ஆச்சரியம்.. முஸ்லீம் நாட்டில் முதல் இந்து பைலட்.. உற்று நோக்க வைத்த பாகிஸ்தான்.. குவியும் வரவேற்பு!
பாகிஸ்தானில் முதல் இந்து பைலட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
இஸ்லாமாபாத்: இந்து மதத்தை சேர்ந்த ஒருவரை தனது விமானப்படையின் பைலட்டாக நியமித்துள்ளது பாகிஸ்தான் அரசு.. வரலாற்றிலேயே இப்படி ஒரு சம்பவம் இதற்கு முன்பு நடந்தது இல்லை என்பதால், இந்நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது!
இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளும் எப்போது சுதந்திரம் பெற்றனவோ, அப்போதே ஆரம்பித்துவிட்டன சண்டையும், சச்சரவுக்ளும், மோதல்களும்!! அது இன்னும் தீராமல் ஓயாமல் தொடர்ந்து வருகிறது.. நேரடியாக மோதி கொள்ளவில்லையே தவிர, முறைமுகமாக பயங்கரவாதிகளை தூண்டிவிட்டு அடிக்கடி சீண்டி வந்து கொண்டிருக்கிறது பாகிஸ்தான்!

இதனிடையே அங்கு வாழும் இந்துக்களை துன்புறுத்துவதாகவும் செய்திகள் கசிந்தன.. அதேபோல, மதமாற்றம் செய்து கட்டாயம் கல்யாணம் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டன.. இப்படிப்பட்ட சமயத்தில்தான் ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.
இந்து மதத்தை சேர்ந்த ஒரு இளைஞரை தனது விமான படையின் பைலட்டாக பாகிஸ்தான் நியமனம் செய்திருக்கிறது. சிந்து மாகாணத்தில் தர்பார்கர் என்ற மாவட்டம் உள்ளது.. இந்த பகுதியில் இந்துக்கள் அதிகமாக வசிக்கிறார்கள்.
இவர்களின் அடிப்படை பிரச்சனைகளும் அதிகம்.. சரியான சாப்பாடு, தண்ணீர் இவர்களுக்கு கிடைப்பதில்லை.. அப்படி பின்தங்கிய பகுதியை சேர்ந்தவர்தான் ராகுல்தேவ்.. இந்து மதத்தை சேர்ந்தவர்.. இவர்தான் அந்நாட்டு விமானப்படையில் பைலட்டாக சேர்ந்துள்ளார்.. இந்து மதத்தை சேர்ந்த ஒருவர் அங்கு பைலட் ஆவது இதுதான் முதல் முறை.
ராகுலின் இந்த நியமனம் குறித்து பாகிஸ்தானிய ஹிந்து பஞ்சாயத்து செயலாளர் ரவி தவானி சொல்லும்போது, "இது எங்களுக்கு ரொம்ப சந்தோஷத்தை தருகிறது.. இந்து மதத்தை சேர்ந்தவர்கள் நிறைய பேர் ராணுவம், மருத்துவம் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் வேலை பார்த்து வருகிறார்கள்.. பாகிஸ்தான் அரசாங்கம் இது போன்று சிறுபான்மையினர் மீது கவனம் செலுத்த தொடங்கினால் அடுத்து வரும் நாட்களில், பல ராகுல்தேவ்கள் நாட்டுக்காக சேவை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்" என்றார்.
உண்மைதான்.. பல ராகுல்தேவ்கள் இப்படி உருவாகினால் வரலாற்றின் பிழைகளும் அடியோடு மாற துவங்கும்.. சகிப்புத்தன்மைகள் பெருக பெருக பிளவுகளும், பூசல்களும் மொத்தமாக தகர்ந்து விழ ஆரம்பிக்கும்!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications