியரசுக் கட்சியினருக்கு தெளிவாக புரிந்தது. அதனால், கிடைத்த சந்தர்ப்பத்தில் எல்லாம் ஹிலரிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தனர்.

ஆள் களத்தில் இல்லாத போதே எதிராக ஆடியவர்கள் இப்போ சும்மா இருப்பார்களா என்ன?. குடியரசுக் கட்சியின் ரான் பால், 'நான் தான் ஹிலரியை தோற்கடிக்க தகுதியானவர்' என்று முதல் ஆளாக முழங்கியுள்ளார்.

அமெரிக்க இந்திரா காந்தி ஆவாரா?

அமெரிக்க இந்திரா காந்தி ஆவாரா?

2016 ஜூலை மாதம் நான்காம் தேதி, சுதந்திரம் அடைந்து 240 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. ஆனால் இதுவரையிலும் அமெரிக்காவில் ஒரு பெண் அதிபர் கூட பதவியேற்றது இல்லை. அந்த வகையில் இந்தியா பெருமிதம் கொள்ளலாம்., உலகத் தலைவர்கள் மதிக்கும் வகையில் பிரதமராக இந்திரா காந்தி இருந்து வந்தார். பெண் குடியரசுத் தலைவராக பிரதிபா பாட்டீலும் பதவி வகித்துள்ளார். சோனியா காந்தி, ஜெயலலிதா, மம்தா பானர்ஜி என பல பெண் கட்சித் தலைவர்களையும் இந்தியா கண்டுள்ளது.

தற்போது ஹிலரி க்ளிண்டனுக்கு அமெரிக்காவின் முதல் பெண் அதிபராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனலாம். அதனாலேயே பெண்களின் ஏகோபித்த வாக்குகள் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஒபாமாவைப் போல் பெண்கள் இளைஞர்களின் வாக்குகளை பெற்று விட்டாலே ஹிலரியின் வெற்றி உறுதி என்பதில் சந்தேகமில்லை.

பெல்லாரி இல்லே பாஸ்.. அவர் ஹிலரி க்ளிண்டன்

பெல்லாரி இல்லே பாஸ்.. அவர் ஹிலரி க்ளிண்டன்

ஒபாமா போட்டியிட்ட 2008 ஆம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரம் படு பாதாளத்தில் இருந்தது. கடுமையான சவால்களை அவர் எதிர் கொண்டார். இப்போது பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு என்று பெரும்பாலும் சாதாரண நிலைக்கு திரும்பியுள்ள வேளையில், எதிர்க்கட்சியினர் பொருளாதார மந்தம் இன்னும் என்பதையே தேர்தல் முழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த தேர்தல் எந்த கொள்கை அடிப்படையில் செல்லும் என்ற தெளிவற்ற நிலை தான் தற்போது நிலவுகிறது. மக்களுக்கு நன்கு தெரிந்தவர், பலதரப்பட்ட அனுபவங்கள், தனிப்பட்ட செல்வாக்கு என்ற வகையில் ஹிலரி க்ளிண்டன் முன்னிலையில் இருக்கிறார். 2016 தேர்தலில் வெற்றி பெற்றால், அடுத்த 8 ஆண்டுகளுக்கு அதிபராக தொடரும் வாய்ப்புள்ளது.

ஏதோ 'பெல்லாரி' என்பதைப் போல், நம்மவர்கள் அவரை 'ஹில்லாரி' என்று குறிப்பிட்டு வருகின்றனர். இதைக் கேள்விப்படும், படிக்கும் அமெரிக்கவாசிகள் அடிக்கும் நக்கலுக்கு அளவில்லை. அமெரிக்க உச்சரிப்பின் படி ‘ஹிலரி க்ளிண்டன்' என்றே அவர் அழைக்கப்படுகிறார். நாமும் இப்போதே பெல்லாரியை ஸாரி, ஹில்லாரியை விட்டு விட்டு ‘ஹிலரி க்ளிண்டன்' என்று சரி செய்து கொள்ளலாமே!

English summary
Ending two years of speculation and coy denials, Hillary Rodham Clinton announced on Sunday that she would seek the presidency for a second time, immediately establishing herself as the likely 2016 Democratic nominee.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X