For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரேசிலில் வேகமாக குறையும் கொரோனா.. அதுவும் ஜெயிர் போல்சனேரோ நாட்டில் இது எப்படி சாத்தியம்? செம!

Google Oneindia Tamil News

பிரேசிலியா: கொரோனா பாதித்த நாடுகளில் 2ஆவது இடத்தில் இருந்த பிரேசில், இந்தியாவை முன்னுக்கு தள்ளிவிட்டு 3 ஆவது இடத்திற்கு சென்றது எப்படி என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டது. அதுவும் அலட்சியமாக இருந்த ஜெயிர் போல்சனேரோவின் நாட்டில் எப்படி கொரோனா குறைந்தது என்பது அதிசயமாக உள்ளது.

188 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.74 கோடியாகும். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 8.96 லட்சமாகும்.

கொரோனாவிலிருந்து இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 1.9 கோடியாகும். அமெரிக்காவில் 64 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உலகில் இந்த நாடுதான் முதல் இடத்தில் உள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து...விரைவில் கிடைக்க...கோவாக்ஸில் சேருகிறதா இந்தியா!! கொரோனா தடுப்பு மருந்து...விரைவில் கிடைக்க...கோவாக்ஸில் சேருகிறதா இந்தியா!!

ரஷ்யா

ரஷ்யா

இதற்கடுத்த இடத்தில் பிரேசில் இருந்தது. 3ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. ஆனால் தற்போது நிலையே வேறு 2ஆவது இடத்திற்கு ரஷ்யாவை பின்னுக்கு தள்ளிவிட்ட பிரேசில் வந்த நிலையில் தற்போது பிரேசிலை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளில் 2ஆவது இடத்திற்கு வந்துள்ளது.

பிரேசில்

பிரேசில்

பிரேசிலில் 41 லட்சம் பேரும் இந்தியாவில் 42 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு பெரும் காரணமாக 24 மணி நேரத்தில் இந்தியாவில் பாதித்த கொரோனா கேஸ்களின் எண்ணிக்கையும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. 24 மணி நேரத்தில் பிரேசிலில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கேஸ்கள் வரை வந்த நிலையில் இந்தியாவிலோ கடந்த சில நாட்களாக ஒரு நாளைக்கு 60 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரை கேஸ்கள் வந்தன.

அதிபர் ஜெயிர் போல்சனேரோ

அதிபர் ஜெயிர் போல்சனேரோ

கொரோனா பாதித்த நாள் முதல் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோவின் தவறான நிர்வாகத் திறமையால் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததாக தினமும் தலைப்புச் செய்திகளில் வந்தது. அத்துடன் பிரேசிலில் முதல் கொரோனா நோயாளி மார்ச் மத்தியில் கண்டுபிடிக்கப்பட்டார். அதாவது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 2 வாரங்கள் கழித்தே இங்கு முதல் கேஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

லாக்டவுன்

லாக்டவுன்

அத்துடன் உலக நாடுகள் கொரோனா பரவலைத் தடுக்க லாக்டவுன் அமல்படுத்திய நாடுகளில் அவற்றை அலட்சியம் செய்த சில நாடுகளில் பிரேசிலும் ஒன்று. இந்தியாவில் மார்ச் மாதம் முதல் இன்று வரை ஊரடங்கு உத்தரவு அமலில்தான் உள்ளது. பொது இடங்களில் கூடிய பிரேசில் அதிபர் மாஸ்க் அணியாமல் வலம் வந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு இது ஒரு சின்ன வைரஸ் என்னை என்ன செய்யும் என கேட்டார். அப்படிப்பட்ட அவருக்கு கொரோனா உறுதியானது தனிக்கதை.

கொள்கை முடிவு

கொள்கை முடிவு

இந்திய மக்கள்தொகையில் கொரோனா வைரஸ் பரவிய வேகத்தை காட்டிலும் பிரேசிலில் பரவியது. இத்தனை குளறுபடிகளுக்கு மத்தியில் இந்தியாவை பிரேசில் பின்னுக்கு தள்ளியது எப்படி என்பது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பற்றி கவலைப்படாமல் சுகாதார சேவையை அணுக உதவியதற்கு பிரேசில் ஏற்கெனவே எடுத்த ஒரு கொள்கை முடிவுதான் காரணமாக அமைந்தது.

குறைந்த கொரோனா கேஸ்கள்

குறைந்த கொரோனா கேஸ்கள்

அந்த திட்டம்தான் இந்த அளவிற்கு கொரோனா கேஸ்கள் குறைய காரணமாக சொல்லப்படுகிறது. அதாவது வருமான பரிமாற்ற திட்டம் ஆகும். பிரேசில் மக்கள்தொகையில் 30 சதவீதம் மக்கள் ஒரு மாதத்திற்கு 110 டாலர் பெற்றனர். இந்த திட்டம்தான் மக்களை வறுமையில் செல்லாமல் தடுத்தது என்கிறார்கள். மாதந்தோறும் அரசு சார்பில் உதவித்தொகை கிடைப்பதால் அவர்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை கொள்வார்களே தவிர வாழ்வாதாரத்தில் அல்ல!

English summary
Here are the reasons for the reasons behind how Brazil flatten the covid curve than India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X