அடடா.. ஒரே நேரத்தில் கர்ப்பமான 16 ஐசியூ நர்ஸ்கள்.. திண்டாட்டத்தில் மருத்துவமனை!

அரிசோனா: அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் 16 செவிலியர்களும் கர்ப்பமாக உள்ளனர். இதனால் மருத்துவமனையே இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் உள்ளது அரிசோனா மாகாணம். இங்குள்ள மேசா என்ற இடத்தில் பேனர் டெசர்ட் மெடிக்கல் சென்டர் என்ற மருத்துவமனை உள்ளது.
இங்கு 3 விதமான தீவிர சிகிச்சை பிரிவுகள் காணப்படுகின்றன. இதில் 16 செவிலியிர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் அனைவரும் கர்ப்பமாக உள்ளனர்.

கேன்டீன்
இதுகுறித்து நர்ஸுகள் கூறுகையில் ஆரம்பத்தில் எங்களது வயிறுகள் பெரிதாவதை நோயாளிகளும் கவனித்தனர். இதைத் தொடர்ந்து நாங்கள் அனைவரும் கேன்டீன் செல்லும் போது ஒன்றாகவே செல்வோம்.

ஆலிவ் பழங்கள்
சாலட்களை விரும்பி சாப்பிடுவோம். இன்னொரு நாட்கள் ஊறுகாய் மற்றும் ஆலிவ் பழங்களை சுவைப்போம். ஒரே நேரத்தில் கர்ப்பமாவதை நாங்கள் யாரும் திட்டம் போட்டு செய்யவில்லை. அதுவாகவே நடந்துவிட்டது என்றனர்.

12 வார விடுப்பு
இந்த 16 நர்ஸுகளுக்கும் செப்டம்பர் முதல் பிப்ரவரி மாதத்தில் குழந்தை பிறக்கும் . இதனால் அவர்கள் 12 வார மகப்பேறு விடுப்பில் செல்வர். மருத்துவமனையில் பெரும் திண்டாட்டம் ஏற்படும்.

ஆடை பரிசு
இதனால் மருத்துவமனையில் நர்ஸுகளின் பற்றாக்குறை அதிகரிக்கும். தற்போதே மருத்துவமனை ஆட்களை பிடிக்கும் உத்தியில் இறங்கியுள்ளது. இதனிடையே 16 நர்ஸுகளுக்கு பிறக்கும் குழந்தைக்கான சிறிய அளவிலான ஆடை மருத்துவமனை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

வளைகாப்பு
அதில் எனது தாய் பேனர் நர்ஸ் என்று பொறிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு விரைவில் வளைகாப்பும் நடக்க போகிறதாம். இவர்கள் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து நோயாளிகளும் அசந்து போகின்றனராம்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!